November 01, 2009

உன்னைப் போல் ஒருவன்”உன்னைப் போல் ஒருவனை “ இரண்டு மாதம் கழித்து போஸ்ட் மார்ட்டம் செய்யும் பதிவல்ல இது..

கிட்டத்தட்ட நான்கு மாதம் கழித்து எழுதுகிறேன்...

ஒன்னுமே தெரியாம பதிவுலகுல வந்து.. கொஞ்சமே கொஞ்சமா சேர்த்தாலும் கெத்தா சில நண்பர்கள் சேர்த்து.. யாருமே படிக்கமாட்றாங்களேன்னு வருந்தி. சூர்யா கதைய எழுதி ரொம்ப கொஞ்சமா (என்ன தமிழ்..)சில நண்பர்கள் பிடிச்சு.. பதிவுலக மார்க்கெட்டிங் கற்றுக்கொண்டு.. யப்பா யப்பா... நெனச்சா ஒரு சினிமா பாடல் போன்ற உணர்வு... :-)

இஞ்ஞினியரிங் காலேஜ் மாணவனாக குப்பை கொட்டிக் கொண்டிருந்த நான்.. படித்து முடித்தது இந்த மே--யில்தான்... 3 மாசம்.. தெனற தெனற வேல தேடி.. கடைசில.. வேல கெடச்சது .. 3i-info tech என்னும் கம்பெனியில... மவனே software எழுதி கலக்க போறோம்டான்னு பாத்தா... என்னுடைய client office "MADRAS HIGH COURT" (சென்னை உயர் நீதி மன்றம்...) (வேலைய பத்தி .. இன்டர்வியூ போன கதைகள அப்புறம் பாப்போம்... எழுதலாமா வேணாமான்னு சொல்லுங்க..)

இப்போ ஆண்டவனோட அருளால வேலைக்கி போய்கிட்டு இருக்கேங்க.. ரெண்டரை மாசமா...

வேல தேடும் போது.. நம்ம தமிழ் நெஞ்சம் அண்ணன்கிட்ட.. சக்கர அண்ணங்கிட்டலாம் சொல்லி வெச்சிருந்தேன்...வேல தேடும் போது வேற எதும் கண்ணுல தெரியல.. காலேஜ் பையனா எத பத்தி கவலையும் இல்லாதப்ப இருந்த கற்பனை ஊற்று.. இந்தக் காலகட்டத்துல வத்திப்போச்சு.. என்னால புதுசா பதிவெல்லாம் எழுத முடியல..

வேலை கெடச்ச அப்புறமும்.. தமிழ் பதிவுலகம் என்னை சில சமயம் தேடும்.. என்னை மெயிலில் தொடர்பு கொண்ட அன்பர்களுக்கு நன்றி.. கடையாக சூர்யா கதைக்கு பின்னூட்டம் போட்ட நண்பருக்கும் இன்ன பிற உள்ளங்களுக்கும் நன்றி...

மாணவனாக இருந்த போது இருந்த வெறி இப்ப இல்ல.. அட என்னப்பா.. 5 மாசத்துக்குள்ள ரொம்ப ஸீன் போட்றன்னு கேட்டா நீங்க பெருசு... இந்த transition பத்தி நம்ம டாக்டர் சுரேஷ் தல விரிவா ஒரு பதிவு எனக்கும் டெடிக்கேட் பண்ணி போடுங்க...

எழுதனும்னு உணர்வு ஒரு மாசமா தோணுனாலும்.. என்ன எழுதறுதுன்னு தோணல... விமர்சனம் எழுதலாம்னு நெனச்சா. .. அவனவன் படம் ரிலிஸாகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடியே கலக்குறாய்ங்க.. சரி நடக்கட்டும்ன்னு வெயிட் பண்ணேன்...

பதிவுலகிலும் நிறைய மாற்றம்.. தொழில்நுட்ப ரீதியாக நிறய சந்தேகங்களை இந்த புது உலகம் எனக்கு தீர்த்தது.. ஒரு படம் ரிலீஸானால் அத பாக்குறதா வேணாமான்னு முடிவு பண்ண உதவியது..

நாமெல்லாம் ஏண்டா எழுதறோம்னு தோணவெச்ச பதிவுகள் நிறைய... நான் பின்னூட்டம் இடாம என்னால முடிஞ்ச அளவு எல்லாத்தையும் படித்துக் கொண்டு தான் இருந்தேன்...

அடுத்து ஏதாவது தோணும் போது எழுதுவோம்... (இதுவரை நடந்த சில முக்கியமான நிகழ்வுகளாஇ என் சக பதிவர்கள் யராவது பின்னூட்டமோ அல்லது பதிவோ போட்டு சொல்லவும்...)

என் ப்ளாக்கின் caption மாதிரி.. “யாருமே இல்லாத யாருக்கு நான் இப்ப டீ ஆத்துறேன்???

20 comments:

பிரியமுடன்...வசந்த் said...

கடைக்குட்டி எப்படியிருக்கீங்க?

நலமா? முதல்ல புதுவேலைய தக்க வச்ச்சுக்கங்க அப்புறமா பதிவு பதிவுலகம் டெய்லி ஒண்ணுன்னு இல்லாட்டியும் மாசம் ஒண்ணாவது எழுதுங்க..

புது வேலை கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

எல்லாரும் அப்படித்தான்.., வேலைப்பளு அதிகரித்தால் வலைப்பணி குறையத்தான் செய்யும்..,


மீள்வருகைக்கும், இடுகைக்கும் வாழ்த்துக்கள்

kggouthaman said...

கடைக்குட்டி - உங்க
நடை சுட்டி.
நாளும் பாருங்க எட்டி.

Thamizhmaangani said...

வேலை கிடைத்ததில்...மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கும் டீ ஆத்த வேண்டாம். பாலை வேஸ்ட் பண்ணாம தயிர் போட்டு தயிர் கடை ஆரம்பிக்க வேண்டியது! எப்ப்ப்ப்ப்ப்ப்பூடி!!?

சித்து said...

வாழ்த்துக்கள் கடைக்குட்டி, வந்துட்டான்யா வந்துட்டான்.

சித்து said...
This comment has been removed by the author.
Subankan said...

வெல்கம் பேக் கடைக்குட்டி

KISHORE said...

என்ன எழுதுறது என்ன எழுதுறதுன்னு கேட்டு எல்லாத்தையும் எழுதிடிங்க..
welcome back..

ஜெட்லி said...

வாய்யா வா....

அக்னி பார்வை said...

வாங்க வாங்க‌

ஊர்சுற்றி said...

//நாமெல்லாம் ஏண்டா எழுதறோம்னு தோணவெச்ச பதிவுகள் நிறைய//அதேதாங்க. நானும் பலமுறை இப்படி நினைத்திருக்கிறேன்!

மறுவருகைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

கடைக்குட்டி said...

பிரியமுடன்...வசந்த் said...
//
கடைக்குட்டி எப்படியிருக்கீங்க?

நலமா? முதல்ல புதுவேலைய தக்க வச்ச்சுக்கங்க அப்புறமா பதிவு பதிவுலகம் டெய்லி ஒண்ணுன்னு இல்லாட்டியும் மாசம் ஒண்ணாவது எழுதுங்க..

புது வேலை கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்//

கண்டிப்பாக அண்ணா.. அதனாலதான் இந்தப் பக்கம் வரல.. இப்போ ஓரளவிற்க்கு பரவாயில்ல. அதான் திருப்பியும்..

அன்பிற்க்கு நன்றி.. :-)

கடைக்குட்டி said...

நன்றி டாக்டரே.. :-)

கடைக்குட்டி said...

kggouthaman said...
கடைக்குட்டி - உங்க
நடை சுட்டி.
நாளும் பாருங்க எட்டி//

கண்டிப்பாக... :-)

கடைக்குட்டி said...

Thamizhmaangani said...
வேலை கிடைத்ததில்...மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கும் டீ ஆத்த வேண்டாம். பாலை வேஸ்ட் பண்ணாம தயிர் போட்டு தயிர் கடை ஆரம்பிக்க வேண்டியது! எப்ப்ப்ப்ப்ப்ப்பூடி!//

இப்பிடி தெறந்த புத்தகமா இருக்கீயளே... :-)

கடைக்குட்டி said...

நன்றி சித்து.. :-)

கடைக்குட்டி said...

தாங்க்யூ சுபாங்கண்.. :-)

(அட நாங்களும் இங்லீசுல பேசுவோமப்பா.. :-)

கடைக்குட்டி said...

KISHORE said...
என்ன எழுதுறது என்ன எழுதுறதுன்னு கேட்டு எல்லாத்தையும் எழுதிடிங்க..
welcome back..//

ஹா ஹா.. நன்றி.. :-)

கடைக்குட்டி said...

ஜெட்லி said...
வாய்யா வா....

*********************
// அக்னி பார்வை said...
வாங்க வாங்க‌
//

************

வாழ்த்திற்க்கு நன்றி.. அதான் வந்தாச்சுல்ல... :-)

கடைக்குட்டி said...

மறுவருகைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
//
கண்டிப்பாக ஊர்சுற்றி... :-)