November 12, 2009

எஞ்ஞினியா வா! -- 2

முதல் பகுதி படிக்க இங்கு க்ளிக்கவும்...

எம்.ஜிஆர். அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த எஞ்ஞினியரிங் மேளா ரொம்ப ஜோராக நடக்க ஆரம்பித்தது 90 களின் மத்தியில்.. (இப்பவும்தான்..)

அதுக்கு முன்னாடி கம்யூட்டர் வந்த காலம் குறித்து கொஞ்சம் பார்ப்போம்...

நம்ம ஊரில் கணினி கால் பதித்த காலம் :

சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒருத்தர சந்திக்க நேர்ந்தது.. (தெரியாதவர்களுக்கு சுய தம்பட்டம் -- நான் இங்கதன் வேலை பார்க்கிறேன்) 50 வயதைக் கடந்தவர் என்பது அவரைப் பார்த்ததும் தெரிந்தது.. ம்னுஷன் மொக்க போட போறாருடான்னு நெனச்ச போதே அவர் ஆ”ரம்”பிச்சுட்டாரு...FOX space நல்ல மென் பொருள் அது இதுன்னு.. தெரியாத பழைய மென்பொருள்களின் பேரா சொல்லிக்கிட்டு சும்மா ஸீன் போட்டாரு.. சரின்னு நான் சும்மா சார் அதல்லாம் .net ல நீங்க சொன்ன எல்லாமே இருக்கு ஸார்னு சொன்னேன்... மனுஷன் உடனே தொழில்நுட்ப ரீதியா.net ல ஒரு டவுட்டு கேட்டாரு.. மிரண்டு போய்ட்டேன்.. நேத்து காலெஜ் முடிச்ச ஒருத்தன் வந்துதான் பதில் சொல்லனும்.. சர்வர்ஸ் பத்தி அவருடைய பார்வை.. அவர் தெரிந்து வைத்திருக்கும் வேகம்... அவ்ளோ இளமையா இருந்தது அவரோட கேள்விகள்..

“தலைவா நீங்க யாரு..? பழைய கதையும் சொல்றீங்க.. இன்னைக்கு நடக்குறத பத்தியும் சொல்றீங்க.. எப்பிடி??” நான் கேட்டேன்..

அவர் சிரித்துக் கொண்டே.. “தம்பி நான் 1982 ல வேலக்கி சேந்து 5 வருஷம் ஆயிடுச்சுபா.. அந்த நேரத்துல கம்யூட்டர்னு ஒன்னு வந்துருக்குன்னு சொன்னாங்க.. அதல ஒரு டிப்ளோமா கோர்ஸ் இருக்குன்னு சொன்னாங்க. அப்ப நாங்க 12 பேர் தான் படிக்க சேந்தோம்.. (அட என்னங்க வர்ம கலை மாதிரி சொல்றீங்க..-- இது நான்) அப்போ புக் வரவே பல மாசமச்சு.. அந்த வாத்தியாருக்கும் ஒன்னும் தெரியல.. நாங்களே புக்க படிச்சு படிச்சு கத்துக்கிட்டோம்.. எக்ஸாம் எழுதி பாஸும் ஆயிட்டோம்.. “

“அதுக்கு அப்புறம் ஜாலியா வேலையா ஸார் ??“ -- நான்

“அட போப்பா.. ஏண்டா படிச்சோம்னு ஆயிடுச்சு.. கம்யூட்டர் ஒரு ரூம் ஃபுல்லா இருக்கும். செம சூடாயிடும்பா..”

“கதை உடாதீங்க..”

“நெசமாப்பா.. நான் பொய் சொல்லி என்ன ஆக போகுது சொல்லு.. பேஸிக் ப்ரோகிராம் பண்ணுவோம்.. இன்னைக்கு நீங்க யூஸ் பண்ற கம்யூட்டர் மானிட்டர் இங்க புழக்கத்துக்கு வந்ததெல்லாம் 90 களுக்கு அப்புறம்தான்.. ...............”

(இப்பிடி அவர் சொல்லிய கதைகள் ஏராளாம்.. அத பத்தி தனியாவே சொல்றேன்.. )

இதுல கவனிக்க வேண்டியது ரெண்டு விஷயம்தான்..

1* கம்யூட்டர்ன்னு ஒரு பொருள் அறிமுகமாகும் போது என்ன கெடுபிடி பாத்தீங்களா?? இது அந்த அளவுலேவே இருந்திருந்தா அவ்ளோதான்.. இன்னைக்கு நாமெல்லாம் கம்யூட்டர நோண்டுறது எங்க???

திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த கோட்டையை என்ன நோக்கத்தில் உடைத்தாரோ.. ஆனால் அதன் உருப்படியான மிக நல்ல உபயோகம் கம்யூட்டர் எல்லாரையும் போய் சேந்ததுதான்..

2* கம்யூட்டர் துறையில் நீங்கள் வளர வேண்டும் என நினைத்தால்.. உங்கள் அண்ணான்மார்களைவிட,, அக்காளைவிட.. பக்கத்து வீட்டு US அங்கிள விட 10 மடங்கு உழைப்பு போடணும்...

”கணடதையும் கற்று பண்டிதன் ஆகலாம்ன்னு சொல்வாங்க...” அது இந்தத் துறையில் 100% உண்மை.. அந்த தாத்தா -- ஒரு பண்டிதன்.


இனி படிக்கப் போறவங்களுக்கும் அதான் சொல்ப் போறேன்.. “ஆர்வம்..” அத விட்றாதீங்க.. இன்னும் தேடுங்க..
கம்யூட்டர் வந்த காலத்துல, அய்யோ அத படிக்க மாட்டோம்பான்னு சொல்லி வாழ்க்கையின் பொன்வாசலை தவரவிட்டவர்கள் அதிகம்.. இப்போ கூட நீதி துறையில் முழுவது கணினி மயமாவதை மேல் மட்டத்திலே விரும்பவில்லை என்பார்கள்.. (அய்யோ அரசாங்க ரகசியத்த வெளில சொல்லிட்டேனே..)
இந்தக் காலத்துல ஏண்டா சேர்றோம்ன்னு தெரியாமயே சேந்து நொந்து போறவங்க அதிகம்...

காலத்தின் கோலம்...

அதான் எறங்குற கிணறு எவ்ளோ ஆழம்.. அதுல எப்டியெல்லாம் இருக்கலாம்ன்னு நானும் எறங்கிகிட்டே சொல்றேன்.. சேந்து போவோம்.. (அட யாருப்பா கைப்புள்ள மாதிரி படிக்கிறது)

அடுத்த பதிவுல.. மத்திய காலத்தையும்.. இனிமே சேர்றவங்களுக்கு உருப்படியான யோசனைகளும் தொடரும் நீங்கள் விரும்பினால் (விரும்பாட்டியும் கூட.. ஹி ஹி..)

10 comments:

சுடுதண்ணி said...

நல்ல தொடர். சுவாரஸ்யமா போகுது.. தொடருங்க..தொடருங்க :)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

intresting thala

ஜெட்லி said...

தெரியாத தகவல்கள்.....
தொடரட்டும் உன் பணி.

கோர்ட்ல வேலையா? பார்த்துப்பா
அப்போ அப்போ தடியடி நடத்துவாங்க...
சூதானமா இருந்துக்க...

உங்கள் தோழி கிருத்திகா said...

”கணடதையும் கற்று பண்டிதன் ஆகலாம்ன்னு சொல்வாங்க...” அது இந்தத் துறையில் 100% உண்மை.. அந்த தாத்தா -- ஒரு பண்டிதன்./////////////////

வேலை கிடைக்குமா பண்டிதன் ஆனா???

சர்வர்ஸ் பத்தி அவருடைய பார்வை.. அவர் தெரிந்து வைத்திருக்கும் வேகம்... அவ்ளோ இளமையா இருந்தது அவரோட கேள்விகள்////
இதுக்குத்தான் நாம பீட்டரை அடக்கி விட்டுருக்கனும்.... :)


நல்ல பதிவு....அடுத்ததுக்காக வெய்டிங்கி.....(கைப்புள்ளை போலபடிக்கவும் :) )

தங்களுடய ப்லாகின் பெயர்க்காரணம் அறியலாமோ???

TamilNenjam said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

கடைக்குட்டி said...

தொடர்ந்துருவோம் சுடுதண்ணி... :-)

அன்பிற்கு நன்றி

கடைக்குட்டி said...

ஓ.கே தல.. (கிருஷ்னா...)

கடைக்குட்டி said...

நீங்க இருக்கம் போது என்ன கவல ஜெட்லி ?? :-)

கடைக்குட்டி said...

உங்கள் தோழி கிருத்திகா..

வருகைக்கு நன்றி..

என் பெயர் காரணம் கேட்டிங்கள்ள??? சரி லிங்க் த்ர்றேன் படிச்சுட்டு சொல்லுங்க :-)

கடைக்குட்டி said...

நன்றி தமிழ் நெஞ்சம். :-)