November 03, 2009

எஞ்ஞினியா வா!!!!


இஞ்ஞினியர்களின் வாழ்க்கை வரலாறு..? மற்றும் நல்ல இஞ்ஞினியராக என்ன செய்வது..??

இஞ்ஞினியர்களின் வாழ்க்கை வரலாறு என்று ஒரே ஒரு இன்ஞி. பற்றி எழுதப்போவதல்ல.. எல்லாரும் கல்யாணம் பண்ணி.. ரெசஷன்ல வேலைக்கு போயின்னு மொக்கையும் இல்ல... ”இஞ்ஞினியர்கள்” -- இந்த துறைக்கு ஏன் இத்தனை மவுசு..?? எப்பிடி வந்தது இந்த பவுசு..?? ஆழத்தைத் தேடி..

தமிழ்நாட்டின் ஏதோ ஒர் தெருவுல போய் நின்னு... “யாராவது எஞ்ஞினியர் இருந்தா வாங்க”ன்னு கத்தி பாருங்க.. கண்டிப்பா காக்கா கூட்டமே தோத்துப் போற அளவுக்கு இந்தக் கூட்டம் வந்து மொய்க்கும்... சாரை சாரையா வந்து நானுந்தான் நானுந்தான்னு நிக்கும்..

உங்க வீட்டு புள்ளையும் படிக்கும்..ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி உங்க கண்ணு முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்து புள்ளைகளும் படிக்கும்...

இவ்வளவு ஏன்.?? நீங்கள் இந்தியாவில் வசிக்கும் தமிழர் என்றால்.. உங்கள் ரத்த பந்தமோ.. நெருங்கிய சொந்தமோ.. இல்லாவிட்டால்.. ஏதாவது தெரிந்த வீட்டு பிள்ளையோ.. கண்டிப்பாக இன்ஞினியரிங் படித்துக் கொண்டிருக்கும்..

இல்லையென்றால்.. உங்களால் எந்த ”இஞ்ஞினிய” முகத்தையும் மேற்கூறிய எந்த வரிகளுடனும் தொடர்பு படுத்த முடியவில்லையென்றால்.. நீங்கள் இந்த இடுகையை படிக்காமல் இருப்பது நலம்...

சரி நாம ஃப்லோவ தொடருவோம்...

1982 க்கு முன்னாடி இஞ்ஞினியர் துறையும் டாக்டர் துறை போலத்தான் இருந்ததாம்.. ஏதோ “ரொம்ப” படிச்ச புள்ளைங்க அவங்களுக்குள்ள சண்ட போட்டு இருக்குற 500--1000 சீட்ட புடிச்சுக்குங்க... அவ்ளோதான்..

ரொம்ப கெத்தா இருந்த துறையாம்.. அதுக்கப்புறம் மவராசன் “எம்.ஜி.ஆர்.” தனியார் கல்லுரிகளுக்கு அனுமதி தந்தாராம்.. (இப்போ தெரியுதா ஏன் தலைவர் படம்ன்னு...) அதுக்கும் பெரிய அளவுள டெல்லில லாபி நடந்ததுன்னு நான் இண்டர்வியூ போனப்ப ஒரு மவராசன் சொன்னப்ல... ஆச்சா.. அதுக்கப்புறம் புற்றீசல் போல காலேஜ் ஆரம்பிக்கப் படவில்லை..

ஆனா இது ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாக தெரிந்ததும்.. சும்மா எல்லா பண முதலை திமிங்கலம் சுறா எல்லாம் இறங்கிடுச்சு... இப்போ இருக்குற நெலமை உடனே வந்துடல.. நாங்களாம் நாய் பாடுபட்டு வேலை தேடுரதுக்கு .. நம்ம அண்ணனங்கெல்லாம் அமெரிக்கால சம்பாதிக்க.. அமெரிக்கால இருந்து ஒருத்தர இந்தியா தொரத்துரதுக்கும்.. இங்க அம்ஜிகரையில ஏதோ ஒரு கம்பெனி காசு புடுங்கி ஏமாத்துறாதுக்கும் தசாவதாரம் கேயாஸ் தியரி மாதிரி ஒரு பட்டம் பூச்சியின் படபடப்பின் தொடர்பு இருக்கு (கன்சல்டன்ஸி என்னும் போலிகள பத்தி வேற சொல்லனும்ங்க.. ஹையோ வேல ஜாஸ்தி ஆகுதே...)

ரொம்ப லென்த்தா போகுதுல்ல.. சரி தொடராக்கிடுவோம்..

“எஞ்ஞினியா வா!!!” பேர் எப்பிடி இருக்கு ?? எத பத்தி எழுத போறேன்னு தெரியுதுல்ல.. நீங்களே ஒரு நல்ல தலைப்பா பின்னூட்டுங்க..

(***இது நான் செவிவழியாக கேட்ட தகவல்களை அச்சேற்றும் முயற்சி.. தவறிருந்தால்.. நான் ஏதையாவது சொல்லாமல் விட்டிருந்தால் நீங்க சொல்லுங்க ..***)

20 comments:

கடைக்குட்டி said...

என்னுடைய “ஷாக் கதைகள்ள” இருந்து ஏதாவது ஒன்ன “நச்2009” போட்டிக்கு அனுப்பலாம்ன்னு இருக்கேன்..

எந்த கதை நல்லா இருக்கு .. இல்லாட்டி புதுசா எழுதலாமான்னு சொல்லுங்க..

(மேன் டு மேன் ஹெல்ப்.. வுமன் கூட் செய்யலாம்ங்க.. :-)

ப்ரியமுடன் வசந்த் said...

வரும் 2020 ல இந்தியா பேச்சலர்ஸ் ஆஃப் இஞ்சினியர் கண்ட்ரி ஆனாலும் ஆகலாம் மக்கள் தொகையில் பாதிப்பேர் எஞ்சினியர் ஆகியிருக்கலாம்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எதிர்பார்க்கிறோம்

kishore said...

தொடருங்கள் ..

Raju said...

அடுத்த வருஷம் ஏதாவது வார இதழுடன் ஒரு B.E.சர்ட்டிபிகேட் இலவசமாகவும் கிடைக்கலாம். ஆச்சர்யப் படுவதற்கில்லை.

ISR Selvakumar said...

எம்.ஜி.ஆர் பற்றி நல்லது மட்டும் தான் எழுதுவேன் அடம்பிடிப்போர் மத்தியில் அவரைப் பற்றி (மிக மிக லேசாக) குற்றம் சொல்லுவது போல எழுதியிருக்கிறீர்கள்.

இதற்க்காகவே நான் உங்களை பாராட்டுகின்றேன்.

ஜெட்லி... said...

//மேன் டு மேன் ஹெல்ப்.. வுமன் கூட் செய்யலாம்ங்க.. //

உனக்கு அதிகம் தான்யா....குசும்பு தான்..

Anonymous said...

நாங் கூட இப்படி தாங்க வேல வேலன்னு நாயா அலயறேன்.

கடைக்குட்டி said...

பிரியமுடன்...வசந்த் said...
//
வரும் 2020 ல இந்தியா பேச்சலர்ஸ் ஆஃப் இஞ்சினியர் கண்ட்ரி ஆனாலும் ஆகலாம் மக்கள் தொகையில் பாதிப்பேர் எஞ்சினியர் ஆகியிருக்கலாம்..//


கண்டிப்பாக ஒரு சமுதாய பார்வையுடதான் நான் இதை எழுதுகிறேன்...

கடைக்குட்டி said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
எதிர்பார்க்கிறோம்
//

உங்கள மாதிரி ரெண்டு மூனு பேரு இருக்குறதாலதானே நம்ம வண்டி ஓடுது.. :-)

என்ன தல நான் சொல்றது..

கடைக்குட்டி said...

KISHORE said...
தொடருங்கள் //

கண்டிப்பாக :-)

கடைக்குட்டி said...

♠ ராஜு ♠ said...
அடுத்த வருஷம் ஏதாவது வார இதழுடன் ஒரு B.E.சர்ட்டிபிகேட் இலவசமாகவும் கிடைக்கலாம். ஆச்சர்யப் படுவதற்கில்லை.
//


நிலமையின் தீவிரத்தை உணர்த்தும் வாசகம் இது..

முதலில் சிரிப்பு வந்தாலும்...

கடைக்குட்டி said...

r.selvakkumar said...
எம்.ஜி.ஆர் பற்றி நல்லது மட்டும் தான் எழுதுவேன் அடம்பிடிப்போர் மத்தியில் அவரைப் பற்றி (மிக மிக லேசாக) குற்றம் சொல்லுவது போல எழுதியிருக்கிறீர்கள்.

இதற்க்காகவே நான் உங்களை பாராட்டுகின்றேன்.
//

உங்கள் பாராட்டிற்க்கு நன்றி..

அவர் போன்றா தலைவர்களை திட்டவோ பாராட்டவோ பக்குவம் பத்தாது.. வரலாறும் தெரியாது..

நான் சொன்னது எனக்கு தெரிந்த உண்மை.. அதற்க்கு மேல் உங்கள் புரிதல்.. :-)

கடைக்குட்டி said...

ஜெட்லி said...
//மேன் டு மேன் ஹெல்ப்.. வுமன் கூட் செய்யலாம்ங்க.. //

உனக்கு அதிகம் தான்யா....குசும்பு தான்..
//

உங்களுக்கு மட்டும் என்ன கொஞ்சமா?? நெறயதான்,,, குசும்பு..

கடைக்குட்டி said...

Anonymous said...
நாங் கூட இப்படி தாங்க வேல வேலன்னு நாயா அலயறேன்.

//

நல்லதே நடக்கும் .. பாப்போம். :-)

வெற்றி said...

நண்பா இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கிறேன்....ரொம்ப பயமுறுத்துற மாதிரி தொடரை கொண்டு போய்டாதீங்க......

ஊர்சுற்றி said...

//தமிழ்நாட்டின் ஏதோ ஒர் தெருவுல போய் நின்னு... “யாராவது எஞ்ஞினியர் இருந்தா வாங்க”ன்னு கத்தி பாருங்க.. கண்டிப்பா காக்கா கூட்டமே தோத்துப் போற அளவுக்கு இந்தக் கூட்டம் வந்து மொய்க்கும்... சாரை சாரையா வந்து நானுந்தான் நானுந்தான்னு நிக்கும்..//

மிகவும் உண்மை!

உங்கள் தோழி கிருத்திகா said...

யாராவது எஞ்ஞினியர் இருந்தா வாங்க”ன்னு கத்தி பாருங்க.. கண்டிப்பா காக்கா கூட்டமே தோத்துப் போற அளவுக்கு இந்தக் கூட்டம் வந்து மொய்க்கும்... சாரை சாரையா வந்து நானுந்தான் நானுந்தான்னு நிக்கும்////////
naanumthanga...velai kedachathu...poganum inum konja naal la....nalla muyarchi..adutha pathivukku uthavi thevaina solunga...yena naama same BLOOD :)

கடைக்குட்டி said...

நெஞ்சின் அடியில்.... said...
நண்பா இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கிறேன்....ரொம்ப பயமுறுத்துற மாதிரி தொடரை கொண்டு போய்டாதீங்க....//

எல்லாருக்கும் தெரிஞ்ச உண்மையத்தான் சொல்லப்போறேன்... இது மூலமா நீங்க தயாராயிடலாம்.. :-) நல்லா வேலைக்கு

கடைக்குட்டி said...

ஹா ஹா. கண்டிப்பாக கிருத்திகா.. :-)

புது வேலைக்கு வாழ்த்துக்கள் :-)