தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு ,எல்லாரும் வந்து சேந்துட்டோம்....செங்கல்பட்டும் போய் சேந்துட்டோம்.... ஸ்டேஷன்ல இருந்து வெளிய பொகும் போது என் நாக்குல ‘நாக்க மூக்கா’ ரேஞ்க்கு ஆடுச்சு சனியன்....
“டேய் ! மாப்ள ஆட்டோ ல போலாம்டா இங்க இருந்து அந்த காலேஜ்க்கு....”
“எவ்ளோ கேப்பாங்களோ!! வேணா மச்சி.. ஒழுங்கா பஸ்லேயே போய்டலாம்..” - என் நண்பன்
“ஏய்.. சும்மா கேட்டுப் பாப்போம்டா...”
“அண்ணா _ _ _ _ _ _ காலேஜ் போகனும்னா.. எவ்ளோனா??”
“காலேஜாபா??முப்பது ரூவா ஆவும்பா..”
எங்களுக்கு அளவில்லாத சந்தோஷம்.நாலு பேரு.. முப்பது ரூவாதான்... இருந்தாலும் சும்மா இருக்குமா நம்ம வாய்...
“என்னண்ணா?? நேத்துதான் இதே வழியா போனோம்.. இருபது ரூபாய்க்கே போய்ட்டோம்னா....”
”காலைல மொத போனிபா... இருபத்தி அஞ்சு ரூவா குடுபா .. போலாம்,,,”
“போலாம் ரைட்...”
ஒருவர் மடிமேல் ஒருவர்...இனிதே துவங்கியது எங்கள் பயணம்....
போகும் வழியில் டீசல் போட்டுக் கொள்ள கொஞ்ச நேரம் நின்றது வண்டி... (டீசலை எரிபொருள் என்று தமிழில் சொல்லக்கூடாது...அது கண்டுபுச்சவருடைய பேரு.. - நன்றி விஜய் டிவி ) தட்டுத்தடுமாறி.. அடுத்த தெருவில் போய் நின்றது...
“எறங்குபா.. காலேஜ் வந்துருச்சு...”
இறங்கிப் பார்த்தால்... அது ஒரு மருத்துவக் கல்லூரி.. நாங்க போக வேண்டியதோ ஒரு பொறியியல் கல்லூரி.. தலை சுற்றி விட்டது...
“அண்ணா.. நாங்க _ _ _ _ _ _ _ காலேஜ் போகனும்ணா... இது இல்ல”
“இதாம்பா!! காலேஜ்...”
அடக்கடவுளே... இது என்ன கன்னி பசங்களுக்கு வந்த சோதனை.... அந்த புண்ணியவான் காதுல காலேஜ் பேர் விழல...
செரி, பக்கத்துல உள்ளவங்ககிட்ட கேட்டோம்... அந்த காலேஜ் எங்க இருக்குன்னு...
காது கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ன்னு கேட்டது... இன்னும் பத்து பண்ணெண்டு கிலோமீ போகனுமாம்....நம்ம டிரைவர் அண்ணாச்சிக்கு இது கேக்கல... வேற வழி தெரியல.. “அண்ணா... அதோ பக்கத்துலதானாம்... கெளம்பலாம்...”
வண்டி கிளம்பியது... யாருக்கும் ஒண்ணும் புரியல.. என்ன ஒரு கேவலமானா பார்வை பாத்த்னுங்க... மறக்கமுடியாது....
ஊர் முடிஞ்சு வயல் வரப்பு எல்லாம் வர ஆரம்பிடுச்சுச்சு... சோள காடெல்லாம் பாத்தோம்...ஆட்டோவ மறுபடியும் நிறுத்தி.. அவருக்கு கேக்காத மாதிரி வழி கேட்டோம்....எதோ பக்கத்துல வந்துட்டோம்னு ஒரு நெனப்பு....
ஒரு மலைய தூரத்துல பாத்தோம்.. அந்த மலையே வந்துருச்சு... காலேஜ் வரல இன்னும்....
“ஸ்டாப் ஸ்டாப்.. அதோ காலேஜ்..” உயிர் வந்தது எங்களுக்கு....
அடுத்து என்ன பண்றதுனு தெரியல... நான் போனேன் .. வழக்கம் போல... “என்னண்ணா.. லேட்டா வந்துட்டீங்க....” எழுத்தில் வடிக்கமுடியவில்லை அவர் பார்த்த பார்வையை....
“தம்பீ... நூத்தி இருபது ருவா குடுங்க,,,,” அவ்ளோ காச குடுத்துட்டா.. நாங்க எப்படி திரும்பி போறது.. கைல கால்ல விழுந்து.. எழுபது ரூவா குடுத்துட்டு வந்தோம்....
இதுல யார் மேல தப்புன்னு தெரியல... ஆனா இந்த அபாரமான ஆட்டோ அனுபவத்த எங்களால மறக்க முடியல... இதை எழுதனும்னு நெனச்சேன்... முடிச்சாச்சு. .....
2 comments:
நல்லா வந்திருக்குது. எப்பூமே அனுபவங்களை சுவாரசியமாச் சொல்லப் பழகிட்டோம்னா எழுத்து நமக்கு வசியமாய்டும். தொடர்ந்து எழுதுங்க. அந்த ஆட்டோ ட்ரைவர் எவ்வளவோ மேலு. எங்கூர்ல முகமூடி போடாத கொள்ளைக்காரனுங்க நெம்பப் பேரு ஆட்டோ ஓட்டீட்டு இருக்கானுங்க.
ஹ ஹா... இடுகையைவிட... நீங்க போட்ற பின்னூட்டம் நல்லா இருக்குங்க...
Post a Comment