March 31, 2009

தமிழ் சினிமாவின் இரட்டை அர்த்த பாடல்கள்

”சின்னத்தாயவள் தந்த ராசாவே...”
 
                     தளபதி படத்தில் வரும் இந்த பாடல்.. சூப்பர் ஸ்டாரை குறிப்பதாக இருந்தாலும்... இளைய ராஜா அவர்களின் தாயாரின் பெயர் சின்னத்தாய் என்பதும்...அவரைத்தான் இந்தப் பாடலில் வாலி அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என்பதும் என்னைப் போன்ற யூத்களுக்கு புதுமையன செய்தி.. (என்னப்பா.. பழைய மேட்டரா போட்டு இருக்கியேன்னு பின்னூட்டம் போட்டா.. நீங்க பெருசுங்க லிஸ்ட்ல வந்துருவீங்கங்கோ!!!!)

”ராஜ லஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்... ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்...”

                   தசாவதாரத்தின் ‘கல்லை மட்டும் கண்டால்..’ பாடலில் இடம் பெரும் வரிகள் இவை... கமல் அவர்களின் தாயாரின் பெயர் ராஜ லஷ்மி. (ராஜ் கமல் புரொடக்க்ஷன்ஸ் பெயர் காரணம்.) அவரது தந்த பெயர் ஸ்ரீனிவாசன் என்பதும் அவர்கள் இருவரின் புதல்வர்.. கமல ஹாசன்... பொதுவாக கமல் அவரகள் இது போன்ற சுய விளம்பரத்தை விரும்பாதவர் போல் இருந்தாலும்.. அவரும் சில இடங்களில் இது போன்ற விஷயங்களை கையாண்டுள்ளார்...

“ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜன் தான்...”

                  அதே பாடலில் இடம்பெறும் வரிகள்.. வாலி அவர்களின் இயற்பெயர் “ரங்கராஜன்..”  கெடச்ச கேப்புல எப்பிடி தன்னைப் பற்றி போட்டு இருக்கார் பாருங்க...

”அந்த சிவகாமி மகனிடம்சேதி சொல்லடி....”

                                  சிவகாமி மகனான காமராஜருக்கு கவியரசர் கூறிய சேதி...

கடைக்குட்டி பஞ்ச்:-
 
                     ஏப்ரல் ஒண்ணாம் தேதி .. ஏதோ என்னால முடிஞ்ச மாதிரி டிரை பண்ணேன்.... வண்ணத்துப்பூச்சியார் என்னதான் நெறயா எழுதுங்கன்னு சொன்னாலும்.. இந்த மொக்கய படிக்கிறவங்களோட நேரத்தை வீணாக்ககூடாதுன்னு ஒரு எச்சரிக்கை.. அதனால தான் குட்டி குட்டி பதிவு..  உங்களுக்கு இத படிச்சுட்டு பின்னூட்டம் போடவே நேரம் கரெக்டா இருக்கும்.. என்ன செரிதானே??? 
                        உங்களுக்கு தெரிஞ்ச இது போன்ற பாடல்களை கண்டிப்பாக குறிப்பிடவும்..

8 comments:

கும்மாச்சி said...

சேலத்துப் பட்டு வாங்கி வந்த அந்த சின்னவரை போய்க் கேளு...............

SUREஷ் said...

என்னமோ நினைச்சோம்..........

கடைக்குட்டி said...

@ sureஷ் அண்ணா...

ஹையா.. ஏமாந்தீங்களா???

SUREஷ் said...

அண்ணா

இந்த இடத்தில் ரொம்ப தெளிவா சொல்லியிருக்கிறார் ஒரு க்ளிக் பண்ணி கண்டுபிடிச்சிடுங்க

கடைக்குட்டி said...

புடிச்சுட்டேன்... நன்றி...

ஆதவா said...

நீங்கள் சொன்னவிஷயம் உண்மையோ பொய்யோ தெரியாது ஏப்ரல் ஒண்ணுக்காகச் சொன்னீர்களா என்பதும் தெரியாது.ஆனால், சொல்ல வரும் விஷயங்களை மட்டுப்படுத்தியோ, அல்லது கட்டுப்படுத்தியோ தராதீர்கள். பதிவுகள் எல்லாமே மொக்கையாக இருப்பதில்லை. இந்த பதிவு பயனுள்ள பதிவுதான்.. அடுத்தவர் படிக்க நேரமெடுக்கும் என்பதால் உங்களை நீங்கள் குறைத்துக் கொள்ளாதீர்கள்!!! நான் என்றுமே பெரிய பதிவுகள் போடுவதாக இருந்தால் முதலில் சொல்லிவிடுவேன். மற்றபடி எவ்வளவு பெரிய பதிவென்றாலும் அதைப்பற்றி கவலலப்படுவதில்லை!!! ஏனெனில் படிக்க ஒரு நண்பர் கூட்டம் நமக்கென உள்ள்து!!

கவலைப்படாமல் எழுதுங்க!!!

------------------------------

கானா பிரபா said...

;) கடைக்குட்டி

இதைப் பார்த்தா எப்ரல் பூல் பதிவு மாதிரி தெரியலையே, கனமா இருக்கே

கடைக்குட்டி said...

அய்யய்யோ... நான் போட்டு இருக்குற மேட்டர் உண்மைங்கோ!! உண்மைங்கோ!!! தலைப்ப பாத்துட்டு நம்ம சுரேஷ் அண்ணண் மாதிரி யாராவது ஏமாந்தாங்கன்னா.. அவங்களுக்கு மட்டும் இது ஏப்ரல் ஃபூல்...