”மகளிர் மட்டும்” படத்தில் வரும் இந்தக் காட்சி முக்கால்வாசி பேருக்கு நியாபம் இருக்கலாம்... நாகேஷ் அவர்கள் பிணமாக நடிக்க ,அவரை எப்படியாவது தொலைத்து விட்டு வரவேண்டுமென்று அந்த மூணு ஹீரோயினும் முயற்சி செய்வாங்க...இத இப்ப ஏன் நான் சொல்லுறேன்னா... இந்த காட்சி வரும் போது.. பிணமாக இருக்கும் நாகேஷ் கையில ரோகிணியும்,ஊர்வசியும் சிகெரட் குடுத்து .. அவர் சிகெரட்  குடிக்கிற மாதிரி செய்வாங்க... இந்த சீன பலமுற பாத்து இருந்தாலும் அன்னக்கி கலைஞர் டிவியில பாக்கும்போது பகீர்னு இருந்துச்சு.. 
பிணத்தோட கைல சிகெரட் இருக்கும் போது  புகைப்பிடித்தல்  உடல்  நலத்திற்க்கு  தீங்கு!!  அப்படீன்னு கார்டு போட்டாங்க....
சின்ன வயசுலேர்ந்து பல முற இந்த சீன பாக்கும் போது தோணாத ஒரு விஷயம் இவங்க கார்டு போட்டு
 காட்டும் போதுதான் உரைக்குது...ஐயா .. ரொம்ப மோசமான வில்லன் வரும்போது அந்த கார்ட போட்ரீங்க .. ஓ.கே...
 இந்தமாறி யாருமே கவனிக்க முடியாத சீன்லயெல்லாம் போட்டு உங்க கடைமை உணர்வ காட்டணுமா???
என்ன கேட்டா இந்த எச்சரிக்கை குடுக்குற கார்டே தப்புன்னு சொல்லுவேன்.. யாருக்காக இதை டி.வி 
சீரியல்லயெல்லாம் போடுறாங்களோ!!! 
2 comments:
என் வலைக்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி.
இன்னும் விரிவாக எழுதலாம்.
படிக்கும் போது ரசிக்க ஆரம்பித்தவுடன் முடிந்து விடக்கூடாது.
"ஷண்முகப்பிரியன் படித்துறை " பதிவுகளை எல்லாம் பொறுமையாக படியுங்கள்.
நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துகள்.
எனக்கு பர்ஸனலாவே நெறய வழவழனு எழுதுறது புடிக்காதுங்கண்ணா..... இப்போ நீங்க சொல்லிட்டீங்கள்ல... இனிமே பாருங்க...
Post a Comment