
நேருக்கு நேர் முடிஞ்சு.. காதலே நிம்மதியும் ஓவர்.. படம் சுத்தமாக படுத்து விட்டது.. அடுத்து கண்டிப்பாக ஹிட் தேவை.. அப்பா சிவக்குமார் கதை கேட்டு.. கொஞ்சம் பாட்டு. , ஃபைட்டு.. ஜனரஞ்சகமா இருக்குப்பா நாடின்னு சொல்லி ஆரம்பித்த படம் சந்திப்போமா...
டைரக்டர் லண்டன் போய் படித்து வந்தவர்.. “ஷாட்ல வலப்பக்கமா உள்ள வர்றீங்க. நிமிர்ந்து பாக்குறீங்க..’ன்னு ஒவ்வொரு ஷாட்டையும் ஸ்டோரி போர்டில் சொன்னார்.. மவனே கண்டிப்பா ஹிட் டான்னு எறங்கியாச்சு..
என்னதான் ஆக்ஸ்போர்ட்ல படிச்சாலும் ரெண்டும் ஒன்னும் மூனுதானே.. நாலில்லல.. அந்த மாதிரி அடிப்படைல ஒரு தப்பு..
சவுண் ட்,ஸ்டார்ட் கேமரா அப்டீன்னு சொன்னதுக்கு அப்புறந்தான் ஆக்ஷன் சொல்ல வேண்டும்.. ஆனால் இந்த லண்டன் டைரக்டர் எடுத்த உடனே ஆக்ஷன் சொல்லி விட்டாரு.. அட என்னப்பா இது.. மொத்த யூனிட்டும் ஸ்தம்பித்தது..
இன்று வீட்டிற்க்கு போனதும் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன்பா என்று இவர் சொல்லிப் பார்த்து இருக்கிறார்.. ஆனால் அட்வான்ஸ் வாங்கியாச்சு.. நடிச்சு முடிச்சுடு.. படம் நல்லபடியா ஓடும் பாருன்னு கலையுலக மார்க்கண்டேயரும் நம்பிக்கை குடுத்து இருக்கிறார்...


இன்னும் எக்ஸ்ப்ரஷன் தாங்கன்னு கேட்டாலும் சொல்லிக் குடுத்து வாங்குற அளவுக்கு டைரக்டருக்குத் தெரியல.. சொல்லாமலே நடிக்க சூர்யாவுக்கும் தெரியல.. அடுத்த தோல்விக்கு ரெடி..
இதுக்கு நடுவுல ஜெய்ப்பூர்ல ஷூட்டிங்..ஜோத்பூர்ல முகாம்.. பத்து நாள் ஷூட்டிங் ஓவரு.. ஆனா ஹோட்டல்ல மவனே வீட்டுக்கு போவாதீங்கன்னு கேட்ட பூட்டியாச்சு. என்ன ஏதுன்னு விசாரிச்சா.. 10 நாள் காசு பாக்கி.. ஹோட்டல் பில்லே தரல.. தயாரிப்பாளர் புதுசு...
சூர்யாவ மட்டும் கெளெம்பி போயிடுங்கன்னு அங்க இருந்தவங்க சொன்னாலும்.. இவரும் வந்துட்டா அந்த யூனிட்டுக்கு யாரும் உதவ முடியாத நிலைமை...ஒரு வழியாக சூர்யாவும் சிவக்குமாருக்கு ஃபோன் போட்டு விவரம் சொல்ல.. பணம் புரட்டி இவர் அனுப்ப ..அதுக்கு அப்புறம் எல்லாரும் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்..
இப்படி பல சாகச பராக்கிரமங்களுக்கு நடுவில் நடித்த “சந்திப்போமா” படுதோல்வி.. என்னதான் சிவகுமாரின் மகனாக இருந்தாலும் யாரும் முகம் கொடுத்து பேசவில்லை.. நல்லா இருக்குன்னு சொன்ன எல்லாரும் மொகத்துக்காக சொன்னாங்க.. பின்னாடி நிறைய ஏச்சு.. கேலிகள்..
“சூர்யா டான்ஸ் ஆடுவதை தவிர்த்து விடுவது நல்லது “ என்று கல்கியில் விமர்சனம் செய்தார்கள்..
இப்படி முச்சந்தியில் வந்து அசிங்கப்படனுமா சூர்யா ??
சூர்யான்ற முகமூடியிம் செட்டாகல..
சரவணனையும் தொலச்சாச்சு..
அந்த சரவணன் அப்பிடி என்னதான்பா பண்ணிக்கிட்டு இருந்தாப்ல??
வரும் பதிவுகளில்...
14 comments:
நீ நடத்துப்பா....
சூர்யா எப்போ
பைட் போட கத்துக்கிட்டார்னு சொல்ல போற??
interesting story telling boss... continue
கல்கில அந்த விமர்சனம் வந்தது பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்குன்னு ஞாபகம், தப்புன்னா மன்னிச்சுக்கப்பா
இண்ட்ரெஸ்டிங் தம்பி
சரவணன் என்ன பண்ணிட்டு இருந்தார்ன்னு படிக்க ஆர்வம்.
:)))
இப்புடி ஒரு படம் வந்துச்சா..?
உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்...(அப்பாடி...)
ஹா ஹா சொல்லிடலாம் ஜெட்லி ..:-)
நன்றி யாத்ரீகன்
***************
சங்கர் said...
கல்கில அந்த விமர்சனம் வந்தது பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்குன்னு ஞாபகம், தப்புன்னா மன்னிச்சுக்கப்பா
//
தப்புதான்.. மன்னிப்பெல்லாம் வேணா:-)
பிரியமுடன்...வசந்த் said...
இண்ட்ரெஸ்டிங் தம்பி
சரவணன் என்ன பண்ணிட்டு இருந்தார்ன்னு படிக்க ஆர்வம்.
//
ஊக்கத்திற்க்கு நன்றி அண்ணா...
:-))) தல..
♠ ராஜு ♠ said...
இப்புடி ஒரு படம் வந்துச்சா..?
//
ஹி ஹி.. இந்த மாதிரி மொக்கை படத்தை எல்லாம் தெரிஞ்சுக்காம இருக்குறதே நல்லது..
ஸ்ரீராம். said...
உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்...(அப்பாடி...)
//
ம்க்கும்.. இதுக்கே தாவு தீருது.. இன்னுமா???????
Post a Comment