
சரவணன் முதல் சூர்யா வரை தொடரின் அடுத்த அத்தியாயம் இது.. ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க (யார் அதுன்னு கேக்கக் குடாது.. :-) என்னதான் வகை வகையா மொக்க போட்டாலும்.. இந்த தொடருக்குத்தான்ஹிட்ஸ் கெடக்கிது,.. அதான் திரும்பவும் எறங்கிட்டேன்...
‘நேருக்கு நேர்’ முடிச்சு அது 100 நாளும் ஓடியாச்சு.. அடுத்து என்ன.. ?? ‘காதல் கோட்டை’ ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ போன்ற படங்கள்ன் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனின் தயாரிப்பில் ’காதலே நிம்மதி ‘ படமும் துவங்கியாச்சு..
படத்தின் கதையை டைரக்டர் 20 நிமிடந்தான் சொல்லி இருக்கார்.. “எல்லாமே ட்ரீட்மெண்ட் ஸார்.. ஸ்பாட்ல பத்துக்கலாம்னு ” சொல்லிடாப்ல.. ஷூட்டிங் ஸ்பாட்ல போனா டயலாக் பேப்பர குடுத்து நடிங்கன்னு சொல்லிட்டாங்க.,, சூர்யாவ இப்பிடி நடிக்க சொன்னா எப்பூடி?? அவர் சரவணனா இருக்கிராறே.. என்னதான் சினிமாவுக்காக பெயரை மாற்றிக் கொண்டாலும் கூடவே பொறந்த கூச்சமும் ,தாழ்வு மனப்பான்மையும் துரத்த அவை இரண்டோடும் சண்டை போடவே நேரம் சரியாக இருந்தது..
மனிதருக்கு நடிக்கத் தெரியவில்லை.. டயலாக் சொல்லத் தெரியவில்லை.. சண்டைக் காட்சிகளில் அழுத்தமாக குத்து விட முடியவில்லை.. டான்ஸ் பிடிபடவில்லை.. இப்படி நிறைய இல்லைகள்.. (இந்த இல்லைகளை நீங்கள் தற்போது அந்தப் படத்தை பார்த்தால் உணர முடியும்..)
சரியான உடையும் தேர்வு செய்யத் தெரியவில்லை.. அந்த நேரத்தில் கை குடுத்து உதவுயது நாசர் மட்டுமே.. அவருடைய வழிகாட்டுதலில் நடித்தும் முடித்தாகிவிட்டது..
படம் பொங்கல் ரிலீஸ் என்று நினைவு.. மரண மொக்கை.. ஹீரோயினோட அண்ணன்கிட்ட அடிவாங்கும் ஹீரோவினை நம் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.. அதும் லவ் பண்ணாமலேயே வருகிற சந்தேகத்தால் போட்டு பிரித்து மேய்வார்.. கொடுமடா சாமீய்ய்ய்ய்...
முதல் தோல்வி..
இந்த மாதிரி எதிர்பாராத தோல்விகளே சூர்யாவை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.. நான் இந்த தொடரை எழுத ஆரம்பித்த போது இருந்ததை விட தற்போது மாஸ் கணிசமாக உயர்ந்துள்ளது.. விஜய் டி.வி.யில் மனிதர் ஒரு பேட்டியின் போது.. கதை இலாகா ஆரம்பிக்கணும்னு சொல்றார்.. அதாவது வெறும் கதை மட்டும் எழுதி அவற்றை நூலகம் போல சேர்த்து வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்று சொன்னார்..
நல்ல விஷயம்தான்.. ஆனால் காதலே நிம்மதி போன்ற மொக்கைகள் ஓடி இருந்தால் சூர்யாவின் நிலையை யோசிக்க முடியவில்லை..
தோல்வியும் நல்லது போல..
15 comments:
நல்லா போயிட்டிருக்கும் போதே, டக்குன்னு முடிஞ்சுருச்சு..
இன்னும் எழுதியிருக்கலாம்.
நல்லாருக்கு, தொடர்க
// கதை இலாகா ஆரம்பிக்கணும்னு சொல்றார்.. //
அதுக்கு முன்னாடி கதைன்னா என்னன்னு கண்டுபிடிக்கிற இலாகா ஆரம்பிக்கணும்,
அவ்வ்வ்வவ்
//ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க (யார் அதுன்னு கேக்கக் குடாது.. :-) //
//♠ ராஜு ♠ said...
நல்லா போயிட்டிருக்கும் போதே, டக்குன்னு முடிஞ்சுருச்சு..
இன்னும் எழுதியிருக்கலாம்.//
நம்ம ராஜு தானா அது :))
நான் கூட படத்தை பெரிதாய் எதிர்ப்பார்த்தேன்...
முதல் காட்சி பார்த்ததாக நினைவு...
உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பார்கிறேன்..
எதிர்பார்த்தேன்...!
தொடருங்க கடைக்குட்டி...!
நல்லாருக்கு நண்பா..
இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.. கொஞ்சமா இருக்கு..
♠ ராஜு ♠ said...
நல்லா போயிட்டிருக்கும் போதே, டக்குன்னு முடிஞ்சுருச்சு..
இன்னும் எழுதியிருக்கலாம்.//
அடுத்த பதிவு ஃபுல் ட்ரீட் தான் போங்க..
அதுக்கு முன்னாடி கதைன்னா என்னன்னு கண்டுபிடிக்கிற இலாகா ஆரம்பிக்கணும்,
அவ்வ்வ்வவ்
//
ஹ ஹா.. :-)
//நல்லாருக்கு, தொடர்க//
நன்றி சங்கர்..
நம்ம ராஜு தானா அது :))
//
ஹா ஹா.. ஆமா ஆமா.. ரொம்ப ஃபீல் பண்றாப்ல..
ஜெட்லி said...
நான் கூட படத்தை பெரிதாய் எதிர்ப்பார்த்தேன்...
முதல் காட்சி பார்த்ததாக நினைவு...
//
நீங்க எப்பவுமே மொக்க படத்த விட மாட்டீங்க போல..
KISHORE said...
உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பார்கிறேன்..
//
குடுத்துருவோம் :-)
பிரியமுடன்...வசந்த் said...
எதிர்பார்த்தேன்...!
தொடருங்க கடைக்குட்டி...!
//
கண்டிப்பா..
லோகு said...
நல்லாருக்கு நண்பா..
இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.. கொஞ்சமா இருக்கு..
//
பதிவுகளுக்கு நான் ஒதுக்கும் நேரம் குறைந்து கொண்டே வருது நண்பா.. இருந்தாலும் தொடர்றேன்..
நான் ஒரு பதிவு போட கண்டிப்பா நேரமாகும்..
அடுத்த முறை நிறைய எழுதுறேன்..
அனைவரின் அன்பிற்கும் நன்றி :-)
//சூர்யாவ இப்பிடி நடிக்க சொன்னா எப்பூடி?? அவர் சரவணனா இருக்கிராறே.. என்னதான் சினிமாவுக்காக பெயரை மாற்றிக் கொண்டாலும் கூடவே பொறந்த கூச்சமும் ,தாழ்வு மனப்பான்மையும் துரத்த அவை இரண்டோடும் சண்டை போடவே நேரம் சரியாக இருந்தது..//
நானும் பேசாம பேர மாத்திரவா
Post a Comment