
திடீர்ன்னு தோணுனதுதான் மௌலி பத்தி எழுதலாம்னு.. ”அசத்த போவது யாரு” நிகழ்ச்சிக்கு ஒரு தடவ இவர் வந்து இருந்தாரு.. (அதெல்லாம் பாக்குறியாடானு திட்டக் கூடாது..) இவருடைய பேச்சும் அட்வைஸ்களும் ரொம்ப மெச்சூட்டா இருந்தது..
“சினிமாக்காரன் வெளிநாடு போய் ஷூட்டிங் பெர்மிஷன் வாங்கிட்டா இந்த ஊரே எங்க்ள்துன்னு பாட்டு போட்டு லூசு மாதிரி ஆடிட்டு இருப்பாங்க.. “ அப்டீன்னார்.. உண்ம அதானே.. அத அதானே ரசிக்கிறோம் நாமளும்.. சினிமால இருக்குற இவரே எப்டிடா இப்டி சொல்றாரு.. இவருடைய படம்னு எனக்கு (என் வயதொத்ட தலைமுறைக்கு) தெரிஞ்சது “பம்மல் கே சம்பந்தம்” மட்டுமே.. இன்னும் கொஞ்சம் யோசிச்சு பாத்தா “அபூர்வ சகோதரர்கள் ”படத்துல வர்ற்து நியாபகம் வருது..
ரொம்ப நாளாக வீட்டில் இருந்து பாக்காம இருந்த “ஃப்லைட் 172 “ நினைவு வந்து அதைப் பார்த்தேன்.. வாவ்வ்வ்.. (அட ஆஆஆவ்வ் இல்லீங்க..) மனுசனுக்குள்ள என்ன டேலண்ட்.. இது டி.டி.ல வந்ததா?? பழைய நினைவ யாராவது பகிர்ந்துக்கங்க.. எங்க டி.வி.டி தலைமுறைக்கு புரியட்டும்..


“ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது” படம் நினைவுக்கு வந்து அதையும் பார்த்தேன்.. சமுதாய செய்திகளோட.. அலட்டிக்காத காமெடி.. அருமை.,,
மேடை நாடகங்களின் சாயல் ஒருப்பதாக உணர்ந்தேன்.. கடைசியாக இன்று காலை கூகிள் செய்ததின் விளைவு.. அவருடைய பழைய பேட்டிகளையும்.. வரலாறையும் தெரிந்து கொள்ள முடிந்தது,,
4000க்கும் மேற்பட்ட தடவை மேடையேறிய அனுபவமும்... 21 தமிழ் படங்கள் 24 தெலுங்கு படங்கள் இயக்கிய கலைப் பணியும்.. ஆந்திராவின் சிறந்த விருதான நந்தி விருதை 5 முறையும்.. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான பி.சந்திரமௌலி..


பாத்தா அந்த மாதிரி இல்லீங்க. மனுசன் அடக்கமானவர் போல..
அவரைப் பற்றிய நினைவுகள் இருந்தால் பகிருமாரும்.. தெரியாத இளைய தலைமுறை “ஃப்ளைட் 172 “ 2010 முடியுறதுக்குள்ள ஏதாவது நண்பணிடம் சுட்டு பார்ர்குமாறும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்..
(அவர் இரும்புக்கோடை முரட்டு சிங்கம்.. காதல் டூ கல்யாணம் போன்ற படஙக்ளில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்..)
13 comments:
அவர் நடிச்ச “அண்ணே, அண்ணே” படத்தை வாய்ப்பு கிடைச்சா பாருங்க..
செம காமெடியா இருக்கும்.
அதே மாதிரி “கிரீடம்” விஜய் இயக்கத்தில் வெளிவந்த “பொய் சொல்லப் போறோம்” படத்திலும் பின்னி பெடலெடுத்திருப்பார்.
அவர் ஒரு நல்ல காமடியன். நல்ல பகிர்வு...
poruttham padathillum nadithar
எனக்கும் மௌலிய ரொம்ப பிடிக்கும் ..அவருடைய நாடகங்கள் மற்றும் பழைய படங்களை பார்த்ததில்லை ...ஆனால் நீங்க சொன்ன புதிய படங்களை தான் பார்த்திருக்கிறேன்...அதிலிருந்து தான் தெரியும் .. நீங்க சொன்ன அந்த டிராமா டிவிடி வங்கி பார்க்கிறேன்... ஆமா எப்படி தமிழிஷ் ல ஒட்டு போடுறது...
அவர் நிழல் நிஜமாகிறது படத்தில் கூட ஒரு கேரக்டர் செய்திருப்பார். தெலுங்கில் அஸ்வினி நாச்சப்பாவை வைத்து படங்கள் செய்தவர். பெரிய திறமைசாலி. நல்ல ஆன்மீகக் குடும்பத்திலிருந்து வந்தவர்
அருமையான மனிதரைப்பற்றி அழகானப் பதிவு. ' flight 172 ' பார்க்கத் தவறியவர்கள் இங்கே சென்று பார்க்கவும். ஏற்படப் போகும் வயிற்று வலிக்கு நான் பொறுப்பல்ல!
http://video.google.co.uk/videoplay?docid=-4891455537713842964&ei=lqo6S6qjBNCr-Ab5-enABA&q=flight+172&hl=en#
“அண்ணே, அண்ணே” & "பொய் கால் குதிரை"யும் என்னோட ஃபேவரேட் மூவீஸ் ஃஆப் மெளலி!!
என்ன திடீர்னு இப்டி கிளம்பிட்டீங்க... ரைட்டு!!
ராஜூ,.. பொய் சொல்ல போறோம் நான் பாக்கல.. எழுதனுனு நெனச்சு மறாந்து போச்சு..
“அண்ணே அண்ணே” பார்த்த நியாபகம்..
*********
நன்றி க.பாலாசி.. காமெடியன் என்பதையும் தாண்டி நல்ல மனிதர்,. :-)
நான் பார்த்ததில்லை அந்த படத்தை harrish
*****
தமிழிஷல ஒட்டு போடுறது எப்புடின்னு உங்க கடைல சொல்றேன்..
டிராமா பாத்துட்டு நீங்க சொல்லுங்க..
ஸ்ரீராம். said...
அவர் நிழல் நிஜமாகிறது படத்தில் கூட ஒரு கேரக்டர் செய்திருப்பார். தெலுங்கில் அஸ்வினி நாச்சப்பாவை வைத்து படங்கள் செய்தவர். பெரிய திறமைசாலி. நல்ல ஆன்மீகக் குடும்பத்திலிருந்து வந்தவர்
//
நல்ல தகவல் ஸ்ரீராம்.. நிழல் நிஜமாகிறாது மறந்துட்டேன்..
அந்தப் படம் அவருக்கு கல்யாணம் ஆகும் சமயம் ரிலீச் ஆனதாம்.. மாமனார் வீட்ல எல்லாரும் போய் பாத்து இருக்காங்க.. மனுசன் நெலமய யோசிச்சு பாருங்க..
தகவலுக்கு நன்றி :-)
M.S.E.R.K. said...
அருமையான மனிதரைப்பற்றி அழகானப் பதிவு. ' flight 172 ' பார்க்கத் தவறியவர்கள் இங்கே சென்று பார்க்கவும். ஏற்படப் போகும் வயிற்று வலிக்கு நான் பொறுப்பல்ல!
http://video.google.co.uk/videoplay?docid=-4891455537713842964&ei=lqo6S6qjBNCr-Ab5-enABA&q=flight+172&hl=en#
//
லிங்குக்கு நன்றி..
அன்பிற்க்கும்,,. :-)
பொய்க்கால் குதிரை மறந்துட்டேன்..
கலை .. இது ஒன்னும் தொடர் இல்ல.. சும்மா ஒரு மாற்றம்.. :-)
பின் தொடர்வதற்க்கு நன்றி :-)
poi solla porom paarunga... kalakirpaaru...
Post a Comment