படத்துக்கு விமர்சனக் குத்து எழுதுறதுக்கு மொத்தம் இரண்டு காரணங்கள் இருக்கு பதிவுலகுல..
1* போட்ட காசு போச்சேன்னு பொலம்பும் பதிவுகள்..( இந்த சீசனுக்கு வேட்டைக்காரன்...)
2*ஹே நானும் ஒரு நல்ல சினிமா பாத்துட்டேன்பான்னு ஸீன் போடுற பதிவுகள்..
இது இரண்டாம் வகை...
தங்கள் கல்லூரியில் படித்த ராஞ்சூ (ஆமிர்கான்) என்னும் நண்பனைத் தேடி செல்லும் மற்ற இரு நண்பர்களின் (மாதவன்,ஷர்மான்) பார்வையில் அவர்களின் கல்லூரிக் காலம் கதையாக விரிந்து.. கரீனாவும் சேர்ந்து.. அவர்களின் கல்லூரிக் காலம் முடிந்து (ப்ளாஷ்பேக்).. பின் ராஞ்சூவைத் தேடிப் போகும் இடத்தில்வேறொருவன் இருந்து..
காதலியும் நண்பர்களும் ஆமிரைக் கண்டுபிடித்தார்களா.. உண்மையில் அவர் யார்...அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்... அத்தோடு சுபம்..
5 points someone சேத்தன் பகத்தின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு.. அந்தப் புத்தகத்தைவிட அழகான திரைக்கதை அமைத்து காமெடி தூவி... ஹிட்.. :-)
ஆமிர் கான் சொல்லி அடிக்கிற கில்லிங்க,.கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காக மனிதரின் மெனக்கெடல் தெரிகிறது.. கல்லூரி மாணவனாக 40+ ஆமீர் நடித்துள்ளார்.. ஒரு அறிவு தாகம் மிகுந்த மாணவராக அசால்டாக செய்துள்ளார்.. லூசாக ஒரு பாடி லாங்குவேஜ்.. அற்புதம்..
மாதவன்.. தமிழ்ல காணோமேன்னு பாத்த..மனுஷன் இங்க கலக்கி வெச்சுருக்கார்.. அடக்கி வாசிக்க வேண்டிய இடங்கள் நெறயா.. நல்லா செஞ்சு இருக்கிறார்.. ஷர்மான் கலக்கல்.. அதுவும் அவருடைய வீடு வரும் காட்சிகளில் பழைய படங்களை போல்.. அருமை,,
கரீனா கதைக்கும் தேவையில்லை.. காணவும் சகிக்கவில்லை..

ஆமீர்கானுடன் ஒரு மண்ணாங்கட்டி கெமிஸ்ட்ரியும் வேகவில்லை.. (விமர்சனத்தில் ஹீரோயினை திட்டிய முதல் பதிவர் என்னும் பெருமை கிடைக்குமா???)
ஆமீர்கானுடன் ஒரு மண்ணாங்கட்டி கெமிஸ்ட்ரியும் வேகவில்லை.. (விமர்சனத்தில் ஹீரோயினை திட்டிய முதல் பதிவர் என்னும் பெருமை கிடைக்குமா???)
போமன் ஹிரானி கலக்கல்.. திரைக்கதை அருமை,.. இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கு.. ஆனா..
அட்டுகள்..
*படத்தின் இரண்டாம் பாகத்தில் சில இடங்களில் லைட்டாக தொய்வு.. கரீனா கல்யான மேடையிலிருந்து அனைவரும் பார்க்க ஓடுவது.. அடப்போங்கப்பா...
*இசை மகா மட்டம்.. ஆல் ஈச் வெல் பாடல் பிழைக்கிறது.. பின்னனி எல்லாம் ஒரே பாடலின் ஹம்மிங்.. எஸ் ஏ ராஜ் தோத்தார் போங்க..
ஹிட்டுகள்
*ckமுரளிதரனின் ஒளிப்பதிவு .. வாவ்.. கண்ணுக்குஅவ்ளோ குளுமை,, (தமிழரா??)
*வசனங்களும் காட்சி அமைப்பும் அருமை..
*படத்தில் வைக்கப்படும் நல்லதே நடக்கும் என்னும் உணர்வு.. அதாவது வசூல் ராஜாவின் கட்டிப்பிடி வைத்தியம் போல... (அதன் பிதாமகரின் படைப்பே இது என்பது தெரியாதவர்களுக்காக சொல்வது..) “ALL IZZZ WELL" என்னும் வரியை உபயோகித்து “நடக்கப் போவது நல்லதுக்கே..” என்னும் உணர்வை மெலோங்க செய்து.. ஒரு விதமான திருப்தியாக தியேட்டரை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்,,
(வேலை கிடைக்காமல் ஒரு விதமான மன இருக்கத்தில் இருக்கும் என் நண்பனை இந்தப் படத்தைபார்க்க சொன்னேன்.. படம் பார்த்து விட்டு.. ‘மச்சா..al IZZwelll :-)' ன்னு மெசேஜ் அனுப்பி இருந்தான்... நீங்களும் ட்ரை பண்ணுங்க,,)
*படத்தின் இறுதியில் ஆமீர்கான் பிரசவம் பார்ப்பார்.. அதாவது அவரும் அவரது நண்பர்களும் எதிர்பாராத விதமாக இந்த நிலமைக்கு வந்து விடுவார்கள்.. யப்பா.. அந்தக் காட்சியின் விறுவிறுப்பு.. பத்து புலி உறுமுது பாடலுக்கு சமம்...
இந்த இடுகையை ஏன் எழுதுகிறேன் ???
படிப்பது என்னும் பெரும் சுமையாக இருக்கிறது.. நம்முடைய கல்விக்கூடங்கள் மதிப்பெண்கள் நிறம்பிக் கிடக்கும் குப்பைக்கூளங்கள்... இங்கு புதிதாக சிந்தனைகளுக்கு இடமில்லை.. புத்தகத்தில் இல்லாத வரிகளை எழுதினால் மார்க் இல்லை... மார்க் எடுக்காட்டி மரியாதை இல்லை..
குழந்தைகளின் படிப்புசுமைக்கு எதிராக ”தாரே சமீன் பர்” என்னும் படத்தை எடுத்த ஆமீர்.. அதே கருத்தை இன்னும் வலுவாக இதில் சேர்த்துள்ளார்..
6 வயதுக்கு குறைந்து பென்சிலால் எழுத வைக்கக் கூடாது அப்படி எழுத வைத்தால் பிள்ளைகளின் மனநன்லன் பாதிக்கப்படும் என்பது ஒரு ஆய்வின் முடிவு.. ஆனா இன்றைய நிலையை நினைத்தால்..
நெஞ்சு பொறுக்குதில்லையே..
“சச்சினின் அப்பா நீ பாடகராகு என்று சொல்லி இருந்தால்.. லதாமங்கேஷகரின் அப்பா நீ கிரிக்கெட் விளையாடு என்று சொல்லி இருந்தால்...” -->நச் வசனம்..
“ஜோ பசந்த்.. வோ கரோ.. “--> பிடித்ததை செய்க..
உங்களுக்கு ஹிந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை.. ஆமீரைப் பிடிக்க வேண்டும் என்று கட்டயமில்லை..
“ஏதாவது செய்யனும் பாஸ்” என்று நினைக்கும் கூட்டத்தில் இருந்தால் கண்டிப்பாக 3 இடியட்ஸ் பார்க்கவும் ..:-)
13 comments:
படம் போலவே உங்களது விமர்சனமும் அருமையோ அருமை! :)
அந்த படம் செம காமெடியா இருந்துச்சு பாஸ்..!
தியேட்டர் முழுக்க விழுந்து விழுந்து சிரிச்சுட்டே இருந்தோம்.
“ALL IZZZ WELL"
(டெம்ப்ளேட் பின்னூட்டம் ??..)
கிடைக்கும்ப்பா...
நல்ல விமர்சனம் கடைக்குட்டி...
எங்கையா பார்த்தே??
கண்டிப்பா பாக்குறேன் கடைக்குட்டி...!
வேலையெல்லாம் நல்லா போயிட்டு இருக்காப்பா?
ஹிஹிஹி
நல்ல படத்திற்கு நல்ல விமர்சனம்.
நல்லாருக்கு கடைக்குட்டி.
Good Movie. Nice review.. :)
நன்றி தமிழ்மாங்கனி..
****
ம்ம் நாங்களுந்தான் ராஜூ.. படம் செம ஜாலில..
*******
ஹா ஹா TVR.. பதிலுக்கு பதிலா.. :-)
தேவில ஜெட்லி..
:-)
*********
வசந்த் அண்ணா!!!
வேலையெல்லாம் செம ஜாலிண்ணா.. செட்டில் ஆயாச்சு..
எல்லாப் புகழும் இறைவனுக்கே இல்லையா.. :-)
என்ன சிரிப்பு கார்ர்கி தல.. :-)
********8
நன்றி துபாய் ராஜா..
*********
அனானிக்கு நன்றி. :-)
//உங்களுக்கு ஹிந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை.. ஆமீரைப் பிடிக்க வேண்டும் என்று கட்டயமில்லை.. //
கரெக்ட்.. எனக்கு ஹிந்தி தெரியாது.. அமீர் ரசிகனும் கிடையாது.. எனக்கு படம் பிடிச்சுது!!
//லூசாக ஒரு பாடி லாங்குவேஜ்..//
இதுல தாங்க அசத்திட்டாரு
//கரீனா கதைக்கும் தேவையில்லை.. காணவும் சகிக்கவில்லை..//
இதுக்காகவே படத்தை தேடி போட்டு இருக்கீங்க போல ;-)
Post a Comment