இதே ஸ்லோகன இந்த தலைமுறை வயசானதும் எப்படி உபயோகிக்கும்...??
******************
டீச்சர் : நாங்கள்ளாம் அந்தக் காலத்துல காலெஜ் போயித்தான் கட் அடிப்போம்..
இந்தக் காலத்து பசங்க “வெப் கேம” ஆஃப் பண்ணியே எங்கள கட்
பண்றாய்ங்களே...
******************
அப்பா : நாங்கள்ளாம் அந்தக் காலத்துல WWF,RAW அப்டி டி.வி. கேம்ஸ்தான்
ஆடுவோம்... நீ அந்த ரோஸிய விட்டு நகர மாட்றியேடா.. (ரோஸி
அவர்கள் வளர்க்கும் செல்ல ரோபோ..)
******************
2049 டிசம்பரில் ...
பேரன் : பாட்டி சோறுன்னா என்ன பாட்டி ???
பாட்டி : நான் குழந்தையா இருக்கரச்சே அதான் கண்ணா சாப்டேன்,,,
பேரன் : ஓ.. சோறுன்றது சாப்புட்ற பண்டமா ???
******************
கீக்கீங்....கீக்கீங்.... --- “message received "
"i gt married 2 years bak.. sry ya.. no time.. forgt 2 say..hop u r aliv ..tc bye"
மகன் தந்தைக்காற்றும் மெசேஜ்...
*******************
மிஸ்டர்.பொதுஜனம் : அந்தக் காலத்துல நாங்கள்லாம் தியேட்டர் போயித்தான்
படம் பாப்போம்.. இப்ப என்னடான்னா அவனவனுக்கு
புடிச்ச நேரத்துல அவனவன் வீட்லயே படம் ரிலீஸ்
ஆகுது...
********************
2055 தாத்தாக்கள் : நாங்கள்ளாம் அந்தக் காலத்துல ஒரு “பொண்ணத்தான்” சைட்
அடிப்போம் .. கல்யாணம் பண்ணிப்போம்.. .. இப்ப
என்னடான்னா ...,,,
*********************
(இதோடு பதிவு முடிந்தது.. டிஸ்கி மொக்கைகளை வெட்டிகள் மட்டும் படிக்கவும்..)
டிஸ்கி
இது ஒரு “சரியான” நாள்ங்க..
ஏன்னு கேக்குறவங்க மேலும் படிக்க...
வழக்கத்துக்கு மாறா இன்னைக்கு ஆபீஸ் .. சரின்னு போனா ஒருத்தரும் வரல.. வழக்கத்துக்கு மாறா சரி இன்னைக்கு வேலைதான இல்லா.. சரி.. ஆபிஸ்லயே எதாவது படிக்கலாம்னு நெனச்ச்சா.. என்னோட சிஸ்டம் பூட் ஆகல.. அந்த சிஸ்டத்த சரி பண்லாம்னு உக்காந்தா.. ஒ.எஸ். (இயங்குதளம்) காலி.. அதுக்கு சி.டி. இல்ல..
செம காண்டாயிடுச்சு.. சரின்னு சாப்ட கேண்டீன் போனா சாப்பாடு காலி... சோறில்ல.. வெளில போய் சாப்டுட்டு.. வேற சிஸ்டம்ல சரி இன்னைக்கி பதிவாவது போடுவோம்னு பாத்தா.. NHM இல்ல... அத download ன்னு அமுக்கம்போது கரெண்ட் காலி.. upsலயும் பவர் இல்ல.....
காண்டாயி வீட்டுக்குவந்து .. அடப் போங்கடா. பதிவாவது ஒன்னாவதுன்னு.. புக் படிச்சேன்.. அதுல பருத்தி வீரன் படம் கலைஞர்லன்னு போட்டு இருந்தது.. சரி பாப்போம்ன்னு போட்டா.. டி.வி. எல்லாம் புள்ளி புள்ளியா வந்துச்சு... என்னடான்னு இன்னோரு ரூம்ல இருக்குற டி.விய போட்டா அங்கயும் அதே கதை... கேபிள் டி.விக்கு போன் போட்டா.. போன் போகல.. போன்ல காசில்ல.. சரின்னு கீழ ஓடிபோய் போன்ல காசு போட்டா.. போன் ஆஃப் அயிடுச்சு.. காலைலேர்ந்து சும்மா சுத்திக்கிட்டு இருக்குறதால... சார்ஜ் இல்ல..
சரி பாதி தூரம் வந்துட்டோம்.. முழுதூரமும் போய் கேபிள் ஆபரேட்டர்டயே சொல்லிடலாம்ன்னு போய் சொன்னா.. அவர் ஏதோ கனெக்ஷன் இல்லன்னு சொல்லி தேடிட்டு இருக்குறாரு.. டி.வி. நாளைக்குத்தான்...
இவ்ளோ கொடுமைக்கு அப்புறமும்.. சரின்னு கம்ப்யூட்டர் போட்டேன்.. (போடும் போதே உள்ள ஒரே அல்லு...) ஒழுங்கா பூட் ஆயிடுச்சு.. கரெண்டும் போகல... கிபோர்ட் மவுஸ் எல்லாம் ஒர்க் ஆச்சு...
ஹையா ... சரி.. எல்லாம் சரியாயிடுச்சுன்னு சுறுசுறுப்பா bloger உள்ள வந்து.. திருப்பியும் கரெண்ட் போகுதான்னு பாத்து.. ஒன்னும் போகல.. சரின்னு டைப் பண்ண நெனச்சா...
அடப்பாவிகளா... என்ன பதிவுக்கான மேட்டர்னே மறந்து போச்சு இந்த
நொள்ளைல.... :-)
சத்தியமா செம காண்டாயிடுச்சு.. ஏதாவது எழுதியே ஆகனும்டா மவனேன்னு உண்மைலேயே உக்காந்து யோசிச்சு எழுதுனேன்...
வடிவேலு பாணில சொன்னா..
”எல்லாமே கடுப்பேத்துது மை லார்ட்...”
24 comments:
சரி.. சரி... இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகலாமா...
வாழ்க்கைன்னா இப்படி அப்படி இருக்கத்தான் செய்யும்...
அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க..
ஹை... மீ த ஃபர்ஸ்ட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்
2012ல உலகம் அழியப் போகுதாமே..!
வெட்டிகள் மட்டும் படிக்கவும்...
படிச்சாச்சு.
இதுவே நீ உளியின் ஓசை போட்டிருந்த டென்ஷன் ஆயிருப்பியா??
வெட்டிகள் மட்டும் படிக்கவும்...
படிச்சாச்சு.
இதுவே நீ உளியின் ஓசை போட்டிருந்த டென்ஷன் ஆயிருப்பியா??
//2055 தாத்தாக்கள் : நாங்கள்ளாம் அந்தக் காலத்துல ஒரு “பொண்ணத்தான்” சைட்
அடிப்போம் .//
அப்படியா...,
//எல்லாமே கடுப்பேத்துது மை லார்ட்...//
இந்த பதிவையும் சேர்த்தா சொல்றீங்க?
//2055 தாத்தாக்கள் : நாங்கள்ளாம் அந்தக் காலத்துல ஒரு “பொண்ணத்தான்” சைட் அடிப்போம் .. கல்யாணம் பண்ணிப்போம்.. .. இப்ப என்னடான்னா ...,,//
எந்தக் காலத்திலும் இப்படிப் பொய் சொல்றது நிற்காது...இல்லே...
ஓடி வந்து ஓட்டுப் போட்டுட்டேன்...
கடைக்குட்டியின் கடையில் டீ நல்லாதான் ஆத்துரேல்..
http://niroodai.blogspot.com
பதிவு நல்லா இருக்கு.
டிஸ்கி...
மரண மொக்கைடா சாமி..
டீ ஆத்துறேன்னு சாதாரணமா சொல்லிட்டு இப்ப 'புல் மீல்ஸ்' போட்டு இருக்கீங்க பாஸ் !!!
சரி.. சரி... இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகலாமா...
வாழ்க்கைன்னா இப்படி அப்படி இருக்கத்தான் செய்யும்...
அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க..//
:))))))
ஹைய்யோ எவ்ளோ சந்தோசம் இராகவன் அண்ணே...
நீங்க ஃப்ர்ஸ்ட் வந்தது எனக்கு சந்தோசம்..
தொடரட்டும் உங்கள் அன்பு :-)
வாய்யா.. டக்ளஸு.. பத்த வைக்கிறதே வேலையா போச்சு..
*****************
@ ஜெட்லி
உளியின் ஓசை போட்டிருந்தா செம சந்தோசம் தல.. பதிவுக்கு மேட்டர் சிக்கீருக்கும்ல.. :-)
@சுரேஷ்(டாக்டர்)
என்ன தல அப்டியான்னு கேக்குறீங்க??
பின்ன இல்லயா??
*************
@சங்கர்,
ஒத்துக்குறேன்.. நீங்க நக்கல் பதிவர்ர்னு ஒத்துக்குறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்..
நன்றி sriram :-)
***********
நன்றி அன்புடன் மல்லிக..:-)
***********
@ kishore
இந்த மரண மொக்கை டிஸ்கிய படிச்சு பின்னூட்டம் போட்டா நீங்க எவ்ளோ வெட்டியா இருப்பீங்க பாருங்க ?? :-)
****************
நன்றி வேதநாயகம்.. இப்படி நண்பர்கள் தரும் உற்சாகம் தொடர்ந்து எழுத வைக்கும்.. :-)
@ புதுகை தென்றல்
:-):-)
நகைச்சுவை கலக்கல் !
ரசித்தேனப்பா மொக்கையும் சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க...
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகலாமா...
LESS TENSION MORE WORK
MORE WORK LESS TENSION
நன்றி கோவி.கண்ணன் அவர்களே...
*********
வங்க வஸந்தண்ணா... நன்றி அன்பிற்க்கு..
**********
பேநாமூடி.. ரசித்தேன் கமெண்ட்..
Post a Comment