அர்ஜூன் அம்மா யாருன்ற மாதிரி...
இப்போவெல்லாம் இந்தத் திரட்டி இவக நடத்துறாக...
அந்தத் திரட்டி அவக நடத்துறாகன்னு கெளப்பிவிடுறதுதான் fashion ...
எல்ல தளத்த பத்தியும் பிரிச்சு மேய்ஞ்சாச்சு.... அதனால என் பங்குக்கு புது தளமான தமிழர்ஸ் மேலுள்ள சந்தேகங்கள சொல்லிட்றேன்...

சந்தேகம் நெம்பர் ஒன்னு --> டாக்டர் சுரேஷ்

ஒழுங்கா டாக்டர் தொழில் பாத்துட்டுருந்த இவரு .. ஏண்டா பவித்ராவின் காதல்.. சின்ன வீட்டின் பாடம்ன்னு டார்ச்சர பண்றாருன்னு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்,,,,
ஒரு வேள .. அமைதியா பதிவர் மாதிரி நடிச்சுக்கிட்டு.. பாட்ஷா படம் மாதிரி.. “நான் யாருன்னா...” அப்டீன்னு சொல்வாரோன்னு ஒரு சந்தேகம்...
(பாட்ஷா... டாடட்டடாடடன்..)
சந்தேகம் நெம்பர் ரெண்டு--> சக்கர சுரேஷ்

அண்ணி ஊருக்கு போயிட்டதால பதிவெழுத ஆரம்பிச்சேன்னு இவரு சொன்னப்பியே ஒரு டவுட்டு.... ஏன்யா.. அண்ணி ஊர்ல இல்லாட்டி சும்மா சமைச்சுட்டு தூங்க வேண்டியதுதானே???? இந்த ஒரு காரணமே இவர் மேலுள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறடுது.
(சக்கர இனிக்கிற சக்கர..)
சந்தேகம் நெம்பர் மூனு --> லோகு

நல்லா எழுதிட்டு இருந்த பையன்...திடீர்னு காணாமப் போயிட்டான்... அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றி அவனுடைய டக்னிக்கல் நாலேட்ஜும் காமிக்கிறான்... ஒரு வேள இவனா இருக்குமோ ???
(ஜன கன மன..)
சந்தேகம் நெம்பர் நாலு--> தமிழ் நெஞ்சம்

யப்பா.. இவரு டெக்னிக்கல் புலி... மொதல்ல இருந்தே இவருடைய பதிவுகள் தமிழர்ஸ்ல வந்துக்கிட்டு இருக்கு,,, ஏன்??? அட யாருமே சேராதப்ப கூட இவருடைய பதிவு இருந்துச்சுங்க... இவர்தான்னு 90% கன்ஃபார்ம் பண்ணிட்டேன்.. ஆனா ஏற்கனவே தமிழிஷ்,தமிழ் 10 இதுக்கெல்லாம் இவர்தான் ஓனரோன்ற சந்தேகம் இருக்குறதால இவர உட்ருவோம்... (benefit of the doubt always given to the accuset)ஸ்பெல்லிங் தெர்லபா...
சந்தேகம் நெம்பர் 5--> kricons
இதுவும் ஒரு டெக்னிக்கல் புலி... திடீர்னு வந்து புயல் மாதிரி எழுதிக்கிட்டு இருந்த இந்த புலி., திடீர்ன்னு காணாம போயிடுச்சு..
கடந்த 3 வாரமா இவரு எழுதல... நல்லா நோட் பண்ணுங்க.. தமிழர்ஸ் ஆரம்பிச்சு 2 வாரம்தான் ஆகுது..
இவர்தான்.. இவரேதான்..
சந்தேகம் நெம்பர் 6--> இராகவன் நைஜிரியா

இருமல் தாத்தா “லொக்கு லொக்கு”ன்னு இருமுற மாதிரி இவர் அடிக்கடி.. எனக்கு டெக்னிகலா எதுவும் தெரியாது ..டெக்னிகலா எதுவும் தெரியாது ..ன்னு சொல்லும் போதே சந்தேகம்...
இவர்தானோ ????
சந்தேகம் நெம்பர் 7--> பார்த்தது கேட்டதும் சித்து ,ஜெட்லி


திடீரென முழைத்துள்ள டெம்ப்ளேட் மாற்றங்கள்...
திடீரென முழைத்துள்ள ப்ளாக்குகளின் மேல் இவர்களின் அதீத காதல் ....
இள ரத்தம் வேற... இவங்கதானோ???
(அடப்பாவி.. தொடர் பதிவுன்னாலே என்னன்னு நீதானடா சொல்லி குடுத்தன்னு அவங்க ஃபீல் பண்றது புரியுது.. ஆனா கடமைன்னு வந்துட்டா.. யாருன்னு பாக்க மாட்டான் இந்தக் கடைக்குட்டி)
சந்தேகம் நெம்பர் 8--> ப்ரியமுடன் வஸந்த்

இந்தவார தமிழன்னு மொத மொத அறிமுகப் படுத்துவாங்களாம்...
அதுல இப்போதான் எழுத வந்த வஸ்ந்த்த கூப்புடுவாங்களாம்... வஸந்த் அண்ணாவுக்கு பொண்ணு பாக்குறாக... பொண்ணு வீட்டுல நாந்தான் கெத்துன்னு சொல்றதுக்காக எல்லா தளத்துலயும் அவர் படத்த வர வெச்சுட்டாரு..
(அண்ணா.. மாட்னீங்களா????)
சந்தேகம் நெம்பர் 9--> வணங்காமுடி

அக்டோபர்ல எழுத வந்துட்டு திடீர்னு காணாம போயிட்டு.. இப்போ திடீர்ர்னு திரும்பி வந்து இருக்காரு.. இவரோ ???
(’நான் இல்ல’ன்ற மாதிரியே பாக்குறாரு )
சந்தேகம் நெம்பர் 10--> கடைக்குட்டி

கம்ப்யூட்டர் எஞ்சினியர்.
புதுசா ஏதாவது செய்யுறதுல ஆர்வம்...
காசு பாக்கனும்ன்னு வேற எண்ணம்....
அட நானாக்கூட இருக்கலாமோ ???
(இதுதான உன் ஆசை.. இப்போ சந்தோசமா??)
டிஸ்கி
வாலு , கார்க்கி, தாமிரா போன்ற மூத்த பதிவர்கள் கோச்சுக்க கூடாது....
உண்மையான ஓனரே...
உங்க பேர நான் மறந்து இருந்தா.....
நீங்களே வந்து சரண்டர் ஆயிடுங்க... பின்னூட்டத்துல ... :-)