இவர்களுடன் நானும்... (என்னை நம்ம
கூப்பிடுவாருன்னு நான் நெனச்சுப் பாக்கல... நன்றி தல..) 32 கேள்விகள்.. கொஞ்சம் பெரிய பதிலகள்தான்.....ஓவர் டூ (நான்) ஓவரா பேசப்போகும் பதிவு
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனக்கு 5 அண்ணன்,2அக்காள்... நான் கடைசி.. கடைக்குட்டி... பதிவுகள் எழுதனும்னு நெனச்சப்போ இந்தப் பேரத் தவிர வேற எதும்தோணல...
ரொம்பப் பிடிக்கும் இந்தப் பெயரை... ஏன்னா.. பெயரப் பாத்ததும் ஒரு இன்னசன்ஸ் (ஒன்னும் தெரியாத மூஞ்சி) நியாபகம் வரும்.. அது நமக்கு வசதியும் கூட.. (தவறுகள் மன்னிக்கப்படும்.)
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கிடைத்தது கையை விட்டு நழுவியதால் சமீபத்தில் அழுதேன்.. இனிமேல் அழும் உத்தேசமில்லை..
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
அம்புட்டு அழகா இருக்குங்கோவ்!!! படிக்காம போனாலும் கையெழுத்தாலேயே பாஸான தேர்வுகள் பல.. ஆனா கணிதம் கொஞ்சம் கஷ்டப்படும்(அங்க நம்ம கையெழுத்து செல்லாதே!!!!)
4.பிடித்த மதிய உணவு என்ன?
இனிமேல் கிடைக்காத ”நண்பர்களின் டிபன்பாக்ஸ்” (இப்போதாங்க காலேஜ் முடிஞ்சுச்சு..) மிச்சபடி அம்மா சமைக்கும் எல்லாமே!!!
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நம்ம வாய் ஒட்டாதுங்க... பேசிட்டே இருக்கும்.. அதனால் புதிதாய் பழகுவது கஷ்டமல்ல...
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
நகரத்தில் வளர்ந்த பையன்.. ஆதலால் அருவிலாம் பாத்ததுகூட இல்லை...
கூவம் கலக்கும் மெரினாவில் குளிக்கப் பிடிக்கும் என பொய் சொல்லவும் மனமில்லை...
(நீ குளிப்பியா மாட்டியா?? போன்ற பின்னூட்டங்கள் தடை செய்யப்படுகிறது)
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகத்தோற்றம்.. (கலர் அல்ல...)
அகத்தின் அழகல்லவா அது...
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
எத செஞ்சாலும் ஏதாவது தனித்தன்மையுடன் செய்யனும்னு தோனும்.. அது புடிக்கும்...
புடிக்காததும் அதுதான்.. எப்போ பாத்தாலும் ஏதாவது புதுசா செய்யனும்னு நெனச்சுக்கிட்டே இருந்தா????
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சரிபாதியாக நான் என் நண்பர்களைக் கருதுகிறேன்,,,
புடிச்சது :- என்னை சகித்துக் கொள்வது
புடிக்காதது:- நில் (இது இங்கிலிபீச் ”நில்”லுங்க!!)
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
கல்லூரியில் கிடைத்த என் தங்கை கல்லூரியுடனே சென்று விட்டதையும்...
கல்லூரி,பள்ளி நண்பர்களும் இல்லாதது வருத்தமே ...
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெள்ளை...
(நல்லவேளை என்ன ஆடைன்னு கேக்கல...)
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
”திமிருக்கு மறுபெயர் நீதானே...
தினந்தினம் உன்னால் இறந்தேனே..”
என்னும் வரிகள் பாடிக்கொண்டிருக்கிறார் யுவன் ... (sms பாடல்)
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?]
கறுப்பு வெள்ளை
(பென்சில் கலரோ ?? ஏதோ சொல்லனுமேன்னு சொன்னது . ஆராய வேணாம்)
14.பிடித்த மணம்?
குழந்தைகள் மேல் அடிக்கும் கலப்படமில்லாத மணம்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
இது கொஞ்சம் பெரிய பதில் சொல்லியே ஆகனும்
அ) சக்கரை~
www.sakkarai.com பிரபல பதிவர் வரிசையில் சேர்ந்து விட்டார்.. ஆனாலும் எப்போ கேட்டாலும் உதவிகள் கிடைக்கும்... ஜாலி பேர்வழி..
எங்க இருந்துதான் இப்பிடிலாம் பின்னூட்டம் போடுறாரோ.. வித்தியாசமான பார்வை.. தொடர வாழ்த்துக்கள்.....
என் வயசுப் பையன்... என்னைவிட எழுத்தில் ரௌத்திரம் ஜாஸ்தி.. விஜய் அஜித்னு சண்டைல எறங்குனது புடிக்கல.. நல்லா வருவான் என் மாப்ள..
ஈ)
ஜெட்லி(san sriram சித்து natraj)பார்த்ததும் கேட்டதும்னு கலக்குறாங்க பசங்க.. இருவது வயசு ஆர்வக் கோளாருகள்... ஜாலி கேடிகள் என்னைபோலவே :-)
kricons,சொல்லரசன்,அப்பாவி தமிழன்,புது மாப்பிளைகள் கலையரசன்,தேனி சுந்தர்லாம் கூப்பிடனும்னு தோணுது.. ஆனா ஏற்கனவே 4 பேர கூப்டாச்சு... நீங்க பாத்துக்கங்க மக்கா!!!
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
காலெஜ் பத்தி கலக்குவாரு டாக்டரு... நெம்ப புடிக்கும் அவரொடைய இந்தத் தொடர்...
17. பிடித்த விளையாட்டு?
பதிவெழுதுவதுதான்...
18.கண்ணாடி அணிபவரா?
ஹ்க்கும்.. ஏற்கனவே அழகு இதுல கண்ணாடி வேறயா ?? இல்லங்கப்பா.....
19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மனசைத் தொடனும்..
(மசாலாவோ,காமெடியோ,சீரியஸோ.... ஏதுவா இருந்தாலும் பரவாயில்லை)
20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க - நண்பர்களுடன்
அயன் - டிவிடி
finding nemo - டவுன்லோட் பண்ணி கணினியில்
21.பிடித்த பருவ காலம் எது?
பள்ளி,கல்லூரிக் காலம்...
(இதுக்கு மேல வேற எந்தக் காலமும் இன்னும் வரலீங்க..)
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஹாய் மதன்
இப்படிக்கு சூர்யா மனப்பாடம் பண்ணும் அளவுக்கு படிச்சிட்டு இருக்கேன்
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மாத்தனும்னு தோணும் போதெல்லாம்
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
குழந்தைகளின் குரல் --பிடித்த இசை (சத்தமல்ல)
வாகன இரைச்சல், ஆனந்த் சார் குரல்ன்னு எவ்ளவோ புடிக்காத சத்தமிருக்கு
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
காலேஜ்தான்
(40 கி.மீ வீட்டிலிருந்து தினமும் பஸ் பயணம்)
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இதுதான்னு சொல்ல முடியாது எல்லாத்தையும் அரகுறயா செய்வேன்...
உண்மையான பதில் தெரியலிங்க!!!
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
துரோகம்...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோவம் வந்தால் வெளிவருவான்
29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
எனக்கே எனக்கான என் ரூம். சுற்றுலாவெல்லாம் ஆர்வமில்லீங்க
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
துறையில் உயரங்களையும்.......
தனி மனிதானாக உறவுகளையும் சேர்ப்பவனாக ...
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
மனைவியே இல்ல.. இதுல காரியம் வேறயா ??? யாருய்யா இதெல்லாம் சின்ன பசங்கள்ட கேக்குறது ??
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
உங்களுக்கு செரின்னு படுவதை
அடுத்தவர்களை காயப்படுத்தாமல்
வாழ்வது
(ஒரு வரிதாங்க கவித கவித மாதிரி..)
படித்ததற்க்கு நன்றி!!!
எல்லோரையும் படிக்க வைக்க போடுங்கம்மா ஓட்டு.....