
இத இப்ப ஏன் நான் சொல்லுறேன்னா... இந்த காட்சி வரும் போது.. பிணமாக இருக்கும் நாகேஷ் கையில ரோகிணியும்,ஊர்வசியும் சிகெரட் குடுத்து .. அவர் சிகெரட் குடிக்கிற மாதிரி செய்வாங்க... இந்த சீன பலமுற பாத்து இருந்தாலும் அன்னக்கி கலைஞர் டிவியில பாக்கும்போது பகீர்னு இருந்துச்சு..
பிணத்தோட கைல சிகெரட் இருக்கும் போது புகைப்பிடித்தல் உடல் நலத்திற்க்கு தீங்கு!! அப்படீன்னு கார்டு போட்டாங்க....
சின்ன வயசுலேர்ந்து பல முற இந்த சீன பாக்கும் போது தோணாத ஒரு விஷயம் இவங்க கார்டு போட்டு
காட்டும் போதுதான் உரைக்குது...ஐயா .. ரொம்ப மோசமான வில்லன் வரும்போது அந்த கார்ட போட்ரீங்க .. ஓ.கே...
இந்தமாறி யாருமே கவனிக்க முடியாத சீன்லயெல்லாம் போட்டு உங்க கடைமை உணர்வ காட்டணுமா???
என்ன கேட்டா இந்த எச்சரிக்கை குடுக்குற கார்டே தப்புன்னு சொல்லுவேன்.. யாருக்காக இதை டி.வி
சீரியல்லயெல்லாம் போடுறாங்களோ!!!