May 24, 2011

கில்லி

Hi Gilly,

First of all congratulations for the onsite opportunity. You have cleared the client interview and now you can initiate the process with the VISA desk for your China visa.

For other discussions, I have arranged for a meeting, do come there with all your queries.

Regards,

Santhosh.

கில்பர்ட்க்கு வந்திருந்த மெயில்தான் இது.. 2-2-2010 கண்டிப்பா அவன் மறக்க மாட்டான்.. இன்னைக்குத்தானே இத்தனை நாளா ஆசப்பட்டது நடக்கப் போகுது..

“The subscriber cannot be reached at the moment”

”இந்த ஆளு எங்க போனாருன்னு தெரியலியே.. ” அவன் ஃபோன் பண்றது அவனின் தந்தைக்கு. கதை எழுதுறதால தந்தைன்னு சொல்றேன்.. அந்த குறைந்த பட்ச மரியாதைகூட அந்த மனுஷனுக்கு இல்ல இவங்கிட்ட,.

கில்பர்ட்- சிறு குறிப்பு:

உயரம்: நார்மல்..

வயது : நார்மலா கல்யாணம் பண்ணிக்கிற வயது

எடை : நார்மல்...

நல்லா சொல்றீங்கடா டீடெயில்லுன்னு நீங்க சொல்றது கேக்குது.. ஆனா அவன் சில விஷயங்கள்ல அப்நார்மல்..

பெயர் : கில்பர்ட் கிறிஸ்டோபர் ஆரோக்கியசாமி . D.M.

தந்தையின் பெயர் : தர்மலிங்க முதலியார்

something wrongனு நீங்க நினைக்கிறது கரெக்ட்டு.. அப்பா இந்து.. பையன் கிறீஸ்டியன்..

அம்மா இல்ல.. இவனுக்கு இவன பெத்தவன் மேல பாசம் இல்ல.. அதென்னவோ தெரியல.. இவங்க அப்பா கேட்ட ஒரு கேள்விக்காகவே கிறிஸ்டியனா மாறிட்டு வந்தான்..

‘கோவிலுக்குலாம் போக மாட்டியாடா ?’

இந்த வார்த்தைய கேட்ட வுடனே முருகன் கோவிலுக்கு போகாம மாதா கோவிலுக்கு போயி அதுவரை

தர்மலிங்க முதலியாரின் மகன்

செல்லத்துரை முதலியாராக இருந்தவன்..

கிறித்துவனாக மாறினான்.. கண்டிப்பாக கிறித்துவின் கோட்பாடுகள் இவனுக்கு தெரியாது.. தெரிந்து கொள்ளவும் இஷ்டமில்லை..

பெயர் தாங்கி கிறித்துவனாக இருக்க விழைந்தான்..

ஆங்.. மறந்தே போச்சே.. அன்று முதல் தன் பெயரை தானே மாற்றிக் கொண்டான்..

“கில்பர்ட் கிறிஸ்டோபர் ஆரோக்கியசாமி .DM.” (அப்பா பெயரையும் பாத்த முடியாதில்லையா..)

செல்லத்துரையைவிட இது அவனுக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது.. யாருக்கும் இல்லாத பெயர் தனக்கென்று தானே வைத்துக் கொண்டதை எண்ணி புளங்காகிதம் அடைந்தான்..

அவனை பெற்றவன் புண்பட்டு போனான்..

கில்பர்ட்க்கு புத்தி சுவாதீனம் இல்லை என்று ஊரெல்லாம் பேச்சு.. அதுக்காகவே அவன் படித்தான்.. வெறி கொண்டு படித்தான்...

அவன் கில்லியாக மாறிய பிறகு அவனின் தந்தை அவனை பார்ப்பதே இல்லை.. பார்க்கும்படி சூழ்நிலையை அவர் அமைத்துக் கொள்வதில்லை..

கில்லி சொந்தக் காசில் படித்து .. 2,3 கம்பெனிகள் மாறி இன்று 5+ Employee..

in a reputed IT company..

***********

”Shall we go for lunch ??”

communicator ல் ஆனந்தி ping பண்ணினாள்.. கில்லியும் அவனது பழைய வாழ்க்கையை இவ்வளவு நேரம் அசை போட்டது போதுமென்று.. நடக்கலானான்..

லஞ்ச் பக்கத்திலுள்ள ஆந்திரா மெஸ்ஸில்..

கில்லியை மனிதனாக மதிக்கும் ஒருத்தி இந்த ஆனந்தி.. நம்ம கில்லியும் மதிச்சு பேசுற ஆள் இந்த ஆனந்தி..

ஃபிகர்னா உளுந்துருவாய்ங்க நம்ம பசங்கன்னு நீங்க சொல்றது கேக்குது.. ஆன நம்ம கில்லி அப்பிடிப்பட்டவன் இல்ல.. அவனுக்கு பொண்ணுங்கன்னா புடிக்காது... அவன் மதிக்கிறவங்கன்னு யாரும் இல்ல.. அந்த லிஸ்ட்ல ஆனந்தி சேந்ததுக்கு காரணம் ஒன்னு இருக்கு..

அவதான் முறைப்படி இந்த ஆன்சைட் ஆப்பர்சுனிட்டிய எடுத்து இருக்கனும்.. அவ முடியாதுன்னு சொன்னதுனாலதான் நம்ம ஐயா போறாரு,.

அவ முடியாதுன்னு சொன்னதுக்கு என்ன காரணமோ தெரியல.. ஆனா செல்லத்துரையாய் இருந்து ஒரு காரணனமும் இல்லாமல் கில்பர்ட்டாகவும்.. செல்லமாக கில்லியாகவும் மாறிய அவனுக்கு அவள் இவனுக்காகத்தான் விட்டுக்கொடுத்ததாய் நினைப்பு..

மனுசனுக்கு லைட்டா லவ் ஃபீலிங்கி,..

ஆந்திரா மெஸ்ஸை அடந்தனர் இருவரும்.. அந்த ஆண்கள் கூட்டத்தில் ஒரு பெண் வந்து உணவருந்துவதென்பது முடியாத காரியம்..

பயபுள்ளைங்க பார்வையிலேயே கொண்னுடுவாய்ங்க..

அவ அதையெல்லாம் கண்டுக்கிறதா தெரியல..

”சொல்லுங்க மிஸ்டர் கில்லி சான்...”

“சானா??”

“ஆமா.. சைனாலாம் போறீங்க..

”ஹா ஹா அத சொன்னியா..” பேசிக்கொண்டே உணவை ஒரு பிடி பிடித்தனர்...

“ஹேய்.. வாட் அபவ்ட் யுவர் விசா யார் ??”

“யா.. வில் அப்ளை இன் 2 டேஸ்... மே ஸ்டாட்ர் இன் அ வீக் டைம் ஐ கெஸ்..”

“ஃபைன்.. ஃபைன்.. ஹேய்ய்.. பீ கேர்ஃபுல் மேன்.. டாக் டூ ஹெ.ச்.ஆர். அண்ட் கன்ஃபார்ம் அபவுட் யுவர் ஸ்டே அண்ட் ஆல்... எஸ்பெஷலி அபௌட் யுவர் பே மோடு..”

“ஷோர்..” இப்ப ஏன் திடீர்னு வெள்ளக்காரி மாதிரி பீட்டர் விடுறான்னு தெரியல.. நம்மாளும் சமாளிச்சாரு...

“லாங் டர்மா ??”

“இல்லபா.. ஷார்ட் டர்ம்தான் நைனக்கிறேன்.. ஒன்னும் சொல்ல மாட்றாங்க.. பாப்போம்.. இப்போதைக்கு 3 மாசம்...”

”ஃபைன்.. ஃபைன்.. 3 மாசம் முடிச்சதும் வருவல்ல.. உனக்கு ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.. நான் சொல்லனும்.. உங்கிட்ட பேசணும் கில்லி..”

கில்லிக்கு புரிந்தது .. இத சொல்ல ஏன் இன்னும் 3 மாசம்.. இருந்தாலும் ஏதோ நெனச்சுட்டு.. அங்க என்ன நடக்குதுன்னே பாக்கல..

ஆனந்தி ஃபோன் பண்ணு என்று சைகை காட்டிக்கொண்டே சென்றாள்..

கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத கண்கள் இரண்டால் பாடலே அங்கு ஓடிக்கொண்டு இருந்தது...

”சார் பில்” என்னும் குரல் அவன் டூயட்டிலிருந்து அவன் மனதை வெளியே செலுத்தியது...

‘ந்த பொண்ணுங்க ஏன் எங்க போனாலும் பில்ல மட்டும் பையன் தலையில கட்டிற்றாங்கன்னு தோணுச்சு...ஊருக்கு போயிட்டு வந்ததும்.. தன் கதையை அவளிடம் சொல்லனும்னு தோனுச்சு.. அவன் அப்பாவ அவகிட்ட நல்லா திட்டனும்னு தோனுச்சு... இன்னும் என்ன என்னவோ ஓடிச்சு அவன் மண்டையில.. அவன் அப்பாவ அவன் கடைசியா பார்த்ததும் ஓடுச்சு,,.

**************************

“நீயெல்லாம் உருப்படவே மாட்ட...” என்னு தர்மலிங்க முதலியாரின் குரல் கேட்டது அவனுக்கு..

7 வருடங்களுக்கு முன்னால் இது. கில்லி காலேஜ் 3ஆம் வருசம் படித்துக் கொண்டிருக்கும் போது..

அப்போதே அறிவிக்கப்படாத அநாதைதான் நம்ம செல்லத்துரை.. அவன் இன்று வெறுக்கும் அளவுக்கு தர்மலிங்க முதலி ஒன்னுமே செய்துவிடவில்லை.. அவருக்கும் இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று தெரியாது.. அவனுக்கும் இதற்க்கு என்ன காரணம் என்று தெரியாது.. ஆங்.. சொல்ல மறந்து விட்டேன்..

தர்மலிங்கம் , செல்லத்துரை விரும்பும் படியும் எதுவும் செய்துவிடவில்லை...

இந்த உருப்படவேமாட்ட என்னும் உரையாடல் நடந்தது அவன் 3ஆம் வருடம் படிக்கும் போதுதான்... ஏனென்றால்.. அந்த வயதிலேயே நமது கில்லி அவனது சொத்தை பிரித்துக் கேட்டான்..

“இங்க பாரு.. நீ மண்டைய போட்ட பின்னாடிதான் எனக்கு சொத்துன்னா.. அது எப்ப நடக்கும்னு தெரியல.. இப்பவே குடு...”

அவன் கேட்பதற்க்கு எந்த காரணமும் இல்லை... அன்று வரை அவன் என்ன கோமாலித்தனம் செய்தாலும் அவனுக்கு வேண்டுமென்ற காசு கண்டிப்பாக அவனுக்கு தரப்படும்.. பையன் முழுதாகவே கேட்டான்..

“வேணாடா.. வேணாடா.. அப்பன் வயித்தெறிச்சலுக்கு ஆளாகாத.. செல்லத்தா.. உங்க ஆத்தா பேர உனக்கு வெச்சேனேடா.. அவ செத்தாலும் அவ பேர உனக்கு வெச்சு உன்ன கண்ணா பாத்துக்கிட்டேனேடா... இப்பிடி பேர மாத்தி.. மதம் மாறி.. நம்ம சாதி சனம் முன்னாடி தல குனிய வெச்சாலும் உனக்கு சோறு போடுறேனேடா.. அந்த நன்றி கொஞ்சம்கூட இல்ல உனக்கு.. இன்னுமில்ல.. இனிமே உனக்கு இங்க எடமில்லடா.. கெளம்பு...”

அப்பன்கள் அழுதால் கண்டிப்பாக பிள்ளைகளுக்கு கண்ணில் நீர் நிற்கும்..

ஆனால் கில்லிக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது.. ஏற்கனவே சொன்னேனே... கில்லிக்கு.. :JUST NOT THERE...”

அதற்கப்புறம் அவன் தர்மலிங்கத்தை பார்க்கவே இல்லை.. அவர் என்ன செய்கிறார் என்ற உணர்வும் இல்லை.. இந்த முறை சைனா போகிறோம் என்றதும்..

‘பாத்தியா .. நீ உருப்படாம போவேன்னு சொன்ன.. நான் ஊர் விட்டு ஊர் போறேன்னு” சொல்லிட்டு கெளம்பனும்னு நெனச்சான்.. முடியல.. அதாவது சந்தர்ப்பம் அமையல..

பாருங்களேன்.. கில்பர்ட்டின் ஃப்ளாஸ்பேக்க பாத்துட்டு வர்றதுக்குள்ள அவன் கெளம்புற நாளே வந்துடுச்சு,..

********************************

அன்னைக்கு நைட்டு 12 மணிக்கு ஃப்ளைட் அவனுக்கு.. அதனால அன்னைக்கும் ஆபீஸ் வந்தான்..

வேற எவனாவது ஆன்சைட் கெளம்புனா ஆஃபீஸ் ரெண்டாயிடும்.. இவனுக்குன்னு எந்த செட்டும் இல்ல.. ‘சிடு மூஞ்சி’ ‘மாங்கா’ போன்ற சிறப்பு பெயர்கள் இருக்கு....

சோ காலைல வந்ததும் போய் டிக்கெட்ட கலெக்ட் பண்ணினான்.. ஃபார் எக்ஸ் கலெக்ட் பண்ணினான்.. ஹெச் ஆரிடம் பேசினான்.. மேனேஜரிடம் பேசினான்..

ரொம்ப வேல பாத்த மாதிரி இருக்குல்ல.. மணி 11.30 தான் ஆகி இருந்தது. எல்லாத்தையும் முடிச்சாச்சு.. என்ன பண்றது... ஆனந்தியும் இன்னும் வரவில்லை..

நெட்டை திறந்தான்..

http://www.gmail.com

http://www.faecbook.com

இந்த ரெண்சும் இல்லைனா கண்டிப்பா பெஞ்சுல உள்ள எவனுக்கும் பொழுது போகாது. . நான் ஏற்கனவே சொன்ன மாதிரிகில்லிக்கு நண்பர்கள்னு யாரும் இல்லை.. அதனால் fbla மத்தவங்க status message பாத்துட்டு இருந்தான்..

அன்னைக்கு அவன் ஆஃபீஸ் நெட் படு ஸ்லோ.. “f***ing net”

http://www.thatstamil.com

இது அடுத்து நம்ம மக்கள் செய்தி தேடும் இடம்... கலைஞருக்கும் ஜெயலலிதாவிற்க்கும் நடக்கும் அறிக்கைப் போர் நடந்து கொண்டு இருந்தது..

பாதிதான் லோட் ஆகி இருந்தது.. சைனாவில்..............................................

அய்யோ இதுக்கப்புறம் லோட் ஆகல..

நம்மாளுக்கு பக் பக்னு இருந்துச்சு... அய்யோ என்னாச்சொ ஏதாச்சொன்னு இருந்துச்சு.. சொந்த ஊருக்கு ஏதோ நடந்த மாதிரி ஆயிட்டான்... ஹா ஹா..

நம்ம பசங்க ஆன்சைட் போக போற ஊர பத்தி ஒரு லைன் செய்தி வந்தாலும் அதப்பத்தி விசாரிக்காம போக மாட்டாய்ங்க..

“சைனாவின் பெல் லெபாரட்டரி தடைசெய்யப்பட்டது,...”

10-2-2010 பெய்ஜிங்கில் சட்ட விரோதமாக இயங்க வந்த பெல் என்னும் ஆராய்ச்சி மையம் மூடப்பட்டது.. .................................................................................

அவனுக்கு முக்கியமாக எதுவும் படவில்லை.. அப்பாடா என்றிருந்தது.. பெய்ஜிங் ஏர்போர்ட்டுக்கு எதுவும் இல்லாத வரைக்கும் இவனுக்கு ஒன்றும் இல்லை..

”ஹே ஹாய்.. குட் மார்னிங்.. “ ஆனந்தி வந்தாள்.. lakhme வாசம் வரும் போதே தெரியும் இவனுக்கு..

”யா குட் மார்னிங்..”

“அட என்னப்பா.. ஒரே சைனா நியூஸா இருக்கு உன் ஸ்கிரீன்ல.. கில்லி சானா மாறிடுவ போல,...” ஆனந்தி சிரித்தாள்..

இந்தப் பெண்கள் ஏன் இப்படி இருக்குளால்களோன்னு இருந்துச்சு இவனுக்கு.. திடீர்ன்னு உசுர குடுக்குற மாதிரி பேசுறதும்.. திடீர்னு உசுர எடுக்குற மாதிரி பேசுரதும்.. திடீர்ன்னு இந்த மாதிரி இயல்பா அழகா பேசுறதும்...

அவன் கெளம்புகின்ற கடைநாள் என்பதால் அந்த அறிவிக்கப்படாத காதல் ஜோடி வெளியில் சென்று கொண்டு இருந்ததும்.. அவர்கள் அருந்திய ஜூஸ்களும் உணவும் இந்த கதைக்கு தேவையில்லாதது...

ஆக்சுவலி.. கதைக்கே ஆனந்தியின் கேரக்டர் தேவையில்லைதான்.. இருந்தாலும் இந்தக் கதையின் 2ஆம் பாகம் எழுதினால் அவ கேரக்டர டெவலப் செய்யலாம்னு இருக்கேன்.. சரி சரி.. முதல் பாகத்தின் முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்வோம்...

இரவு வந்தது.. அந்த பிரமாண்ட அண்ணா பன்னாட்டு முனையகத்தின் உள்ளே அவன் போக போகிறான் என்பது அவனுக்கு இயல்பாய் ஒரு பதற்றத்தை உண்டு பண்ணியது..

அவனை வழியனுப்ப யாரும் வரவில்லை.. ஆனந்தி வரவில்லை.. நைட்டு லேட்ட கெள்ம்புதுப்பா உன் ஃபைளைட்.. அதான்..ன்னு அவளே ரீசனும் சொல்லிக் கொண்டாள்..

அவன் ரூமிலும் யாருமில்லை.. நம்மாளு தனியாகத்தான் இருக்கிறான்.. நண்பர்கள்.. மூச்ச்ச்...

ஸோ.. கில்லி கவனமாக அவனது birth certificate முதல்.. degree certioficates.. invite letters.. ticket எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டான்..

Gilbert Christofer Arokyasaami என்னும் பெயர் பொறித்த passoprtன் முதல் பக்கத்தில் அவனது டிக்கெட்டை வைத்து கொண்டான்...

இது வரைக்கும் வாசல் வரையில் பார்த்து சென்ற விமான நிலையத்தினுள்.. கத்திப்பாரா ஜங்ஷனில் நின்று எட்டிப் பார்த்த விமான நிலையத்தினுள் நம்ம செல்லத்து... மூச்..கில்லி...

போர்டிங் பாஸ் வாங்கினான்.. இமிகிரேஷ்ன் கிளியர் பண்ணினான்.. செக்க்யூரிட்டி செக்ப்பும் முடித்தான்..

வெயிட்டிங் லவுஞ்சில் வெயிட் செய்தான்.. அன்று அவன் கற்றுக் கொண்ட பாடம்.. ‘மக்கள் சாரை சாரையாக சென்று கொண்டிருக்கும் வழியை பின்பற்றினால் போதும்.. ஃப்ளைட் ஏற பெரிசா ஒன்னும் தேவையில்லை...

ஃபளைட் ஏற இன்னும் 40 நிமிடம் இருந்தது.. அந்த கெளவனிடம் சொல்லிவிட்டு போக வேண்டுமென நினைத்தான்..

“subscriber cannot be reached”தான் இன்னும்...

ஃப்ளைட்டில் அமர்ந்தான்.. முதல் முறை ஃப்ளைட் ஏறும் உணர்ச்சி அலாதியானது.. அழகழகான ஏர்ஹோஸ்டஸ்.. வழிய வந்து அந்தப் பதுமைகள் பேசுவது கில்லிக்கு ரொம்பவே பிடித்து இருந்தது..

“வெலகம் ஸார்”ல இருந்து.. எல்லாம்.. எல்லாமே..

பற்க்கும் போது சற்று காது அடைப்பது போல் இருந்தது..கொய்ய்ய்ய்ய் என்னும் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது... முன்னாடி இருந்த டி.வி.யை எப்படி கையாளுவது என்று அவன் கற்று கொண்டான்.. ஹெட் செட்டை எங்கே மாட்டுவது என்பதில் இருந்து.. இங்கும் கில்லி ஒரு பாடத்தை கற்று கொண்டான்..

ஃப்ளைட்ல பக்கத்து சீட்ல உக்காந்து இருப்பவன் ஏற்கவனே போனவனா இருந்தா எவங்கிட்டயும் எதுவும் கேட்க தேவையில்ல.. அவன பாத்தே எல்லாம் கத்துக்கலாம்...

கண் மூடி படுத்தான்.. முந்தின நாள் தூங்கவில்லை.. ஏரோப்ளேன் பாற்கப் போகிற ஆசையில் தூக்கம் வரவில்லை..இப்போ சொல்லாமலேயே கண்ணு மூடியது..

“EMF activated..

EMF activated..

5 v.. 6.9 RPM.. over.

Loud and clear... set.. over.

Loud and clear.. “

கொய்ய்ய்ங் கேட்டுக் கொண்டிருந்த கில்பர்ட்டின் காதில் கண்டதெல்லாம் விழுந்தது..

யாரோ தொடுவது போல் இருந்தது.. கண் விழித்து பார்த்தான்..

“hi gilbert...”

இவனுக்கு தூக்கி வாரிபோட்டது.... பக்கத்திலும் யாருமில்லை.. ஃபளைட்டே காலியாக இருந்தது.. பணிப்பெண்களும் காணவில்லை.. எல்லாரும் எங்க போனீங்க..

“I said Hi Gilbert...” கூட கறுப்பு கண்ணாடி போட்டு அமர்ந்திருந்த ஆசாமி அதட்டும் வகையில் சொன்னான்...

“ஹெலோ.. யார் நீங்க.. யார் வேணும்.. ?? என்ன நடக்குது இங்க... ??”” ஒரு வேள கனவோன்னு நெனச்சான்.. கண்டிப்பா கனவு இல்ல.. கில்லி அவனை கிள்ளிக்கொண்டான்.. வலித்தது.. நன்றாகவே...

“wait.. wait.. $$$$$$$$$$$$%%%%%%%%%%^^^^^^^^^” அவன் ஏதோ ஒரு மொழியில் பேசினான்..

”language processing...”என்று அவனின் கண்ணாடியில் ஓடியது..

கில்ப்ர்ட் அப்படியே குதித்து விடலாமா என்றிருந்தது.. ஜன்னல் வழியே பார்த்தான்.. ஒரே இருட்டு...

“t-a-m-i-l” என்று அவன் கண்ணாடியில் மின்னியது...

“ஹோ தமிழா நீங்க.. வணக்கம்.... உங்களை வரவெற்கிறேன்..”

“ஹலோ.. நீங்க யாரு.... என்ன நடக்குது இங்க??”

மீ..??ஐ யம் கில்பர்ட்....”

“இங்க இருந்தவங்க எல்லாம் எங்க... ?? நான் எங்க இருக்கேன்.. ஏன் ஃப்ளைட் காலியா இருக்கு..??

“சீ,, சீ.. நாம இப்போ emf state ல இருக்கோம்.. அப்டீனா என்னன்னு கேக்காத.. சொன்னா உனக்கு புரியாது,.. நாம ஃப்ளைட்லதான் இருக்கோம்.. ஆனா இல்ல..”

“என்னய்யா காமெடி பண்ற... ஒருவேள நான் செத்துடேனா ?? இது சொர்க்கமா?? சொர்க்கத்துல ஏரோப்ளேன் செட்டு போட்டு இருக்கீங்களா?? ஹோ காட்.. என்னது இது...”

“ஹே ஹே ஹே.. ரிலாக்ஸ் மேன்.. ரிலாக்ஸ்...ஓ கே.. இத பண்ணு,, இந்தா என் கையில இருக்குற செயின அழுத்தி பிடி.. உனக்கு உன்ஃப்ளைட் தெரியும் பாரு...”

கில் அவன் கையை பிடிக்க பயந்தான்.. என்னங்கடா நடக்குது.. கனவுமில்ல.. சாகவுமில்ல.. என்ன எழவுதான் நடக்குது.. ஹோ.. தப்பு.. அபசகுனமா பேசக்கூடாது...

யோசிக்காமல் அவன் பக்கத்தில் இருப்பவன் கையில் இருக்கும் செயினை பிடித்தான்..

கிர்ர்... அவன் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.. ஒன்னும் புரியவில்லை.. ஓ.. பாக் டூ ஃப்ளைட்.. அவன் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவன் நல்லா இழுத்தி போத்து தூங்கினான்.. அதோ.. அந்த ஃபிகர்.. ஏர் ஹோஸ்டஸ்.. யாருக்கோ ஊத்தி கொடுத்து கொண்டு இருந்தாள்...

“ஹலெ........................”கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

“ஹே.. ஹே.. நோ நோ.. யூ கெனாட் டாக் மேன்...யூ கெனாட்... நீ சாகல.. நானும் சாகல.. பட் இந்த ஃப்ளைட்ல வர்ற எல்லாரும் சாகப் போறாங்க.. இன்குளூடிங் யூ...”

கில்பர்ட்டுக்கு இப்போதான் லைட்டா எதோ புரியுற மாதிரி இருந்துச்சு.. எது என்னவோ.. இந்த கோட் போட்ட படுபாவியின் கையில் திரும்பிப் போகிற சாவி இருக்கிறது.. அது வரைக்கும் நன்று...

“ஸோ ???? நான் என்ன பண்றது..”

“நீதான் கில்பர்ட் அவங்கள காப்பாத்தனும்...”

”என்னையே உங்கிட்ட இருந்து யார் காப்பாத்த போறான்னு தெரியல..”

“ஹே ஃபூல்.. அண்டர்ஸ்டாண்ட்.. நீ இன்னும் சாகல.. நான் உன்ன எதுவும் கொடும படுத்தல.. உங்கிட்ட பேசிட்டு தானே இருக்கேன்.. ”

கில்லிக்கு இப்போதான் எல்லாம் புரிந்தது.. சமநிலை மனநிலைக்கு வந்தான்...

“ஓகே.. ஹூ ஆர் யூ ??”

“அதான் சொன்னேனே.. கில்பர்ட் ... அறிமுகத்துக்கு இப்போ நேரம் இல்ல..”

ஆமா அவனோட கண்ணாடியிலயும் 5:03 என்று காமித்தது.. என்ன கூலிங் கிளாஸ் இது.. டிஸ்பிளே மாதிரி ஏதாவது ஓடிட்டே இருக்குது...

“இங்க பாருங்க மிஸ்டர கில்பர்ட்... இப்போ நீங்க emf state ல இருக்கீங்க... உங்களால அடுத்து வரப்போற ஒரு ஆபத்த தடுத்து நிறுத்த முடியும்.. “

“நீங்க யாருன்ன்னு சொல்ல மாட்றீங்க ஓகே.. அந்த ஆபத்த நீங்களே தடுத்து நிறுத்தலாமே.. ஒய் மீ???”

”குட் கொஸ்டீன்... emf is a combination of indian mythologu and chinese myths..as per indain mythology ur birth time and star are fine.. even chinese myths satidfies...இங்க பாருங்க கில்லி..நீங்க எல்லார் உயிரையும் காப்பாத்த போறீங்க.. இன்குளூடிங் யுவர்ஸ்.. அத மறந்துடாதீங்க..பேச நேரமில்ல.. this is an emergency man...”

“சரி நான் என்னதான் பண்ணனும்..”

”இந்தா .. இந்தக் கண்ணாடிய போட்டுக்க.. தேர் ஆஃப்டர் நீ எங்க emf worldக்கு வந்துருவ,.. அங்க உன்ன என்ன பண்ண சொல்றாங்களோ அத பண்ணினா.. நாளைக்கு உலக புகழ் அடையலாம் நீ.. கண்டிப்பா...”

கில்லிக்கு வேறு வழியும் இல்லை.. எப்படியும் இந்த ஃப்ளைட்ல போனா சாவுதான். .. நம்ம கண்ணு முன்னாடியே வித்தையெல்லாம் காட்டுறான்.. நாம இன்னு சாகவும் இல்ல.. ஒரு வேள அந்த உலகத்துக்கு போய் இவன் சொல்றத முடிச்சுட்டு வந்தா உலக புகழ் கெடைக்குமாமே... அவங்க அப்பா முகத்த நெனச்சான்.. அந்தாளுக்கு தெரியட்டும் நாம எவ்ளோ பெரிய ஆள்ன்னு என்று நினைத்தான்..

“ஐயம் ரெடி...”

கண்ணாடி மேனின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது...

“தட்ஸ் மை பாய்... ஹியர்.. இந்தா.. இந்த செயினோட மறு பக்கத்த பிடிச்சுக்க..”

கில்லியும் பிடிச்சான்.. கிர்ர்ர்ர்ர்.. மின்சாரம் பய்ந்தது.. ரோலர் கோஸ்டரில் போகும் போது ஏற்படும் ஒரு உணர்வு.. குமட்டல்.. வந்தது.. உடம்பு குலுங்குவது நின்றது

மிதக்கிறான்... welcome to emf .... welcome to emf world..ஒரே இருட்டாக உள்ளது.. அதோ..

காண்ணாடி மேன்.. நம்ம ஃப்ளைட்.. கண்ணாடி மேன் கில்லியின் உடலுக்குள் போவதை அவன் பார்த்தான்...

”டேய்.. என்னங்கடா நடக்குது..” அடர் கறுப்பு.. மிதக்கிறான் இன்னும்..

”language recognising... reog..உணரப்பட்டது...”

எல்லாம் டிஜிடல் எழுத்துக்களாக தெரிந்தது...

”பெல் ஆய்வகம் உங்களை வரவேற்கிறது...”

கில்லி மொத்தமாக உணர்விளந்தான்.. ஒன்னும் புரியா மனநிலை.. மூச்சு முட்டியது..

“இங்கு நீங்கள் இறக்க மாட்டீர்கள்.. ஆனால் வாழவும் மாட்டீர்கள்...”

கில்லியின் கண்கள் கலங்கின...

மிதந்தவன் எதோ ஒன்றின் மேல் மோதினான்..

பார்க்கவும் முடியவில்ல்லை.. நிற்க.. அவன் கண்ணில் அந்த கண்ணாடி...

கழட்டினான்.. ஆஅ... மீண்டு இருட்டு.. ஆனா இந்த இருட்டு பரவீயில்லை.. ஒரு நிசப்தம் இருந்தது.. கண்ணாடியை போட்டிருக்கும் போது இருந்த எரிச்சல் இல்லை.

அவன் இடித்தது என்ன என்று பார்க்கலானான்..

ஒரு ஆள்.. மிதக்கிறான்.. ஹலோ.. மங்கலானா அந்த ஒலியில் கூப்பிட்டான்... ம்ம்ம்.. பதிலில்லை.. அய்யோ.. அதே போல் இன்னும் 5 – 6 உடல்கள்.. செத உடல்களோ...

இந்தக் கண்ணாடியில் எதோ இருக்கிறது என்று புரிந்தது... அதை மாட்டினான்..

“ஹலோ...”

போனில் பேசுவது போல் ஒருகுரல் கேட்டது...

“ஹலோ ஹலோ.. யாருங்க.. நான் எங்கங்க இருக்கேன்...”

“பத்திரமாக உள்ளாய்.. வான் வெளியில் உள்ள பெல் நுண் ஆய்வகத்தில்.. உன் வாழ்வை பிறர் வாழ்விற்காக அற்பணித்து...”

“ஒன்னும் புரியல.. என்ன வேணும் உங்களுக்கு..??”

”இந்த ஆய்வகத்தில்.. மனிதனின் எதிர்காலத்தை அறிவதற்கான ஆராய்சி நடைபெறுகிறது..Its an synchronised process.. combination of science and myths...”

”என்கிட்ட பேசுற நீங்க இப்ப எங்க இருக்கீங்க..?? யாரு நீங்க ??”

“I am a programmed computer.. Hypothan Super computer..”

”ஸொ.. இப்போ என்ன வேணும்.. “ கில்லியின் உடலை அந்த உடல்கள் நசுக்கியது... அவனுக்கு குமட்டி கொண்டு வந்தது...

“nothing much.. உங்க உடம்புல 200 v மின்சாரம் பாய்ச்சப்படும்.. மூளை வெகு நுட்பமாக ஆராயப்படும்.. வெகு நுட்பமாக.. உங்க உண்மையான உடம்புல G12 போயிட்டாரு.. அதனால இப்போ அந்த வலி உங்களுக்கு கண்டிப்பா அதிகமா இருக்கும்.. 500ns பறப்பப்படும் மின்சாரம் உங்க உடம்புல ஏற்படுத்தும் விளைவோட..500 sec மின்சாரம் புகுத்துனதும் வரும் விளைவுகள் ஆராயப்படும்.. இன்னும் நுட்பமா இந்த ஆராய்ச்சிய நான் சொல்லலாம்... ஆனா உங்களுக்கு புரியாது...”

”இவ்ளோ மின்சாரம் பாய்ச்சுனா.. கடவுளே.. செத்துருவேன்யா ??...”

“இங்கே மரணமில்லை.. உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் போல் மயக்கம் வரலாம்.. ஆனால் மரணாம் சாத்தியமில்லை... பெல்லின் கோட்பாடுகளின் படி அமைந்த ஆராய்ச்சி பொருள்கள் வீனாக விட மாட்டோம்..

“இந்த ஆராய்ச்சிலாம் வேணா.. என்னா விட்ருங்க.. நான் போகணும்.. “

“ஓ.ஓ.. மனிதர்களை டீல் பண்ணி.. எனக்கும் மறதி வருது.. சொல்ல மறந்துட்டேன்... உங்க மேல இந்த ஆராய்ச்சி இன்னும் 3 நாழிகை கழிச்சே நடக்கும்.. அதுவரையில் உங்களுக்கு இங்கிருந்து தப்பிக்க வழி உள்ளது.. அதுவும் தாண்டிவிட்டால்.. அவ்வளவுதான்.. இதுவரைக்கும் g12மட்டும்ந்தான் தப்பித்து போய் இருக்கான்..

ஓ கே.. Give a specimen for our lab as per the requirement and you run away.. else die here....”

”சரி.. ஆள எப்பிடி பிடிக்கிறது... ???”

“அது உங்கபாடு mr.G13... spec will flash in your led display.. Godd luck.. c u after 3 days... ur time starts now...”

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................

அந்த கண்ணாடி போட்ட மண்டையன் இவன் தலையில் நன்றாக மிளகாய் அரைத்துவிட்டதை உணர்ந்தான்...

கணினி திரையில் தோன்றுவது போல அவனது கண்ணாடி திரையில் இவன் கண்டுபிடிக்க வேண்டிய ஆளின் spec ஓடியது..

**********should born by may-june – 1982-1984...

*********Should be an Indian or chinese

*********Male

*********age-26-29

******Star – Cancer

*****Should b a only child in the family

கடைசி கண்டிஷன் படித்தும் மூர்ச்சையாகினான்...

******** NAME SHOULD BE “GILBERT CHRISTOFER AROKYASAAMY. D.M.

April 16, 2011

அதிகாலை அனுப்பி வைப்போம்…

6 மாதம் முன்…

காலை..

ஒரு காலைன்னு சாதரணமாக சொல்ல முடியாத அதிகாலைஅமுதாவின் காலை அந்த மாதிரிதான் ஆகிவிட்டது…. வெரித்த பார்வையுடன் அவள்..

********************

4 வருடங்களுக்கு முன்….

காலை..

அதிகாலை 3:14 இருக்கும்

3:14தான்னு அடிச்சு சொல்லுவா அமுதா.. இருக்குமான்னு கரெக்டா தெரியலன்னு மதன் சொன்னாலும்..

இல்லீங்க எனக்கு ஞாயபகம் இருக்கு.. Mrs.மதன்.. பெண்குழந்தன்னு டாக்டர் சொல்லும் போது நான் மயக்கத்துல இருந்தேன்.. அரமயக்கம்.. ஆனாலும் எப்டியாவது நேரத்தா பாத்துடனும்னு ஆச.. நான் பாத்தேங்க.. 3:14 அப்போ…”

வெண்பா பிறந்த நேரத்த பத்தித்தான் சண்ட இப்போ..

வெண்பா அமுதாவின் புதல்வி.. குழந்தை..

மதன் ஆசை ஆசையா வெச்ச பேரு

உன் பேரும் பொண்ணு பேரும் ரைமிங்க வெச்சது ஏன் தெரியுமா.. எப்பிடியும் அவ என்ன மதிக்க போறதில்ல.. அதான்…” பிள்ளையை அவளின் ரூபமாக பார்த்தான்.. வெளியில் காட்டா விட்டாலும் .. உள்ளே காட்டாற்று பாசம்

தவளும் பிள்ளையின் மீதும்..

தழுவும் பிள்ளையின் மீதும்

********

காலை..

இப்போ என்ன அவசரமாம்.. அதுக்குள்ள பிள்ளைய பத்தி பேச்சு.. எம்புள்ளய பத்தி பேசாட்டி விடியாதே இவங்களுக்கு.. “

மதன் பெட்டில் இருந்தபடியே மணியைப் பார்த்தான்… ‘என்னடி சண்ட அங்ககாலங்காத்தால…’

பாருங்க .. இந்த அனிதா பாத்தோமா பேசுனோமான்ன்னு போகாம.. ..’ கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்தாள்..

மதனுக்கு இது பழகிவிட்டது.. அமுதா யாருடன் சண்டை போட்டாலும் சின்ன குழந்தை பாதிரி முதலில் சொல்வது அவனிடம்தான்..

சரி சொல்லு என்னாச்சு..?”

அவ இல்ல.. அனிதா.. சும்மா இல்லாம வெண்பா பத்தி கேக்குறாங்க.. 8 மாசம் ஆச்சே இன்னுமா தவக்காம இருக்கு.. எம்புள்ள எப்பவேணா தவக்கும்.. இவளுக்கு என்னவாம்..’

சரி விடுடி.. அவ ஏதோ கேட்டு இருக்கா. இத போயி ஒரு பிரச்சனைன்னு…’

இல்லீங்க.. நம்ம புள்ளைக்கு ஏதோ கொற இருக்கும்ன்னு சொல்றா.. டாக்டர்கிட்ட போணுமாம்..இனிமே நம்ம மொகத்தையே அவ பாக்க மாட்டாஅப்டிதிட்டிடேன்…”

மதனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. அவனுக்கே இருந்த சந்தேகம் கூட..

நம்ம பிள்ளைக்கு ஒன்னும் இல்லதானே.. ???’ அவளே குழந்தையாகக் கேட்டாள்..

ஒன்னுமில்ல.. ஒன்னும் இருக்காது…’ மதன் தீர்க்கமாக சொன்னான்

*************

காலை

வெண்பா .. வெண்பா.. செல்லம்ல.. எந்திரிம்மா..’

ம்மா…’

‘மா.. குட்டி.. ஸ்கூல் இருக்கு பாருங்க.. இன்னைக்கு ஸ்கூலுக்கு போவிங்களாம்.. வெளையாடுவீங்களாம்.. நாளைக்கு லீவாம்..’

‘ம்மா…’

எந்திரிடி குட்டிமா….

மதன் எழுப்பினான் அவளை… ஏண்டி தூக்கத்துல பேசி உயிர எடுக்குற…

கண்முழித்த அமுதா குழந்தையை பார்த்தாள்.. 1 வயது குழந்தை.. வெண்பா.. இன்னும் பட்டு போல புதுசா தெரிந்தாள்..தெரிவாள்.. தாய்க்கு எந்த காலத்திலேயும் பிள்ளைகள் புதுசுதான்…

மதனுக்கு அமுதா தூக்கத்தில் பேசுவது பழகிவிட்டது.. அவளை எழுப்பிவிட்டு தூங்கிவிடுவான்.

‘’ஏங்க…”

இல்லை இல்லை.. தூங்க முயற்சி செய்வான்.. அதற்குள் இந்த குரல் கேட்டுவிடும்…

‘ம்ம். சொல்லு…’

’இன்னைக்கு ஒரு கனவுங்க..’ அவள் வெண்பா தூங்குவதையும்.. அவளை பள்ளிக்கு அனுப்புவதையும்.. ஏற்ற இறக்கத்துடன் விவரித்தாள்…

”நீங்க வேணா பாருங்க.. நாளையோட எம்புள்ளைக்கு ஒரு வயசாகுது.. அவ உங்களையே டேய் போட்டு கூப்டுவா பாருங்க..”

“டேயா?”

“ஆமா.. நான் சொல்ல முடியாதத எம்புள்ள சொல்லுவால.. நான் சொல்லி குடுப்பேன்ல…’

அமுதா கண்ணில் ஒரு பெருமிதம் மின்னி மறையும்.. என்னவோ அந்தக் குழந்தையின் நாக்கில் உக்கார்ந்து இவள்தான் பேசப் போகிறவள் போல…

”ஆனா இன்னைக்கு கனவுல.. என்ன அம்மான்னு ஃபுல்லா கூப்டவே இல்லீங்க.. மான்னு தான் சொன்னா. அதான் ஒரு மாதிரி இருந்துச்சு…’

‘அப்டிலாம் ஒன்னுமில்ல.. கண்டத போட்டு கொழப்பிக்காத.. வெண்பா அழுவுறா பாரு.. அவள பாரு.. வெட்டிக்கத பேசிக்கிட்டு..”

மனைவியிடம்

மறுத்தாலும்…..

மனதளவில்…

மதன் நம்பிக்கை இழந்து கொண்டு இருந்தான்…

*******

முன்னிரவு….

ஊர்ல இருக்குற எல்லா சொந்தத்தையும் கூட்டி.. பெரிய விழாவாக எடுக்க வேணும் அமுதாவிற்க்கு.. செய்தும் விட்டாள் அதை போலவே..

வெண்பா பூமிக்கு வந்து 366 நாட்களும் 8 மணி நேரமும் ஆகி இருந்தது,…

ஆபீஸ் ஃப்ரெண்ட்ஸ்.. அண்டை அயலார்ன்னு நெறயா கும்பல்..

”ஒரு வயசு புள்ளையா ??”

“இன்னுமா தவக்கல ??”

“தலையாச்சு நின்றுச்சே..”

“உக்காந்தே இருக்குமாம்மா எப்பவுமே.. ??”

மதனால் பொறுக்கவே முடியவில்லை.. வந்தவளில் எவளுமே மனித ஜாதி இல்லை போலும்.. விசாரிக்கிறோம் என்ற பெயரில்.. நரக வேதனை…

பக்கத்து வீட்டு அனிதா ஒரு வார்த்த சொன்னதுக்கெ குதிச்ச அமுதா இன்னைக்கு இவ்ளோ பேர் வித விதமாக அறிந்தும்ம்ம்ம் அறியாமலும் வெண்பாவைப் பற்றிக் கேட்க.. எல்லோருக்கும் கேக் கொடுத்துக் கொண்டு எப்படித்தான் சிரிக்கிறாளோ…

மதனால் தாங்க முடியவில்லை. அவனுக்கு தெரிந்தவர்கள் என்று யாருமில்லை அந்தக் கூட்டத்தில்.. அவன் யாரையும் கூப்பிடவில்லை.. எல்லாம் அமுதாவின் கூட்டாளிகள்..

மதன் அமுதாவை கவனித்தான்.. கல்யாணத்தன்று பார்த்த பயந்த பெண்ணல்ல அமுதா இப்போது.. ஒரு பெண்ணின் தாய்.. பொறுப்பு வந்துவிட்டது.. அல்லது பொறுப்பு வந்தவள் போல் காட்டிக்கொண்டாள்…

”வெண்பா… அவர்தான் வெச்சாரு.. அவருக்கு தமிழ் ஆர்வம் ஜாஸ்தி.. ” 100வது முறையாக சொல்லிக் கொண்டிருந்தாள்…

எவனாவது பிள்ளைக்கு பேர் என்னன்னு கேட்டான்.. செத்தான்.. அவனுக்கு தேவையே இல்லாமா மதன் 9வதுல பேச்சுப்போட்டில பரிசு வாங்குனதும்.. ‘பொன்னியின் செல்வனை 15 வயதிலேயே படித்து முடித்தவன் என்பதும் உப உப தகவல்களாக வந்து சேரும்…

வெண்பாவை யாரேனும் துக்கிவிட்டால் அமுதாவின் பார்வை முழுதும் அவர்கள் மேலேயே இருக்கும்.. பாத்து பாத்துன்னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருப்பா போல..

அனைவரும் பசியாரிவிட்டு சென்றுவிட.. வீட்டை சுத்தம் செய்துவிட்டு வந்தாள் அமுதா..

வெண்பா மதனின் மேல் தூங்கிகொண்டிருந்தாள்…

என்னங்க…’

இந்த குரலை கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவான் மதன். அல்லது அவளை எப்படி தேற்றுவது என்று…

‘சொல்லு..’ மனதுக்குள் கண்டிப்பாகத் தெரியும்.. இன்னைக்கு ஏதோ தப்பா நடந்துடுச்சுன்னு… ஒரு நல்ல கணவனுக்கு அழகே மனைவி சொல்லும் ‘;என்னங்கஆஅ வேவை வைத்தே அவளின் மனமறிவது.

அமுதாவை மணந்த மணாளன் அவளின் மனமறிந்தவன்………

‘அந்த அனிதாவும்.. லதாவும்.. நம்ம புள்ளைய வெச்சு வெளையாண்டாளுங்க பாத்தீங்களா..?”

”பாத்தேன் சொல்லு.. அதுக்கென்ன இப்போ..

“இல்லீங்க.. லதா அனிதாகிட்ட குழந்த இருக்கும் போது அவ வளையல குலுக்கி குலுக்கி காமிச்சு குழந்தய பாக்க வெச்சாங்க..”

“உலக அதிசயமாடி இது ???”

உடைந்து அழுதாள்.. மதனுக்கு புரியவில்லை.. “என்னாச்சு சொல்லித் தொலை…”

“ம்ம்.. அவ.. வ.. அவ.. அந்த லதா இருக்கால.. நம்ம வெண்பா அவ கை ஆட்ற பக்கமெல்லாம் பாத்துட்டே இருந்தாளா.. மாத்தி மாத்தி ஆட்டுனா லதா.. வெண்பா எல்லா பக்காமும் பாத்தாளா… உடனே லதா அனிதாகிட்ட சொல்றா.. பரவாயில்ல.. காதுலாம் நல்லாத்தாண்டி கேக்குதுன்னு….”

ஓவென அழ ஆரம்பித்தாள்…மதனுக்கும் அழுகை வந்தது.. அவனும் அழுதால் யார் தேற்றுவது.. ஆண்கள் பலர் தங்கள் அழுகையை அடக்குவதற்க்கு காரணமே பெண் இன்னும் உடைந்துவிடுவாளோ என்னும் உண்ர்வே….அந்த உணர்வும் நல்லதுக்குத்தான்.. இல்லையென்றால் உலக்ம் என்பது ஒப்பாரி வைக்கும் மயனாமாகிவிடும்…

அவளை தேற்றியவாறே தூங்கிப்போனான்.. அவளும்..

ஒன்றுமறியா.. புரியா.. வெண்பா அவர்களின் நடுவே நட்சத்திரத்தை எண்ணிக்கொண்டு படுத்திருந்தாள்…

அதே சிரிப்புடன்…

*****************

காலை…

கண்டிப்பாக மதனுக்கு தெரியும்.. இன்னைக்கு ஏதாவது முக்கிய முடிவு எட்டப்படும்னு..

அமுதாவிற்க்கு ஒவ்வொரு காலையும் ஒரு யுகம்.. குழந்தையை உற்று பார்ப்பாள்.. ‘டக்குன்னு எந்திரிச்சு.. இவ்ளோ நாளா உன்ன ஏமாத்துனேனேன்னு சொன்னபடடியே ஓடமாட்டாளான்னு இருக்கும்..

ஒருநாளும் அப்படி விடியவில்லை..

‘என்னங்க…”

ஆபீஸ் புறப்பட்டுக்கொண்டு இருந்த மதனுக்கு அவளின் குரல் நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் .. கேளேன்.. என்பது போல் இருந்தது,,,

இல்ல… நம்ம மகள.. ஏதாவது டாக்டர்கிட்ட கொண்டு போய் காமிக்கலாமேன்னு…”

அதேதான். அவனும் ஒத்துக் கொண்டான்…

******************


காலை…

’ரொம்ப பெரிய டாக்டராங்க.. கைராசிக்காரர்ன்னு வேற சொல்றாங்க.. வெண்பா நடக்கப்போறா.. பேசப் போறா.. ஆடப் போறா…பாடப் போறா…” மதன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்…

’ம்..’கொட்டுவதைவிட ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை…பல கணவன்மார்களின் தேசிய கீதம் இந்த ம்…

என்னாதான் மதனுக்கும் டாக்டரைப் போய் பார்ப்பது சந்தோஷமாக இருந்தாலும்… மனதினுள் ஏதோ உருத்திக் கொண்டே இருந்தது..

’ஆட்டோலையே போயிடலாம்ங்க.. எம்மக நீங்கஓட்டுற வண்டிலலாம் வரமாட்டா…’

‘ஆமா.. என் வண்டில வர மாட்டா.. கண்ட ஆட்டோ டிரைவர் வண்டில போவாளா.. ஏதாவது பேசனுமேன்னு பேசாதடி.. வா..’

இந்த வார்த்தையை எத்தனை முறை சொன்னாலும் மறுபடியும் மறுபடியும் பேசிக்கொண்டே இருப்பாள்.. சில சமயம் வேண்டுமென்றே திட்டு வாங்குவதற்க்காக பேசுகிறாளோ என்றிருக்கும்..

மாலை டாக்டரிடம் சென்றுவிட்டு திருப்பிவந்து கொண்டு இருக்கையில். இருவரும் சோர்ந்து போய்த்தான் இருந்தார்கள்.. வெண்பாவும்தான்..

வீட்டின் உள் நுழைந்ததும்.. ‘என்னங்க டாக்டர் அவன்.. இதுக்கு அந்த லதாவே பரவாயில்லை.. கையகால ஒடச்சுடுவான் போல…. பாவங்க எம்புள்ள..’

‘டாக்டருக்கு பின்ன எப்டிதாம்மா தெரியும்.. நம்ம மகளுக்கு என்னன்னு.. பாத்தாத்தானே கண்டு புடிக்க முடியும்..’

’இருந்தாலும்.. கண்ணு தெரியுதான்னு டார்ச் அடிச்சு பாக்குறான்.. ‘

‘அவர் எதுக்கு பாத்தாருன்னு தெரியுமா.. நீ என்ன பெரிய டாக்டரா.. விடுடி..’

‘போங்கங்க.. உணர்ச்சி இருக்கான்னு கைய கால கிள்ளி பாக்குறான்.. கடன்காரன்.. பிஸியோரெரப்பிஸ்ட் அட்ரெஸ் வாங்குறதுக்கா இவன்கிட்ட போனோம்”

காலையில்

கைராசிக்காரர்ன்னு பேர் எடுத்த டாக்டர்..

மாலையில்

கடன்காரன் என்னும் பெயர் எடுத்தார்..

அவளுக்கு இருந்த நம்பிக்கை என்னும் புள்ளியில் சிறிது வெளிச்சம் குறைந்தது..

‘இனிமே எங்கயும் எம்புள்ளைய கொண்டு போறதா இல்லீங்க…”

*******

காலை..

வெண்பாவிற்க்கு 2 வயது ஆகி இருந்தது.. வெண்பாவும் அமுதாவும் கிளாசுக்குகிளம்பிக் கொண்டு இருந்தார்கள்..

எங்கேயும் கொண்டு செல்வதில்லை என்ற சபதம் எடுத்த அடுத்த காலையிலிருந்தே இந்த பிஸியோதெரோபிஸ்ட் ஸ்கூல் வர ஆரம்பித்தாள்..

எவ்வளவு குழந்தைகள்.. எவ்வளவோ குழந்தைகள்… ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று முடியவில்லை…

3 வயதாகியும் தலை நிற்காத குழந்தையைப் பார்த்தாள்.. ஆண்டவனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்த நாள்…

“வெண்பாங்க பேரு.. உக்காருவா.. அவங்க அப்பா குரல் கேட்டா சிரிப்பா.. நான் விட்டு நகர்ந்தா அழ ஆரம்பிச்சுடுவா… நல்லா அடையாளம்லாம் தெரியுது.. அது என்னவோ தெரியல.. தவக்க மாட்றா.. நிக்க மாட்றா… இப்போ பாருங்களேன் ….ட்டா.. சொன்னா சிரிப்பா பாருங்களேன்…”

யாரோ ஒரு அம்மாவிடம்.. உம்ம்புள்ள அளவுக்கு இல்ல.. என் புள்ள அறிவானதாக்கும்ன்னு ப்ரூவ் பண்ணுவதற்காக பேசிக் கொண்டு இருந்தாள்..

.’ட்ட்டாஆ,..’

வெண்பா சட்டையே பண்ணாம பார்த்துக் கொண்டு இருந்தாள்..

‘தா… வெண்பமா… ட்டா டா…’

ம்ம்கூம்.. ஒன்னும் ரியாக்சன் இல்ல…

அந்த யாரோ ஒரு அம்மா சொன்னாள்.. ’சரி விடுமா.. தூக்கத்தில இருக்கும்.. அழகு பெத்த புள்ள நல்லாயிரும் பாரு..’

அந்த அம்மாவின் குழந்தையும் நல்லாஆக வேண்டுமென வேண்டிக்கொண்டாள்…

ஆனாலுன் சிறிது கோவம்தான் வெண்பா மேல்… பாவிமக இப்பிடி படுத்துறாளேன்னு வெண்பாவை திட்டுவதாக நினைத்து அவளையே பாவியாய் திட்டிக் கொண்டாள் அந்த அப்பாவி…

*************************************

காலை…

4 வயதாகி இருந்தது வெண்பாவிற்க்கு…

4 நிமிடமாக கதையை படித்துக் கொண்டிருந்த உங்களுக்கே இது எப்போது முடியுமென அயற்சி ஏற்பட.. 4 வருடமாக.. அந்தப் பிள்ளையை மனதில் மட்டுமல்லாது கையிலும் சேர்த்து சுமப்பவர்களுக்கு… சொல்ல ஒன்னா துக்கம்..

மதனுக்கு அந்த அயற்சி ஏற்பட்டது உண்மை…

இப்போதெல்லாம் பிஸியோதெரபி க்ளாஸுக்கும் செல்வதில்லை.. படிப்படியாக குழந்தை படுத்த படுக்கை ஆயிட்டா…

தூக்கி சுமக்க முடியாத அளவிற்கும் வளர்ந்துவிட்டாள்…

ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளை வைத்து இருப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக தெரிந்தார்கள்..

வீட்டில் சில நால்கள் பிஸியோ செய்தார்கள்.. சித்தா.. ஆயூர்வேதம்.. பயிற்சிகள்.. ஒன்றும் நடக்கவில்லை.. வெண்பா சிரித்தபடியே இருந்தாள்.. ‘ஏண்டா இவ்ளோ கஷ்டப்படுறீங்கன்னு’ கேக்குற மாதிரி.. தெய்வீக சிரிப்பு.. கடவுளின் நேரடி பிள்ளை அல்லவா…

வெண்பாவை மடியில் கிடத்தியபடி.. அவளுக்கு பாலுடன் பிஸ்கெட்டையும் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. இப்போதெல்லாம் பிள்ளை ஒன்றையும் விழுங்குவது இல்லை.. தொண்டை வரை உணவை வைத்துவிட வேண்டி இருந்தது.. அது கண்டிப்பாய் புதிதாய் பார்ப்பவர்களின் மனதை ஏதோ செய்யும்…

மதன் ஆபீஸ் முடிந்து வந்து சேர்ந்தான்..

‘ஏங்க.. உங்க மக உங்க குரல் கேட்டாலே குஷியாயிடுறாங்க.. சிரிக்கிறா பாருங்களேன்…’

‘ம்ம்.. மதன் ஒரு 2 நிமிடம் கிட்ட அமர்ந்து பார்த்தான்.. இரு பிள்ளைகளின் தலையையும் சேர்த்து வருடிவிட்டு.. குளிக்க சென்றான்..

அன்று வெண்பா சாப்பிட ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டாள்…

மதனுக்கு திடீரென்று வெண்பாவைப் பற்றி கேள்வி கேட்பவர்களைப் பற்றி சிந்தனை திரும்பியது..

‘பிள்ளை நடக்கலயா.. ஆயூர்வேதா ட்ரை பண்ணிங்களா..?’ என்னவோ எம்புள்ள மேல இவர்களுக்குத்தான் அக்கரை போல.. ‘அடுத்தவன் கேட்டுடுவானோன்னு சீக்கிரம் புள்ள பெத்துக்க முடியும்.. அடுத்தவன் கேட்டுடுவானோன்னு இந்தப் புள்ளைகளும் எல்லாத்தையும் செய்யாதா…

‘என்னங்காஅ………’

அவன் பதறியபடி வெளியில் வந்தான்.. இந்த என்னங்கவின் அர்த்தம் அவனுக்கு புரிந்தது அதனாலேயே பயந்த படி வந்தான்…

அவன் நினைத்தது சரிதான்.. அதேதான்..

‘ஏங்க.. ஏங்க.. மடில சாப்டுட்டே இருந்தாங்க.. தண்ணி குடுத்தேங்க.. குடிச்சா… அதுக்கப்புறம் குடுத்தா தலை மடியிலேயே நிக்கலைங்க.. கீழ விழுந்துட்டே இருக்கு.. கைய புடிக்கவே பயமா இருக்கு.. கொஞ்சம் நீங்க………..’

அவன் பார்த்தான்.

நம்ம பிள்ளைக்கு ஒன்னும் இல்லதானே.. ???’ அவளே குழந்தையாகக் கேட்டாள்..

மதன் பதில் சொல்லவேயில்லை…

ஆம் வெண்பா

ஆண்டவனடி சேர்ந்தாள்…

***************************

இன்று

அதிகாலை…

‘என் செல்லம்ல..

வெண்பா குட்டி..

ஹாப்பி ஹாப்பி பர்த் டே டி குட்டி….’

மதன் அவனது மனைவியை எழுப்பவில்லை..

கனவிலாவது வெண்பாவுடன் அமுதா வாழட்டுமே என்று…

அல்பாயுசில் எடுத்துக்கொண்ட மகளை

அதிகாலையில் மட்டுமே

அனுப்பி வைக்கிறான்

ஆண்டவன்…

அவள்

அம்மாவிடம்…