February 27, 2010

ஒரு “டண்டணக்கா டணக்குணக்கா” ஆகிறதே...!!!



ரொம்ப நாள் கழிச்சு எழுதுறதால செத்தீங்க.. நெறய படிக்கனும்.. ரெடியா???

விண்ணைத்தாண்டி வருவாயா!! படத்தோட ஸ்டில்ஸ் பாத்தப்ப மொதல்ல ஒன்னும் புரியல.. நான் சொல்றது ஒரு வருஷத்துக்கு முன்னாடி.. ‘மின்சாரக் கனவு’ படத்தில் வரும் பாட்டு மாதிரி.. “a Gautham Film"ன்னு விளம்பரம்.. படம் சரியாக தெரியல.. அடுத்த நாள் பாத்தா “அலைபாயுதே” மாதிரி விளம்பரம்..
சிம்பு முகம்.. அடப்பாவீகளா!! கவுதம் படத்துல சிம்புவா??? நம்பவே முடியல...

அதுக்கு அப்புறம் வந்த ஸ்டில்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்ததும்.. பாடல்கள் பட்டையைக் கெளப்புறதும்.. வ-ர-லா-று..

படம் இன்னைக்கு பாத்தேன்.. கண்டிப்பா I m in love with u களும்.. m crazy abt u க்களும் இருக்கும்.. கவிதை மாதிரி .. “காதல தேடிட்டு போக முடியாது..” போன்ற இரண்டு மூன்று வார்த்தைகள் கொண்ட வசனங்களும் இருக்கும் என்று எதிர்பார்த்து போனேன்... ஏன்னா நாம என்ன எதிர்பார்ப்போட போறோம்னு இருக்குல்ல...?? அப்பத்தான் அது நிறைவேறுச்சா இல்லயான்னு தெரியும்..

நான் எதிர்பார்த்த மாதிரியே கவிதை போல பெயர் போட தொடங்கியது.. நான் படத்துக்குள்ள போய்ட்டேன்.. அறிமுக் காட்சிகளில் காக்க காக்க போல ஃபாஸ்ட் கட்டிங்.. நல்ல நேரேஷன்.. நாயகன் நாயகி அறிமுகம்.. வழக்கம் போல் கதை.. வழக்கத்துக்கு மாறான ட்ரீட்மெண்ட்..

முதல் பாதி அருமைங்க.. உண்மைலேயே நான் என்ன எதிர் பார்த்து போனேனோ அது இருந்துச்சு..

நான் ரசித்தவை..

** வசனங்கள் பேசும் போது பின்னாலே தொடரும் இசை. .. அதாவது முதல் பாதியில் நல்லா கவனிச்சீங்கனா தெரியும்.. ஸீன் ஃபுல்லா போய்ட்டு இருக்கும் போதே பின்னால் தொடரும் இசை.. குறிப்பாக சிம்புவும் திரிஷாவும் முதல் முதலாக வீட்டில் பேசும் காட்சியில்.. சான்ஸ்லெஸ்.. “கல்யாண வீடியோ பாக்கும் போது.. நமக்கு புடிச்சவங்க வரும் போது .. புடிச்ச பாட்டு பின்னாடி மிக்ஸ் பண்ணி இருந்தா எப்புடி இருக்கும்.. அந்த மாதிரி.. சுகானுபவம்...

** நாம இனிமே நண்பர்களாக இருப்போன்னு சொல்லும் போது பின்னனி இசை.. OMGOD!!!! நான் ரொம்பவே ரசித்தேன்...


**சிம்பு... “கோவில்” நான் ரொம்ப எதிர் பார்த்தேன்.. மனுஷன் அமைதியா நடிக்கிறான் நல்லா போகும்ன்னு.. போகல.. அதிலிருந்தே எல்லாரும் சொல்வாங்க சிம்பு அமைதியா நடிச்சா படம் காலின்னு.. ஆனா அத மாத்தி இருக்கு இந்தப் படம்.. மனுஷன் ரியாக்‌ஷன்ஸ் என்ன.. நடிப்பு என்ன.. அப்டியே காதல்ல கறையுறான் மனுஷன்.. ஆனா.. ஊனா.. கட்டிப் புடிச்சு காண்டேத்துறார்..நல்ல டைரக்டர்கள் கையில் மாட்டினால் இன்னும் உயரம் தொடலாம்.


**திரிஷா.. எனக்கு அவ்வளவா புடிக்காது.. ஆனா நானே ரசிக்குற அளவுல இருக்கு.. நீங்க மூனு-ஷா பைத்தியம்னா உங்க பைத்தியம் முத்தி ஏற்வாடி போய்டுவீங்க.. தியேட்டர் கமெண்ட்ஸ்--> அட என்னப்பா இந்தப் பொண்ணு இது வரைக்கும் பேசாததெல்லாம் சேத்து இந்தப் படத்துல பேசுதுன்னு.. அந்த அளவுக்கு நடிக்க வாய்ப்பு.. ஒன்னம் க்ளாசானு.. நடிப்பு..

**சிம்புவும்.. திரிஷாவும் வெளயாண்டு இருக்காங்க .. நடிப்புல.. நடிப்புல.. (தில்லு முல்லு படத்துல தேங்காய் சீனிவாசன் சொல்வாரே.. பாட்லே.. பாட்லே ன்னு.. அந்த மாதிரி..)

**மனோஜ் பரமஹம்சா.. என்னா மேக்கிங்.. லைட்டிங்.. அதுவும் நைட்ல வரும் ஒரு ஒரு காட்சியும் கவிதை.. இவருடைய உழைப்பால மெருகேறி இருக்காங்க நடிகர்கள் எல்லாம்.. சொல்லப் போனா படமே...

**நளினி ஸ்ரீராம்.. சிம்பு உடைகள் அபாரம்.. செம ஸ்மார்ட்டா இருக்காருன்னா அதுக்கு இவங்களும் காரணம்.. என்னடா இவ்ளோ சிலாக்கிறானேன்னு நெனச்சா “காளை” படத்தின் அறிமுகப் பாடலைப் பார்க்கவும்..

பின்நவீனத்துவ புரிதல்

த்ரிஷா இரண்டாம் பாதியில்.. ஒரு கட்டத்தில் நாம பிரிஞ்சுடலாம்ன்னு சொல்வாங்க.. அடுத்த செகண்ட் கட்டி பிடிப்பாங்க.. அடுத்த 10 நொடில திருப்பியும் திட்டுவாங்க,, த்யேட்டர்ல “அட என்னதாம்மா சொல்ல வர்ற?? ஒன்னும் பிரியலயே” கமெண்ட்ஸ்...

அதானே காதல் தலைவா!!!
காண்டேத்தியவை..

**என்னத்தா கவிதை மாதிரி வசனங்கள் இருந்தாலும்.. திகட்டத் திகட்ட காதல் கொஞ்சமில்ல ரொம்ப கடுப்பாக்குது..

**எடிட்டரின் கம்யூட்டரின் மவுஸ் சரியாக cut செய்யவில்லை,.. (என்னது எடிட்டரின் கத்திரின்னு சொல்லனுமா?? அட அப்ப நீங்க இந்தப் படத்த தகுதி இல்லாமா போய்ட்டீங்க..)

**describition.. அது எப்புடி இருக்குன்னு கேட்டா.. அது போல.. இது போலன்னு சொல்வோம்.. புது வகையான உவமைகள். .. கவுதம் ஸ்பெஷல்.. இரண்டாம் பாதியிலும் தொடர்வது காண்டு..

**உமா பத்மநாபன் சிம்புவின் அம்மாவாக.. சில காட்சிகள் .. 3 வரி டயலாக்குகள் இருந்தாலும். மேடம் டி.வி. நியூஸ் வாசிக்கிற மாடுலேஷன்ல பேசுறாங்க... அடுத்த முறை திருத்திக்கட்டும்.. (அவங்க திருத்தி நடிச்சு என்ன ஆஸ்காரா வாங்க போறாங்கன்னு கேக்குறீங்களா?? ரைட்டு விடுங்க..)
.


ஆஸ்கார்ன்னு சொன்ன பொறவு ரஹ்மான் பத்தி சொல்லாட்டி எப்புடி??? . allah rakkah RAhmanனின் இசை.. அது இல்லாட்டி கண்டிப்பா தியேட்டர்ல உக்காந்து இருக்க முடியாது..
பின்னனி கலக்கல்.. ராக் இசை புடிக்கலன்னு சொல்லி இருந்தாரு ஜெட்லி.. நான் ரொம்ப ரசித்தேன்.. பின்னனி படத்திற்க்கு பலம்.. “feel gud film ஃபீலிங் தருவதில் இசைக்கு பங்கு உண்டு.. fusion கள்.. அது இதுன்னு பேர் தெரியாத என்னவோ பண்ணி இருக்காரு.. காதுக்கு நல்லா இருக்கு..

நான் தனியா சொல்லனும்னு நெனக்குற ஆளு..அந்தக் காமெராமேன்.. கமெண்டுகள் அருமை.. கவுதம் காமெடி படம் ட்ரை பண்லாம்..


விமர்சனம் எழுதும் பதிவர்களுக்கு..,

நான் தனியா எழுதனும்னு நெனச்ச மேட்டர்.. இங்க சொல்றேன்.. நான் வேலை காரணமாக எழுத முடியாட்டியும்.. நண்பர்கள் எழுதுவதை தொடர்ந்து படிக்குறேன்.. ஆனா நான் ரொம்ப எரிச்சலானது தமிழ்ப்படம் படம் பார்த்தப்பதான்.. எல்லா ஸீன்லேயும் என்ன நடக்கப் போகுதுன்னு முன்கூட்டியே தெரிஞ்சு போச்சு.. என்னால ரசிக்க முடியல..ஏன்னா வளச்சு வளச்சு எல்லார் விமரசனமும் படித்தேன்.. அதனாலா.. ஆனாலும் நேத்து ஜெட்லி மற்றும் கேபிள் விமரசங்கள் தைரியமாக படித்தேன்,, ஏன்னா அவங்க விமர்சனம் சூப்பர்.. படம் நல்லா இருக்கா இல்லயா.. பாக்கலாமா வேனாமான்னு.. அதுதான்.. அது போதும்..

தயவு செய்து யாரும் முழு கதையையோ.. அல்லது.. முக்கியமா நீங்க ரசித்த விஷயத்தையோ சொல்லதீங்க.. படம் பாக்கும் போது கோவம் கோவமா வருது...

இப்போ என்னையே எடுத்துக்கங்க.. நானும் தான் விமர்சன்ம் பண்ணி இருக்கேன்.. இதுல படத்துல கே.எஸ் ரவிக்குமார் வருவதையோ.. “சிம்புவும்-திரிஷாவும்” கண்டிப்பா கடைசில சேர மாட்டாங்க போன்ற உண்மைகளை சொன்னேனா என்ன??? அந்த மாதிரி இருக்க வேணாமா விமர்சனம்னா???

யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவுலகம்!!!