December 30, 2009

முடிந்தது சூர்யாவின் கதை 2010ல்...



2008 கடைசில பதிவுகள் எழுத ஆரம்பிச்சு கிழிச்சது பெருசா ஒன்னுமில்ல.. 2009 முழுசும் வெட்டியாவே போச்சு... அதுக்கு காரணம் ரெண்டு..

1* என் மனத் தயக்கங்கள்..
2* முதலாவதாக சொன்னதேதான்...

மனத் தயக்கங்கள பட்டியலிடுறேன்... மனசுவிட்டு பேசுனா குறையுதான்னு பாப்போம் மனத்தயக்கம்....

** பின்னுட்ட மேனியா **

எந்த பின்னூட்டத்துக்கு நன்றி சொல்றதுன்னே தெரியலீங்க.. நம்ம பதிவ பிரிச்சு மேயுற.. புதுசா யோசிக்க வைக்குற பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லலாம்.. படிக்காமலேயே பின்னூட்டம் போட்டா அதுக்கும் நன்றி சொல்லி நேரத்த வீணாக்கனுமா???

என்னுடைய தயக்கம் இதுதான்.. பின்னூட்டம் இடுற எல்லாருக்கும் நன்றி சொல்லனுமா?? இது சம்பந்தமா பதிவுலக சட்டம் என்ன சொல்லுது..

*** பதிவுகள் இடைவெளி ***

ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் குறைந்த பட்ச கால இடைவெளி எவ்ளோங்க??? என்னைப் பொருத்த வரைக்கும் ஏதாவது ஒரு திரட்டில நம்ம பதிவு மொத பக்கத்துல வந்துட்டா.. அப்பா.. ஒலகமே நம்ம இடுகைய படிச்சுடுச்சுடா மக்கான்னு ஒரு சந்தோசம்..

அதாவது என்னுடைய கணக்குப்படி ஓட்டுகள்தான் அடுத்த பதிவ தீர்மானிக்குது..
யாரும் படிச்ச என்ன படிக்காடி என்னன்னு மவனே 2 ,3 தோணுனாலும் அடிச்சு ஆடிடலாமா???

*** தமிழ் மணம் **

நானெல்லாம் தமிழிஷ்ன்னு ஒன்னு ஒருக்குறதாலதான் கொஞ்சமாவது எழுதுறேன்.. டாக்டர் சுரேஷ்கிட்ட கடந்த ஆண்டு முதலே பொலம்பிக்கிட்டுத்தான் இருக்கேன்.. அதுல எப்புடி சேக்குறதுன்னு தெரியலன்னு..

கஷ்டப்பட்டு சேத்தாலும்.. ஒரு ஓட்டு கூட விழல.. ஏன்???
தமிழ்மணத்துல விருதுகள்ளாம் தர்றாங்க.. ஓட்டெல்லாம் போட்டாச்சு.. ஆனா அடுத்த வருஷம் நாமளும் வரணும்ல.. என்ன பண்றது..

***வயது***

இதுதாங்க ரொமப பெரிய தடை.. முக்கியமா பதிவர் சந்திப்புகள்னாலே பயமா இருக்கு.. அதுல இருக்குற எல்லார் மொகத்த பாத்தாலும்.. என்னதான் எழுத்துல கலாய்ச்சாலும்.. சில பேர் நாங்கள்ளாம் யூத்துன்னு சொல்லிக்கிட்டாலும்..

நாம ரொம்ப சின்ன பயலா இருப்போமோ,.. யாரும் மதிக்க மாட்டாங்களோன்னு ஒரு பயம்.. (வயசு 21 ஆனாலும்.. எது அந்த 20க்கு அப்புறம் வருமே அந்த 21ஆ கேட்டுடக் கூடாதில்ல..)அதான் சென்னைலயே இருந்தாலும் பதிவர்களிடம் போனில் கூட பேசியது இல்லை.. சந்திப்புகளுக்கும் போனதில்லை,.,. (ஜெட்லிகூட ஒட்டிக்கிட்டே போய் 2010ல எல்லாரையும் பாக்கலாம்ன்னு ஒரு திட்டம்.. என்ன ஜெட்லி போலாமா???)

**மேட்டர்**

பதிவுக்கானா மேட்டர்.. ரொம்ப ஆழமா ஒரே கருத்தா இருக்கனும்னு நெனப்பேன்.. நேரமிருந்தாலும் சில சமயம் இதெல்லாமா எழுதுவதுன்னு எழுதுவது இல்லை.. (சினிமாவ தவிர மிச்சதெல்லாம் கவனிக்கப் படுவதில்லையோன்ற ஒரு பயம்..)
ஆனா இப்போத்தான் குவியல்,அவியல்,காரச்சட்னின்னு எல்லா அண்ணன்மார்களும் ஏன் எழுதுறாங்கண்னு புரியுது..

நாமளும் அடுத்த வருஷம் முதல் தாக்கிடுவோம்.. ( நல்ல பெயர் சொல்பவர்களுக்கு “ஹண்டர்” பட யூட்யூப் லிங்க் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்...)

மனசுல உள்ளதெல்லாம் கொட்டியாச்சுங்க.. தேறுவேனான்னு சொல்லுங்க..


பின் குறிப்பு :
-
ரொம்ப ஆசைப்பட்டு துவங்கிய இரண்டு தொடர்கள் “சரவணன் முதல் சூர்யா வரை” மற்றும் ”எஞ்ஞனியா வா” .. 2010க்குள்ள அந்த சூர்யா கதையையும் .. இந்தத் தொடரையும் முடிச்சுர்றேங்க...

December 29, 2009

மௌலி


திடீர்ன்னு தோணுனதுதான் மௌலி பத்தி எழுதலாம்னு.. ”அசத்த போவது யாரு” நிகழ்ச்சிக்கு ஒரு தடவ இவர் வந்து இருந்தாரு.. (அதெல்லாம் பாக்குறியாடானு திட்டக் கூடாது..) இவருடைய பேச்சும் அட்வைஸ்களும் ரொம்ப மெச்சூட்டா இருந்தது..

“சினிமாக்காரன் வெளிநாடு போய் ஷூட்டிங் பெர்மிஷன் வாங்கிட்டா இந்த ஊரே எங்க்ள்துன்னு பாட்டு போட்டு லூசு மாதிரி ஆடிட்டு இருப்பாங்க.. “ அப்டீன்னார்.. உண்ம அதானே.. அத அதானே ரசிக்கிறோம் நாமளும்.. சினிமால இருக்குற இவரே எப்டிடா இப்டி சொல்றாரு.. இவருடைய படம்னு எனக்கு (என் வயதொத்ட தலைமுறைக்கு) தெரிஞ்சது “பம்மல் கே சம்பந்தம்” மட்டுமே.. இன்னும் கொஞ்சம் யோசிச்சு பாத்தா “அபூர்வ சகோதரர்கள் ”படத்துல வர்ற்து நியாபகம் வருது..

ரொம்ப நாளாக வீட்டில் இருந்து பாக்காம இருந்த “ஃப்லைட் 172 “ நினைவு வந்து அதைப் பார்த்தேன்.. வாவ்வ்வ்.. (அட ஆஆஆவ்வ் இல்லீங்க..) மனுசனுக்குள்ள என்ன டேலண்ட்.. இது டி.டி.ல வந்ததா?? பழைய நினைவ யாராவது பகிர்ந்துக்கங்க.. எங்க டி.வி.டி தலைமுறைக்கு புரியட்டும்..


“ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது” படம் நினைவுக்கு வந்து அதையும் பார்த்தேன்.. சமுதாய செய்திகளோட.. அலட்டிக்காத காமெடி.. அருமை.,,

மேடை நாடகங்களின் சாயல் ஒருப்பதாக உணர்ந்தேன்.. கடைசியாக இன்று காலை கூகிள் செய்ததின் விளைவு.. அவருடைய பழைய பேட்டிகளையும்.. வரலாறையும் தெரிந்து கொள்ள முடிந்தது,,


4000க்கும் மேற்பட்ட தடவை மேடையேறிய அனுபவமும்... 21 தமிழ் படங்கள் 24 தெலுங்கு படங்கள் இயக்கிய கலைப் பணியும்.. ஆந்திராவின் சிறந்த விருதான நந்தி விருதை 5 முறையும்.. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான பி.சந்திரமௌலி..


பாத்தா அந்த மாதிரி இல்லீங்க. மனுசன் அடக்கமானவர் போல..

அவரைப் பற்றிய நினைவுகள் இருந்தால் பகிருமாரும்.. தெரியாத இளைய தலைமுறை “ஃப்ளைட் 172 “ 2010 முடியுறதுக்குள்ள ஏதாவது நண்பணிடம் சுட்டு பார்ர்குமாறும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்..

(அவர் இரும்புக்கோடை முரட்டு சிங்கம்.. காதல் டூ கல்யாணம் போன்ற படஙக்ளில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்..)

December 28, 2009

3 idiots :-)


படத்துக்கு விமர்சனக் குத்து எழுதுறதுக்கு மொத்தம் இரண்டு காரணங்கள் இருக்கு பதிவுலகுல..
1* போட்ட காசு போச்சேன்னு பொலம்பும் பதிவுகள்..( இந்த சீசனுக்கு வேட்டைக்காரன்...)
2*ஹே நானும் ஒரு நல்ல சினிமா பாத்துட்டேன்பான்னு ஸீன் போடுற பதிவுகள்..

இது இரண்டாம் வகை...

தங்கள் கல்லூரியில் படித்த ராஞ்சூ (ஆமிர்கான்) என்னும் நண்பனைத் தேடி செல்லும் மற்ற இரு நண்பர்களின் (மாதவன்,ஷர்மான்) பார்வையில் அவர்களின் கல்லூரிக் காலம் கதையாக விரிந்து.. கரீனாவும் சேர்ந்து.. அவர்களின் கல்லூரிக் காலம் முடிந்து (ப்ளாஷ்பேக்).. பின் ராஞ்சூவைத் தேடிப் போகும் இடத்தில்வேறொருவன் இருந்து..

காதலியும் நண்பர்களும் ஆமிரைக் கண்டுபிடித்தார்களா.. உண்மையில் அவர் யார்...அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்... அத்தோடு சுபம்..

5 points someone சேத்தன் பகத்தின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு.. அந்தப் புத்தகத்தைவிட அழகான திரைக்கதை அமைத்து காமெடி தூவி... ஹிட்.. :-)

ஆமிர் கான் சொல்லி அடிக்கிற கில்லிங்க,.கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காக மனிதரின் மெனக்கெடல் தெரிகிறது.. கல்லூரி மாணவனாக 40+ ஆமீர் நடித்துள்ளார்.. ஒரு அறிவு தாகம் மிகுந்த மாணவராக அசால்டாக செய்துள்ளார்.. லூசாக ஒரு பாடி லாங்குவேஜ்.. அற்புதம்..

மாதவன்.. தமிழ்ல காணோமேன்னு பாத்த..மனுஷன் இங்க கலக்கி வெச்சுருக்கார்.. அடக்கி வாசிக்க வேண்டிய இடங்கள் நெறயா.. நல்லா செஞ்சு இருக்கிறார்.. ஷர்மான் கலக்கல்.. அதுவும் அவருடைய வீடு வரும் காட்சிகளில் பழைய படங்களை போல்.. அருமை,,

கரீனா கதைக்கும் தேவையில்லை.. காணவும் சகிக்கவில்லை..


ஆமீர்கானுடன் ஒரு மண்ணாங்கட்டி கெமிஸ்ட்ரியும் வேகவில்லை.. (விமர்சனத்தில் ஹீரோயினை திட்டிய முதல் பதிவர் என்னும் பெருமை கிடைக்குமா???)

போமன் ஹிரானி கலக்கல்.. திரைக்கதை அருமை,.. இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கு.. ஆனா..

அட்டுகள்..

*படத்தின் இரண்டாம் பாகத்தில் சில இடங்களில் லைட்டாக தொய்வு.. கரீனா கல்யான மேடையிலிருந்து அனைவரும் பார்க்க ஓடுவது.. அடப்போங்கப்பா...

*இசை மகா மட்டம்.. ஆல் ஈச் வெல் பாடல் பிழைக்கிறது.. பின்னனி எல்லாம் ஒரே பாடலின் ஹம்மிங்.. எஸ் ஏ ராஜ் தோத்தார் போங்க..

ஹிட்டுகள்

*ckமுரளிதரனின் ஒளிப்பதிவு .. வாவ்.. கண்ணுக்குஅவ்ளோ குளுமை,, (தமிழரா??)

*வசனங்களும் காட்சி அமைப்பும் அருமை..

*படத்தில் வைக்கப்படும் நல்லதே நடக்கும் என்னும் உணர்வு.. அதாவது வசூல் ராஜாவின் கட்டிப்பிடி வைத்தியம் போல... (அதன் பிதாமகரின் படைப்பே இது என்பது தெரியாதவர்களுக்காக சொல்வது..) “ALL IZZZ WELL" என்னும் வரியை உபயோகித்து “நடக்கப் போவது நல்லதுக்கே..” என்னும் உணர்வை மெலோங்க செய்து.. ஒரு விதமான திருப்தியாக தியேட்டரை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்,,
(வேலை கிடைக்காமல் ஒரு விதமான மன இருக்கத்தில் இருக்கும் என் நண்பனை இந்தப் படத்தைபார்க்க சொன்னேன்.. படம் பார்த்து விட்டு.. ‘மச்சா..al IZZwelll :-)' ன்னு மெசேஜ் அனுப்பி இருந்தான்... நீங்களும் ட்ரை பண்ணுங்க,,)

*படத்தின் இறுதியில் ஆமீர்கான் பிரசவம் பார்ப்பார்.. அதாவது அவரும் அவரது நண்பர்களும் எதிர்பாராத விதமாக இந்த நிலமைக்கு வந்து விடுவார்கள்.. யப்பா.. அந்தக் காட்சியின் விறுவிறுப்பு.. பத்து புலி உறுமுது பாடலுக்கு சமம்...

இந்த இடுகையை ஏன் எழுதுகிறேன் ???



படிப்பது என்னும் பெரும் சுமையாக இருக்கிறது.. நம்முடைய கல்விக்கூடங்கள் மதிப்பெண்கள் நிறம்பிக் கிடக்கும் குப்பைக்கூளங்கள்... இங்கு புதிதாக சிந்தனைகளுக்கு இடமில்லை.. புத்தகத்தில் இல்லாத வரிகளை எழுதினால் மார்க் இல்லை... மார்க் எடுக்காட்டி மரியாதை இல்லை..

குழந்தைகளின் படிப்புசுமைக்கு எதிராக ”தாரே சமீன் பர்” என்னும் படத்தை எடுத்த ஆமீர்.. அதே கருத்தை இன்னும் வலுவாக இதில் சேர்த்துள்ளார்..

6 வயதுக்கு குறைந்து பென்சிலால் எழுத வைக்கக் கூடாது அப்படி எழுத வைத்தால் பிள்ளைகளின் மனநன்லன் பாதிக்கப்படும் என்பது ஒரு ஆய்வின் முடிவு.. ஆனா இன்றைய நிலையை நினைத்தால்..

நெஞ்சு பொறுக்குதில்லையே..

“சச்சினின் அப்பா நீ பாடகராகு என்று சொல்லி இருந்தால்.. லதாமங்கேஷகரின் அப்பா நீ கிரிக்கெட் விளையாடு என்று சொல்லி இருந்தால்...” -->நச் வசனம்..


“ஜோ பசந்த்.. வோ கரோ.. “--> பிடித்ததை செய்க..


உங்களுக்கு ஹிந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை.. ஆமீரைப் பிடிக்க வேண்டும் என்று கட்டயமில்லை..

“ஏதாவது செய்யனும் பாஸ்” என்று நினைக்கும் கூட்டத்தில் இருந்தால் கண்டிப்பாக 3 இடியட்ஸ் பார்க்கவும் ..:-)