November 27, 2009

(அ)-யோகி

முன் குறிப்பு
***
கதையைப் படிக்க வேறு கடைகளுக்கு செல்லவும்.. இது சும்மா நச்சுன்னு நாலு பத்தில...
****

முதல் நாள் படம் பார்ப்பது ரொம்ப கம்மியாயிடுச்சு இப்பல்லாம்... ஏன்னா பதிவர்கள் விமர்சனம் படிக்காம எதையும் பாக்குறது இல்ல..

இன்னைக்கு வேலைல இருந்து நேரடியா போய்ட்டேன் தியேட்டருக்கு.. படத்த பத்தியும் ஒன்னும் தெரியாது,.. எந்த எதிர்பார்ப்பும் இல்ல...

மனசுக்குள் ஒருகதை இருந்தது.. ஆரம்பமும் அதே மாதிரித்தான் இருந்தது.. ஆனா எப்போ காருக்குள்ள குழந்தை இருந்ததோ அப்பத்தான் நிமிர்த்து உக்காந்தேன்.. டைரக்டர் மேல ஒரு மரியாத வந்தது..

மவனே அதுக்கப்புறம் சும்மா வளச்சு வளச்சு தூங்க வெச்சுட்டானுங்க...

குழந்தை பருவத்தை தொலைத்த முன்னாள்” குழந்தையிடம் இந்நாள் குழந்தை மாட்டிக்கொண்டு அதன் பின் நாமும் அந்தக் குழந்தையும் படும் அவஸ்தை படம்.

அமீர்பாய் பாக்குறாதுக்கு நந்தா சூர்யா மாதிரி இருக்காரு.. நல்ல கதையில கலக்குங்க.

ஸ்னேகன் எனக்கு புடிக்கலீங்க.. ஹீரோயின் .. யாரும் இமேஜ் பார்த்து செய்யத் தயங்கும் வேடம்.. நன்று..

அந்தக் குழந்தைதான் டாப்பு படத்துல..

ஒளிப்பதிவு சூப்பர்.. பின்னணி இசைன்ற பேர்ல ஒரே வயலின் பீட் கடைசி வரைக்கும்.. “புடிச்ச” பாட்டையே புடிக்காத பாட்டா ஆக்கிட்டாய்ங்கடா சாமீ...

சு.சிவா அவர்களே.. இங்க்லிபிஸ் படமோ எந்த அடாசு படமோ.. சுடுங்க.. சுட்டபின் எங்களுக்கு புரியுற மாதிரி எடுங்க.. better luck next time

(அ)-யோகி :-) (போச்சே.. போச்சே.. எங்கைக்காசு போச்சே...)

November 25, 2009

தமன்னாவும்.. சில ஹெச்.ஆர்.களும்...


சில ஹெச்.ஆர்கள்தான் பதிவுக்கான மேட்டர்.. போலாமா??

நான் இதுவரைக்கும் பெரிய CMM 5லெவல் ஹெச்.ஆர். எல்லாம் பார்த்தது இல்லீங்க.. அட்டெண்ட் பண்ணது எல்லாம் சில சுமாரான ஹெச்.ஆர்கள்...

உதாரணமா ஒன்னு சொல்லலாம்.. கெல்லீஸ்ல.. அபிராமிகிட்ட.. ஒரு கம்பேபேபேனி இருக்கு.. அங்கயும் வேல தேடி போனோம் நண்பர்கள் சகிதம்..
கம்பேனி அட்ரெஸ் கண்டுபுடிச்சு போனா அங்க ஒருமளிகை கடை இருக்கு,,, அரே பாபாஜி இது என்ன சோதனைன்னு வானத்த நிமிர்ந்தா...

மூணாவது மாடில கம்பெனிக்கான போர்டு இருக்கு.. பாபா டபுள் க்ரேட்ன்னு சொல்லிட்டு நடைய கட்டினோம்.. மாடி ஏறு வழியில்..

நான் :” மச்சான்... கம்பேபேபேனி அட்டகாசமான எடத்துல இருக்கு

நண்பன்: “ஆமா மச்சான்..”

நான்: இங்கெல்லாம் என்னடா சம்பளம் தரப் போறாங்க.. தம்பி மாச கடைசில உப்பு புளி கீழ கடைல வாங்கிக்கங்கப்பான்னு சொல்வாங்கடா

நண்: அந்த மாமி மெஸ்ல இட்லி சொல்லிட்டு சில்ற நீ கொடுத்துடு ராஜான்னு சொல்வாய்ங்களே அந்த மாதிரியா..

நான்: போற வர்றதுக்கு பஸ்பாஸ் தருவாங்கடா.. அதுக்கு மேல என்ன கேக்குறது..

சிரிப்பை அடக்க முடியவில்லை.. பழைய பாழடைந்த பங்களா மாதிரி.. மோகினி இருக்குமோ அது இதுன்னு கலாய்த்தவாறே 3வது மாடியை அடைந்தோம்..

அங்க போனா அதுக்கு மேல காமெடி.. ஒருத்தன் வெய்டிங்கி இண்டர்வியூக்கு.. நாங்களும் அவனுக்கடுத்து அமர்ந்தோம்.. ஒரு தடுப்பு மாதிரி போட்டிருந்தாங்க.. அதுக்கு உள்ள இருந்து வெளிப்பட்ட பெண் அந்தப் பையனை உள்ளெ அழைத்தது.. ஆனால் அந்தப் பெண்தான் ஹெச்.ஆர்.. கூப்பிடக்கூட அளில்லை.. அட என்னட இதுன்னு நொந்துட்டோம்..

அடுத்து எங்கள் முறை.. நான் உள்ளே போனேன்... செம திமிரா என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு.. உள்ளே போய் 15 நிமிஷம் கதரகதர கேள்வி கேட்டாங்க.. ஒரு மண்ணுக்கும் பதில் தெரியல.. சமாளிக்க கூட முடியல..

எனக்கடுத்து என் நண்பன் முறை.. செத்துட்டான்.. உட்டா போதும்னு ஓடி வந்தோம் அங்கருந்து..

இத ஏன் சொல்றேன்னா.. ஹெச்.ஆர்ங்கிறவங்க எங்க இருந்தாலும் இப்பிடிதான்.. சில பேர் இங்க்லீஷ் பேசுறேன்னு நம்மளவிடமட்டமா பேசி மானத்த வாங்கிக்குவாங்க..

ஒரு கம்பேபேபேனி ஹெச்.ஆர். என் குடும்பத்தை பற்றி மட்டும் கேட்டு விட்டு நல்லா மொக்க போட்டு அனுப்சாங்க... nothin els...

நான் பாத்தவங்கள்ளயே செம கெத்துகளும் உண்டு.. இந்த மாதிரி குடுசைகளில் பார்த்த கெத்துகள் காலத்துக்கும் மறக்காது..

ஹெச்.ஆரை சமாளிக்க என்ன வழி குறிப்பாக புதியவர்கள்..
1* உண்மைய பேசுங்க..
2*நெறயா பேர மீட் பண்ணுங்க.. இன்பர்மேசன் ஸ் வெல்த் தலைவா.. நிறயா அனுபவத்தை சேத்துக்கங்க .. க ல க் க லா ம்.:-)
********************************************************



சரி தமன்னாவுக்கு என்னன்னு கண்ணும் ஜொள்ளுமா கேக்கும் நண்பர்களுக்காக.. இது சீரியஸ் மேட்டர். பகிர்ந்து கொள்ள தோணியது..போன ஞாயித்துக்கிழமை.. சன் டி.வி.யில தமன்னா பேட்டி..

பேட்டி எடுப்பவர் : “நீங்க படத்துல பேசுர டயலாக் எல்லாம் சூப்பர் மேடம்..
தமன்னா ; ஓ.தாங்க் யூ..
பே எ: அதுவும் பரத் உங்கள நீ ஒரு ஒரிஜினல் பீஸ் தெரியுமான்னுகேப்பாரே அதுதான் கலக்கல்..
தம: ஹோ.. ஸோ நைஸ் ஆஃப் யூ..
பே எ : அந்த எடத்துல ஏங்க பீஸ்ன்ற வார்த்த வந்துச்சு..
தம:ஹி ஹி..
பே..எ: நீங்க ஒரிஜினல் பீஸா ??
தம: ஹி ஹி
பே.எ: சொல்லுங்க நீங்க ஒரிஜினல் பீஸா ??
தம: ஆமா.. நான் ஒரு ஒரிஜினல்பீஸ்..
பே.எ: சிரித்தவாறே.. ஏன் அங்க பீஸுன்னு சொல்றாங்க மேடம்..
த்ம. அப்போத் தான் ஒர்ரு கிக்கூ.. no substitute for me .. ha ha...

என்ன கருமம் புடிச்ச பேட்டி இது.. எனக்கு சுத்தமா புடிக்கலைங்க.. மொழி தெரியாத பொண்ணுன்னா என்ன வேணா பேசிட்றதா???

அரே ஹோ பாபாஜிஜிஜிஜி.... :-)

November 21, 2009

நாங்கள்ளாம் அந்தக் காலத்துல...

இந்த வார்த்தைய கேக்காம வளர்ந்த தலைமுறை இருக்க முடியாது.. எப்படிப்பட்ட தலைமுறையினரிடமும் முந்திய தலைமுறை சொல்லும் ஸ்லோகன் இது...

இதே ஸ்லோகன இந்த தலைமுறை வயசானதும் எப்படி உபயோகிக்கும்...??

******************
டீச்சர் : நாங்கள்ளாம் அந்தக் காலத்துல காலெஜ் போயித்தான் கட் அடிப்போம்..
இந்தக் காலத்து பசங்க “வெப் கேம” ஆஃப் பண்ணியே எங்கள கட்
பண்றாய்ங்களே...
******************

அப்பா : நாங்கள்ளாம் அந்தக் காலத்துல WWF,RAW அப்டி டி.வி. கேம்ஸ்தான்
ஆடுவோம்... நீ அந்த ரோஸிய விட்டு நகர மாட்றியேடா.. (ரோஸி
அவர்கள் வளர்க்கும் செல்ல ரோபோ..)
******************

2049 டிசம்பரில் ...

பேரன் : பாட்டி சோறுன்னா என்ன பாட்டி ???
பாட்டி : நான் குழந்தையா இருக்கரச்சே அதான் கண்ணா சாப்டேன்,,,
பேரன் : ஓ.. சோறுன்றது சாப்புட்ற பண்டமா ???

******************

கீக்கீங்....கீக்கீங்.... --- “message received "
"i gt married 2 years bak.. sry ya.. no time.. forgt 2 say..hop u r aliv ..tc bye"

மகன் தந்தைக்காற்றும் மெசேஜ்...

*******************

மிஸ்டர்.பொதுஜனம் : அந்தக் காலத்துல நாங்கள்லாம் தியேட்டர் போயித்தான்
படம் பாப்போம்.. இப்ப என்னடான்னா அவனவனுக்கு
புடிச்ச நேரத்துல அவனவன் வீட்லயே படம் ரிலீஸ்
ஆகுது...
********************

2055 தாத்தாக்கள் : நாங்கள்ளாம் அந்தக் காலத்துல ஒரு “பொண்ணத்தான்” சைட்
அடிப்போம் .. கல்யாணம் பண்ணிப்போம்.. .. இப்ப
என்னடான்னா ...,,,

*********************

(இதோடு பதிவு முடிந்தது.. டிஸ்கி மொக்கைகளை வெட்டிகள் மட்டும் படிக்கவும்..)

டிஸ்கி
இது ஒரு “சரியான” நாள்ங்க..
ஏன்னு கேக்குறவங்க மேலும் படிக்க...

வழக்கத்துக்கு மாறா இன்னைக்கு ஆபீஸ் .. சரின்னு போனா ஒருத்தரும் வரல.. வழக்கத்துக்கு மாறா சரி இன்னைக்கு வேலைதான இல்லா.. சரி.. ஆபிஸ்லயே எதாவது படிக்கலாம்னு நெனச்ச்சா.. என்னோட சிஸ்டம் பூட் ஆகல.. அந்த சிஸ்டத்த சரி பண்லாம்னு உக்காந்தா.. ஒ.எஸ். (இயங்குதளம்) காலி.. அதுக்கு சி.டி. இல்ல..

செம காண்டாயிடுச்சு.. சரின்னு சாப்ட கேண்டீன் போனா சாப்பாடு காலி... சோறில்ல.. வெளில போய் சாப்டுட்டு.. வேற சிஸ்டம்ல சரி இன்னைக்கி பதிவாவது போடுவோம்னு பாத்தா.. NHM இல்ல... அத download ன்னு அமுக்கம்போது கரெண்ட் காலி.. upsலயும் பவர் இல்ல.....

காண்டாயி வீட்டுக்குவந்து .. அடப் போங்கடா. பதிவாவது ஒன்னாவதுன்னு.. புக் படிச்சேன்.. அதுல பருத்தி வீரன் படம் கலைஞர்லன்னு போட்டு இருந்தது.. சரி பாப்போம்ன்னு போட்டா.. டி.வி. எல்லாம் புள்ளி புள்ளியா வந்துச்சு... என்னடான்னு இன்னோரு ரூம்ல இருக்குற டி.விய போட்டா அங்கயும் அதே கதை... கேபிள் டி.விக்கு போன் போட்டா.. போன் போகல.. போன்ல காசில்ல.. சரின்னு கீழ ஓடிபோய் போன்ல காசு போட்டா.. போன் ஆஃப் அயிடுச்சு.. காலைலேர்ந்து சும்மா சுத்திக்கிட்டு இருக்குறதால... சார்ஜ் இல்ல..

சரி பாதி தூரம் வந்துட்டோம்.. முழுதூரமும் போய் கேபிள் ஆபரேட்டர்டயே சொல்லிடலாம்ன்னு போய் சொன்னா.. அவர் ஏதோ கனெக்‌ஷன் இல்லன்னு சொல்லி தேடிட்டு இருக்குறாரு.. டி.வி. நாளைக்குத்தான்...

இவ்ளோ கொடுமைக்கு அப்புறமும்.. சரின்னு கம்ப்யூட்டர் போட்டேன்.. (போடும் போதே உள்ள ஒரே அல்லு...) ஒழுங்கா பூட் ஆயிடுச்சு.. கரெண்டும் போகல... கிபோர்ட் மவுஸ் எல்லாம் ஒர்க் ஆச்சு...

ஹையா ... சரி.. எல்லாம் சரியாயிடுச்சுன்னு சுறுசுறுப்பா bloger உள்ள வந்து.. திருப்பியும் கரெண்ட் போகுதான்னு பாத்து.. ஒன்னும் போகல.. சரின்னு டைப் பண்ண நெனச்சா...

அடப்பாவிகளா... என்ன பதிவுக்கான மேட்டர்னே மறந்து போச்சு இந்த
நொள்ளைல.... :-)

சத்தியமா செம காண்டாயிடுச்சு.. ஏதாவது எழுதியே ஆகனும்டா மவனேன்னு உண்மைலேயே உக்காந்து யோசிச்சு எழுதுனேன்...

வடிவேலு பாணில சொன்னா..
”எல்லாமே கடுப்பேத்துது மை லார்ட்...”

November 12, 2009

எஞ்ஞினியா வா! -- 2

முதல் பகுதி படிக்க இங்கு க்ளிக்கவும்...

எம்.ஜிஆர். அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த எஞ்ஞினியரிங் மேளா ரொம்ப ஜோராக நடக்க ஆரம்பித்தது 90 களின் மத்தியில்.. (இப்பவும்தான்..)

அதுக்கு முன்னாடி கம்யூட்டர் வந்த காலம் குறித்து கொஞ்சம் பார்ப்போம்...

நம்ம ஊரில் கணினி கால் பதித்த காலம் :

சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒருத்தர சந்திக்க நேர்ந்தது.. (தெரியாதவர்களுக்கு சுய தம்பட்டம் -- நான் இங்கதன் வேலை பார்க்கிறேன்) 50 வயதைக் கடந்தவர் என்பது அவரைப் பார்த்ததும் தெரிந்தது.. ம்னுஷன் மொக்க போட போறாருடான்னு நெனச்ச போதே அவர் ஆ”ரம்”பிச்சுட்டாரு...FOX space நல்ல மென் பொருள் அது இதுன்னு.. தெரியாத பழைய மென்பொருள்களின் பேரா சொல்லிக்கிட்டு சும்மா ஸீன் போட்டாரு.. சரின்னு நான் சும்மா சார் அதல்லாம் .net ல நீங்க சொன்ன எல்லாமே இருக்கு ஸார்னு சொன்னேன்... மனுஷன் உடனே தொழில்நுட்ப ரீதியா.net ல ஒரு டவுட்டு கேட்டாரு.. மிரண்டு போய்ட்டேன்.. நேத்து காலெஜ் முடிச்ச ஒருத்தன் வந்துதான் பதில் சொல்லனும்.. சர்வர்ஸ் பத்தி அவருடைய பார்வை.. அவர் தெரிந்து வைத்திருக்கும் வேகம்... அவ்ளோ இளமையா இருந்தது அவரோட கேள்விகள்..

“தலைவா நீங்க யாரு..? பழைய கதையும் சொல்றீங்க.. இன்னைக்கு நடக்குறத பத்தியும் சொல்றீங்க.. எப்பிடி??” நான் கேட்டேன்..

அவர் சிரித்துக் கொண்டே.. “தம்பி நான் 1982 ல வேலக்கி சேந்து 5 வருஷம் ஆயிடுச்சுபா.. அந்த நேரத்துல கம்யூட்டர்னு ஒன்னு வந்துருக்குன்னு சொன்னாங்க.. அதல ஒரு டிப்ளோமா கோர்ஸ் இருக்குன்னு சொன்னாங்க. அப்ப நாங்க 12 பேர் தான் படிக்க சேந்தோம்.. (அட என்னங்க வர்ம கலை மாதிரி சொல்றீங்க..-- இது நான்) அப்போ புக் வரவே பல மாசமச்சு.. அந்த வாத்தியாருக்கும் ஒன்னும் தெரியல.. நாங்களே புக்க படிச்சு படிச்சு கத்துக்கிட்டோம்.. எக்ஸாம் எழுதி பாஸும் ஆயிட்டோம்.. “

“அதுக்கு அப்புறம் ஜாலியா வேலையா ஸார் ??“ -- நான்

“அட போப்பா.. ஏண்டா படிச்சோம்னு ஆயிடுச்சு.. கம்யூட்டர் ஒரு ரூம் ஃபுல்லா இருக்கும். செம சூடாயிடும்பா..”

“கதை உடாதீங்க..”

“நெசமாப்பா.. நான் பொய் சொல்லி என்ன ஆக போகுது சொல்லு.. பேஸிக் ப்ரோகிராம் பண்ணுவோம்.. இன்னைக்கு நீங்க யூஸ் பண்ற கம்யூட்டர் மானிட்டர் இங்க புழக்கத்துக்கு வந்ததெல்லாம் 90 களுக்கு அப்புறம்தான்.. ...............”

(இப்பிடி அவர் சொல்லிய கதைகள் ஏராளாம்.. அத பத்தி தனியாவே சொல்றேன்.. )

இதுல கவனிக்க வேண்டியது ரெண்டு விஷயம்தான்..

1* கம்யூட்டர்ன்னு ஒரு பொருள் அறிமுகமாகும் போது என்ன கெடுபிடி பாத்தீங்களா?? இது அந்த அளவுலேவே இருந்திருந்தா அவ்ளோதான்.. இன்னைக்கு நாமெல்லாம் கம்யூட்டர நோண்டுறது எங்க???

திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த கோட்டையை என்ன நோக்கத்தில் உடைத்தாரோ.. ஆனால் அதன் உருப்படியான மிக நல்ல உபயோகம் கம்யூட்டர் எல்லாரையும் போய் சேந்ததுதான்..

2* கம்யூட்டர் துறையில் நீங்கள் வளர வேண்டும் என நினைத்தால்.. உங்கள் அண்ணான்மார்களைவிட,, அக்காளைவிட.. பக்கத்து வீட்டு US அங்கிள விட 10 மடங்கு உழைப்பு போடணும்...

”கணடதையும் கற்று பண்டிதன் ஆகலாம்ன்னு சொல்வாங்க...” அது இந்தத் துறையில் 100% உண்மை.. அந்த தாத்தா -- ஒரு பண்டிதன்.


இனி படிக்கப் போறவங்களுக்கும் அதான் சொல்ப் போறேன்.. “ஆர்வம்..” அத விட்றாதீங்க.. இன்னும் தேடுங்க..
கம்யூட்டர் வந்த காலத்துல, அய்யோ அத படிக்க மாட்டோம்பான்னு சொல்லி வாழ்க்கையின் பொன்வாசலை தவரவிட்டவர்கள் அதிகம்.. இப்போ கூட நீதி துறையில் முழுவது கணினி மயமாவதை மேல் மட்டத்திலே விரும்பவில்லை என்பார்கள்.. (அய்யோ அரசாங்க ரகசியத்த வெளில சொல்லிட்டேனே..)
இந்தக் காலத்துல ஏண்டா சேர்றோம்ன்னு தெரியாமயே சேந்து நொந்து போறவங்க அதிகம்...

காலத்தின் கோலம்...

அதான் எறங்குற கிணறு எவ்ளோ ஆழம்.. அதுல எப்டியெல்லாம் இருக்கலாம்ன்னு நானும் எறங்கிகிட்டே சொல்றேன்.. சேந்து போவோம்.. (அட யாருப்பா கைப்புள்ள மாதிரி படிக்கிறது)

அடுத்த பதிவுல.. மத்திய காலத்தையும்.. இனிமே சேர்றவங்களுக்கு உருப்படியான யோசனைகளும் தொடரும் நீங்கள் விரும்பினால் (விரும்பாட்டியும் கூட.. ஹி ஹி..)

November 03, 2009

எஞ்ஞினியா வா!!!!


இஞ்ஞினியர்களின் வாழ்க்கை வரலாறு..? மற்றும் நல்ல இஞ்ஞினியராக என்ன செய்வது..??

இஞ்ஞினியர்களின் வாழ்க்கை வரலாறு என்று ஒரே ஒரு இன்ஞி. பற்றி எழுதப்போவதல்ல.. எல்லாரும் கல்யாணம் பண்ணி.. ரெசஷன்ல வேலைக்கு போயின்னு மொக்கையும் இல்ல... ”இஞ்ஞினியர்கள்” -- இந்த துறைக்கு ஏன் இத்தனை மவுசு..?? எப்பிடி வந்தது இந்த பவுசு..?? ஆழத்தைத் தேடி..

தமிழ்நாட்டின் ஏதோ ஒர் தெருவுல போய் நின்னு... “யாராவது எஞ்ஞினியர் இருந்தா வாங்க”ன்னு கத்தி பாருங்க.. கண்டிப்பா காக்கா கூட்டமே தோத்துப் போற அளவுக்கு இந்தக் கூட்டம் வந்து மொய்க்கும்... சாரை சாரையா வந்து நானுந்தான் நானுந்தான்னு நிக்கும்..

உங்க வீட்டு புள்ளையும் படிக்கும்..ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி உங்க கண்ணு முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்து புள்ளைகளும் படிக்கும்...

இவ்வளவு ஏன்.?? நீங்கள் இந்தியாவில் வசிக்கும் தமிழர் என்றால்.. உங்கள் ரத்த பந்தமோ.. நெருங்கிய சொந்தமோ.. இல்லாவிட்டால்.. ஏதாவது தெரிந்த வீட்டு பிள்ளையோ.. கண்டிப்பாக இன்ஞினியரிங் படித்துக் கொண்டிருக்கும்..

இல்லையென்றால்.. உங்களால் எந்த ”இஞ்ஞினிய” முகத்தையும் மேற்கூறிய எந்த வரிகளுடனும் தொடர்பு படுத்த முடியவில்லையென்றால்.. நீங்கள் இந்த இடுகையை படிக்காமல் இருப்பது நலம்...

சரி நாம ஃப்லோவ தொடருவோம்...

1982 க்கு முன்னாடி இஞ்ஞினியர் துறையும் டாக்டர் துறை போலத்தான் இருந்ததாம்.. ஏதோ “ரொம்ப” படிச்ச புள்ளைங்க அவங்களுக்குள்ள சண்ட போட்டு இருக்குற 500--1000 சீட்ட புடிச்சுக்குங்க... அவ்ளோதான்..

ரொம்ப கெத்தா இருந்த துறையாம்.. அதுக்கப்புறம் மவராசன் “எம்.ஜி.ஆர்.” தனியார் கல்லுரிகளுக்கு அனுமதி தந்தாராம்.. (இப்போ தெரியுதா ஏன் தலைவர் படம்ன்னு...) அதுக்கும் பெரிய அளவுள டெல்லில லாபி நடந்ததுன்னு நான் இண்டர்வியூ போனப்ப ஒரு மவராசன் சொன்னப்ல... ஆச்சா.. அதுக்கப்புறம் புற்றீசல் போல காலேஜ் ஆரம்பிக்கப் படவில்லை..

ஆனா இது ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாக தெரிந்ததும்.. சும்மா எல்லா பண முதலை திமிங்கலம் சுறா எல்லாம் இறங்கிடுச்சு... இப்போ இருக்குற நெலமை உடனே வந்துடல.. நாங்களாம் நாய் பாடுபட்டு வேலை தேடுரதுக்கு .. நம்ம அண்ணனங்கெல்லாம் அமெரிக்கால சம்பாதிக்க.. அமெரிக்கால இருந்து ஒருத்தர இந்தியா தொரத்துரதுக்கும்.. இங்க அம்ஜிகரையில ஏதோ ஒரு கம்பெனி காசு புடுங்கி ஏமாத்துறாதுக்கும் தசாவதாரம் கேயாஸ் தியரி மாதிரி ஒரு பட்டம் பூச்சியின் படபடப்பின் தொடர்பு இருக்கு (கன்சல்டன்ஸி என்னும் போலிகள பத்தி வேற சொல்லனும்ங்க.. ஹையோ வேல ஜாஸ்தி ஆகுதே...)

ரொம்ப லென்த்தா போகுதுல்ல.. சரி தொடராக்கிடுவோம்..

“எஞ்ஞினியா வா!!!” பேர் எப்பிடி இருக்கு ?? எத பத்தி எழுத போறேன்னு தெரியுதுல்ல.. நீங்களே ஒரு நல்ல தலைப்பா பின்னூட்டுங்க..

(***இது நான் செவிவழியாக கேட்ட தகவல்களை அச்சேற்றும் முயற்சி.. தவறிருந்தால்.. நான் ஏதையாவது சொல்லாமல் விட்டிருந்தால் நீங்க சொல்லுங்க ..***)

November 01, 2009

உன்னைப் போல் ஒருவன்



”உன்னைப் போல் ஒருவனை “ இரண்டு மாதம் கழித்து போஸ்ட் மார்ட்டம் செய்யும் பதிவல்ல இது..

கிட்டத்தட்ட நான்கு மாதம் கழித்து எழுதுகிறேன்...

ஒன்னுமே தெரியாம பதிவுலகுல வந்து.. கொஞ்சமே கொஞ்சமா சேர்த்தாலும் கெத்தா சில நண்பர்கள் சேர்த்து.. யாருமே படிக்கமாட்றாங்களேன்னு வருந்தி. சூர்யா கதைய எழுதி ரொம்ப கொஞ்சமா (என்ன தமிழ்..)சில நண்பர்கள் பிடிச்சு.. பதிவுலக மார்க்கெட்டிங் கற்றுக்கொண்டு.. யப்பா யப்பா... நெனச்சா ஒரு சினிமா பாடல் போன்ற உணர்வு... :-)

இஞ்ஞினியரிங் காலேஜ் மாணவனாக குப்பை கொட்டிக் கொண்டிருந்த நான்.. படித்து முடித்தது இந்த மே--யில்தான்... 3 மாசம்.. தெனற தெனற வேல தேடி.. கடைசில.. வேல கெடச்சது .. 3i-info tech என்னும் கம்பெனியில... மவனே software எழுதி கலக்க போறோம்டான்னு பாத்தா... என்னுடைய client office "MADRAS HIGH COURT" (சென்னை உயர் நீதி மன்றம்...) (வேலைய பத்தி .. இன்டர்வியூ போன கதைகள அப்புறம் பாப்போம்... எழுதலாமா வேணாமான்னு சொல்லுங்க..)

இப்போ ஆண்டவனோட அருளால வேலைக்கி போய்கிட்டு இருக்கேங்க.. ரெண்டரை மாசமா...

வேல தேடும் போது.. நம்ம தமிழ் நெஞ்சம் அண்ணன்கிட்ட.. சக்கர அண்ணங்கிட்டலாம் சொல்லி வெச்சிருந்தேன்...வேல தேடும் போது வேற எதும் கண்ணுல தெரியல.. காலேஜ் பையனா எத பத்தி கவலையும் இல்லாதப்ப இருந்த கற்பனை ஊற்று.. இந்தக் காலகட்டத்துல வத்திப்போச்சு.. என்னால புதுசா பதிவெல்லாம் எழுத முடியல..

வேலை கெடச்ச அப்புறமும்.. தமிழ் பதிவுலகம் என்னை சில சமயம் தேடும்.. என்னை மெயிலில் தொடர்பு கொண்ட அன்பர்களுக்கு நன்றி.. கடையாக சூர்யா கதைக்கு பின்னூட்டம் போட்ட நண்பருக்கும் இன்ன பிற உள்ளங்களுக்கும் நன்றி...

மாணவனாக இருந்த போது இருந்த வெறி இப்ப இல்ல.. அட என்னப்பா.. 5 மாசத்துக்குள்ள ரொம்ப ஸீன் போட்றன்னு கேட்டா நீங்க பெருசு... இந்த transition பத்தி நம்ம டாக்டர் சுரேஷ் தல விரிவா ஒரு பதிவு எனக்கும் டெடிக்கேட் பண்ணி போடுங்க...

எழுதனும்னு உணர்வு ஒரு மாசமா தோணுனாலும்.. என்ன எழுதறுதுன்னு தோணல... விமர்சனம் எழுதலாம்னு நெனச்சா. .. அவனவன் படம் ரிலிஸாகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடியே கலக்குறாய்ங்க.. சரி நடக்கட்டும்ன்னு வெயிட் பண்ணேன்...

பதிவுலகிலும் நிறைய மாற்றம்.. தொழில்நுட்ப ரீதியாக நிறய சந்தேகங்களை இந்த புது உலகம் எனக்கு தீர்த்தது.. ஒரு படம் ரிலீஸானால் அத பாக்குறதா வேணாமான்னு முடிவு பண்ண உதவியது..

நாமெல்லாம் ஏண்டா எழுதறோம்னு தோணவெச்ச பதிவுகள் நிறைய... நான் பின்னூட்டம் இடாம என்னால முடிஞ்ச அளவு எல்லாத்தையும் படித்துக் கொண்டு தான் இருந்தேன்...

அடுத்து ஏதாவது தோணும் போது எழுதுவோம்... (இதுவரை நடந்த சில முக்கியமான நிகழ்வுகளாஇ என் சக பதிவர்கள் யராவது பின்னூட்டமோ அல்லது பதிவோ போட்டு சொல்லவும்...)

என் ப்ளாக்கின் caption மாதிரி.. “யாருமே இல்லாத யாருக்கு நான் இப்ப டீ ஆத்துறேன்???